ஜனநாயக விரோத, எதேச்சதிகார தன்மை கொண்ட சட்டங்களை உருவாக்கி, ஆட்சியாளர் கள் இந்தச் சட்டங்களை மனித உரிமைக்கு எதிராக பயன்படுத்தும் போது, அதை தடுத்து நிறுத்தி நிவாரணம் அளிக்க வேண்டிய பெரும் பொறுப்பு நீதித்துறைக்கு உண்டு. ஆனால் சில சமயங்களில் ஆட்சியாளர்களின் அடக்கு முறை செயல்களுக்கு தோதாக நீதித்துறையின் அணுகுமுறையும் அமைவது கவலைக்குரிய ஒன்றாகும்.
உதாரணமாக உமர் காலித், ஹர்ஜீன் இமாம் உள்ளிட்ட 10 பேரின் ஜாமீன் மனுவை தில்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தில்லியில் மத வன்முறையை தூண்ட முயன்றதாக 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் இவர்கள் கைது செய் யப்பட்டனர். இவர்கள் மீது உபா சட்டம் பாய்ந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் எவ்வித விசாரணையுமின்றி சிறையில் அடைக் கப்பட்டுள்ளனர். அவர்களது ஜாமீன் மனுக்கள் இதுவரை ஐந்து முறை நிராகரிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் மீது இதுவரை குற்றச்சாட்டு எதுவும் பதியப்படவில்லை. விசாரணை துவங்க வில்லை. ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது எந்த விதத்தில் நியாயம்? இதில் குறைந்தபட்ச நீதியா வது பின்பற்றப்படுகிறதா என்பதை நீதித்துறை பரிசீலிக்க வேண்டும்.
இவர்கள் மீது குற்றச்சாட்டு கூட பதியப்படாத நிலையில் தில்லியில் மத கலவரத்திற்கு காரண மாக அமைந்த கபில் மிஷ்ரா, அனுராக் தாக்குர் போன்றவர்கள் எந்தவிதமான விசாரணையு மில்லாமல் வெளியில் திரிகின்றனர்.
இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரக்யாசிங் தாக்குர், கர்னல் பிரசாத் புரோகித் உள்ளிட்டோர் எவ்வித தண்டனை யுமில்லாமல் விடுவிக்கப்பட்டுவிட்டனர். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட யாரும் ஒரு நிமிடம் கூட சிறையில் இல்லை. அந்த வழக்கு நீர்த்துப் போகச் செய்யப்பட்டு அனைவரும் விடுவிக்கப்பட்டு விட்டனர்.
குஜராத்தில் சிறுபான்மை இஸ்லாமிய மக்களுக்கு எதிராக கோரத்தாண்டவமாடிய பலரும், விடுதலை செய்யப்பட்டது மட்டுமின்றி, ‘வீரத் தியாகிகளாகவும்’ மாற்றப்பட்டுவிட்டனர்.
மறுபுறத்தில் பீமா கோரேகான் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்டான்சுவாமி கடைசி வரை ஜாமீன் வழங்கப்படாமல் சிறையிலேயே மாண்டு விட்டார். இந்த வழக்கில் கைது செய்யப் பட்டவர்கள் மனிதாபிமானமின்றி நடத்தப்பட்ட னர். ஸ்டான்சுவாமிக்கு உறிஞ்சு குழாய் கொண்ட குவளை, நல்லஹாவிற்கு மூக்குக் கண்ணாடி கூட மறுக்கப்பட்டது. தற்போது உமர் காலித் உள்ளிட்ட வர்களின் ஜாமீன் மனு மறுக்கப்பட்டுவிட்டது இந்திய நீதித்துறைக்கு பெருமை சேர்க்காது. இந்த வழக்குகளில் மனித உரிமையும் தண்டிக்கப் படுகிறது என்பதுதான் உண்மை.