tamilnadu

img

அரியலூரில் பொதுப்பாதை மீட்புப் போராட்டம்

அரியலூரில் பொதுப்பாதை மீட்புப் போராட்டம்

பெ. சண்முகம் தலைமையில் திரண்ட பொதுமக்கள்

அரியலூர், செப். 3 - அரியலூரில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தலைமையில் பொதுப்பாதையை மீட்கும் போராட்டம் நடை பெற்றது. இதில், நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். 70 ஆண்டு பயன்பாட்டில் இருந்த பொதுப்பாதை அரியலூர் வாரச் சந்தை அருகில் செட்டி ஏரியை ஒட்டி இருந்த வண்டிப் பாதையை தென்புறம் பகுதி பொதுமக்கள் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பயன்படுத்தி வந்த னர். இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட காவல்துறை குடி யிருப்பு வளாகம் கட்டப்பட்ட நிலையில், அதுவரை பொது மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை, காவல்துறை பயன்பாட்டிற்கு வரு வாய்த்துறையினர் மாற்றம் செய்ததாக கூறப்படுகிறது.  இதனால், ஏற்கெனவே இந்த வண்டிப் பாதையை பயன்படுத்தி வந்த பொது மக்கள், காவலர் குடியிரு ப்புக்கு பின்புறத்தில் நிலம் வைத்துள்ள விவசாயிகள் மற்றும் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அந்தப் பொதுப்பாதையைப் பயன் படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  அதிகாரிகள் அலட்சியத்தால் சிபிஎம் போராட்டம் எனவே, வண்டிப் பாதை யை காவல்துறை பயன்பா ட்டிற்கு கொடுத்ததை ரத்து  செய்து, எப்போதும் போல பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. எனினும், அதிகாரிகள் அலட்சியம் காட்டி வந்தனர். இந்நிலையிலேயே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் பொதுப்பாதையை மீட்கும் போராட்டத்தை குடியிருப்பு வாசிகள் அறிவித்தனர். பேரணி - ஆர்ப்பாட்டமும் அறிவித்தனர். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் போரா ட்டத்திற்கு தலைமையேற்க உள்ளதாக அறிவிக்கப் பட்டிருந்த பின்னணியில், போலீசார் பேச்சுவார்த்தை க்கு அழைத்தனர். மாநிலச் செயலாளர் தலைமையில் காத்திருப்பு அதனையேற்று, அரிய லூர் கோட்டாட்சியர் கோவிந்த ராஜுடன் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைவர் கள் பேச்சுவார்த்தை நடத்தி னர். அப்போது, வண்டிப்பா தையை காவல்துறைக்கு ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்து மீண்டும் பொதுப் பாதையாக மாற்றவேண்டும் என மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தி னார். இந்த பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் உட்பட உயர் அதிகாரிகளைச் சந்திக்கவும் தயாராக இருக் கிறோம். எங்களைப் பொறு த்தவரை, பொதுப்பாதைக் கோரிக்கைக்கு இன்று தீர்வு  கிடைத்தாக வேண்டும். அது வரை அலுவலகத்திலேயே காத்திருக்கவும் தயார் என்றார்.  3 மணி நேரத்திற்கு மேலாகியும் பதிலில்லை கோட்டாட்சியரோ, மாவட்ட ஆட்சியரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.  ஆனால், 3 மணி நேரமாகியும் பதில் எதை யும் அவர் அளிக்காத நிலை யில், கோட்டாட்சியர் அலு வலகத்திலேயே மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைவர் கள் காத்திருக்கும் போராட்ட த்தை நடத்தினர்.  கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகரா ஜன், அரியலூர் மாவட்டச் செயலாளர் எம்.இளங் கோவன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர். மணி வேல், எம். வெங்கடாசலம், பி. துரைசாமி, டி. அம்பிகா, வி. பரமசிவம், ஏ. கந்தசாமி, கே. கிருஷ்ணன், துரை. அருணன் மற்றும் மூத்த தலைவர் ஆர். சிற்றம்பலம், ஒன்றியச் செயலாளர்கள் அ. அருண்பாண்டியன், ஜெ. ராதாகிருஷ்ணன், கு.  அர்ஜுணன், எஸ்பி. சாமி துரை, வேல்முருகன், ஆர். தமிழ்ச்செல்வன், குடி யிருப்பு வாசிகள், பொது மக்கள் என பலரும் போராட்ட த்தில் கலந்து கொண்டனர்.

தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்!

தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்!
பொதுப்பாதை மீட்புப் போராட்டத்தின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
யின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “மக்கள் 70 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்திய பொதுப்பாதையை காவல்துறைக்கு ஒதுக்கீடு செய்தது கண்டிக்கத்தக்கது. இதற்கு காரணமான அதிகாரி
மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். “காவல்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பொதுப்பாதை இடம் தற்போது, அவர்களின் பயன்பாட்டிலும் இல்லாமல்
தான் உள்ளது. எனவே, பாதையை காவல்துறையிடமிருந்து மீட்டு மக்களுக்கான பொதுப்பாதை
யாக வருவாய்த்துறை மாற்ற வேண்டும். இது காவல்துறைக்கும் வருவாய்த்துறை க்கும் இடையே உள்ள பிரச்சனை என்பதால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் மாவட்ட ஆட்சியரும் கலந்து பேசி இப்பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும்” என்றார். “பொதுப் பாதையை மீட்கும் நடவடிக்கையில் எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்!” என்றும் தெரிவித்தார்.

தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்!

பொதுப்பாதை மீட்புப் போராட்டத்தின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “மக்கள் 70 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்திய பொதுப்பாதையை காவல்துறைக்கு ஒதுக்கீடு செய்தது கண்டிக்கத்தக்கது. இதற்கு காரணமான அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். “காவல்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பொதுப்பாதை இடம் தற்போது, அவர்களின் பயன்பாட்டிலும் இல்லாமல் தான் உள்ளது. எனவே, பாதையை காவல்துறையிடமிருந்து மீட்டு மக்களுக்கான பொதுப்பாதை யாக வருவாய்த்துறை மாற்ற வேண்டும். இது காவல்துறைக்கும் வருவாய்த்துறை க்கும் இடையே உள்ள பிரச்சனை என்பதால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் மாவட்ட ஆட்சியரும் கலந்து பேசி இப்பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும்” என்றார். “பொதுப் பாதையை மீட்கும் நடவடிக்கையில் எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்!” என்றும் தெரிவித்தார்.