tamilnadu

img

இரண்டாம் உலகப்போரின் 80-ஆம் ஆண்டு வெற்றிக் கொண்டாட்டம்

இரண்டாம் உலகப்போரின் 80-ஆம் ஆண்டு வெற்றிக் கொண்டாட்டம் மக்கள் சீன ராணுவத்தின் பிரம்மாண்ட அணிவகுப்பு

புடின், ஜின்பிங், கிம் ஜோங் உன் உட்பட 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

பெய்ஜிங், செப். 3 - இரண்டாம் உலகப் போரில் வெற்றிபெற்றதன் 80-ஆவது ஆண்டு தினம் மற்றும் ஜப்பானின் ஆக்கிரமிப்புக்கு எதிரான வெற்றி யை கொண்டாடும் விதமாக சீன மக்கள் குடியரசின் ராணுவம்  பிரம்மாண்ட அணிவகுப்பை நடத்தி யுள்ளது. இரண்டாம் உலகப்போரின் போது சீனாவை ஆக்கிரமிக்க அந்நாட்டின் மீது படையெடுத்த ஜப் பான், சீனாவிடம் தோல்வியுற்றது. தாங்கள் சரணடைவதாக ஜப்பான் 1945 செப்டம்பர் 2 அன்று ஆவணத் தில் கையெழுத்திட்டது. பாசிசத் திற்கு எதிரான இந்த போரில் 35  லட்சம் வீரர்களை இழந்த சீனா,  செப்டம்பர் 3-ஐ ஆண்டு தோறும் வெற்றி தினமாக கடைப்பிடிக்கிறது. அதனடிப்படையில் 80-ஆவது  ஆண்டு வெற்றிக் கொண்டாட்டத் தை, தலைநகர் பெய்ஜிங்கில் ராணுவ அணிவகுப்புடன் சீனா நடத்தியது. அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளும் பங்கேற்பு இந்த ராணுவ அணிவகுப்பில், ரஷ்ய ஜனாதிபதி புடின், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற னர்.  இந்நிகழ்வில் ரஷ்யா, வட கொரியா மட்டுமின்றி இரண்டாம் உலகப் போரில் சீனாவுக்கு ஆதர வளித்த அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா போன்ற நாடு களின் பிரதிநிதிகளும் பங்கேற்றி ருந்தனர். சீன ஜனாதிபதியும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செய லாளர் மற்றும் அந்நாட்டின் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவரு 

மான ஜி ஜின்பிங் ராணுவ அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.  அணிவகுப்பில் ராணுவ பலத்தைக் காட்டிய சீனா 2015-ஆம் ஆண்டிற்குப் பிறகு, சீனா தற்போது தான் ராணுவ அணிவகுப்பை நடத்தியுள்ளது. இந்த அணிவகுப்பில், தனது நாட்டின் ராணுவ பலத்தை சீனா கட்டும் என ஆகஸ்ட் மாத இறுதியில் அந்நாட்டின் ராணுவம் தெரிவித்திருந்தது. அதன்படி அணிவகுப்பில் 10,000-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், 100-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள், நூற்றுக்கணக்கான ராணுவ வாக னங்கள், ஆளில்லா உளவு விமானங்கள், ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், அதி நவீன பீரங்கிகள், ஏவுகணைகள், கவச வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.  மக்களுக்கே இறுதி வெற்றி; உலகிற்கு சீனா செய்தி இரண்டாம் உலகப்போரில் பங்கு வகித்த ராணுவப் பிரிவுகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 80 கொடிகளுடன் ராணுவ வீரர்கள் அடங்கிய குழு முதலில் அணிவகுத்து சென்றது. ஹெலிகாப்டர்கள் ‘நீதி வெல்லும்,’ ‘அமைதி வெல்லும்,’ ‘மக்களே வெல்வார்கள்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளைச் சுமந்துகொண்டு தியானன்மென் சதுக்கத்தின் மீது பறந்து சென்றன.  இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜி ஜின்பிங், அமைதியான உலக வளர்ச்சிக்கு சீனா உறுதியாக செயல்படும் என அறிவித்தார். மேலும் மனிதகுலமானது தற்போது அமைதியா, பேச்சுவார்த்தையா, போரா, அனைவருக்குமான வெற்றியா அல்லது ஒருவருக்கு மட்டுமான வெற்றியா என்ற குழப்பமான தேர்வுக்குள் சென்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.  மேலும் இன்று உலகெங்கிலும் பதற்றமும் நிச்சயமுமற்ற தன்மையும் நிலவிவரும் சூழலில், அமைதியான வளர்ச்சிக்கு சீனா உறுதியாக நிற்கும் என்றார்.