புதுதில்லி, செப். 4 - கடந்த 2015 ஜனவரி 9-ஆம் தேதிக்கு முன்பு உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள், சட்டப் பூர்வமாக தங்குவதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. இலங்கை உள்நாட்டுப் போரின் போது, அதிகளாக வந்து நீண்டகா லம் இந்தியாவிலேயே தங்கியிருப்ப வர்கள், மீண்டும் தங்களின் தாய் நாட்டுக்குச் செல்ல விரும்பினால், அதற்கான ஏற்பாடுகளை இந்திய ஒன்றிய அரசு செய்துதர வேண்டும். அதேபோல இலங்கைக்குத் திரும்பிச் செல்லாமல் இந்தியா விலேயே தொடர்ந்து வசிக்க விரும்புவோருக்கு குடியுரிமை அளித்து, சட்டப்பூர்வ இந்திய குடி மக்களாக நடத்த வேண்டும் என்பது அரசியல் கட்சிகளின் கோரிக்கை யாக உள்ளது. இந்நிலையில், 2015 ஜனவரி 9.ஆம் தேதிக்கு முன்பு உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இல ங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அண்மையில் அமல்படுத்தப் பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டி னர் சட்டத்தின் கீழ் உள்ள தண்ட னை விதிகளில் இருந்து இலங்கை தமிழர்களுக்கு ஒன்றிய அரசு விலக்கு அளித்துள்ளது. இந்த புதிய நடவடிக்கையின் மூலம், உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவிற்குள் நுழைந்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிப்பதற்கு வகைசெய்யும் புதிய குடிவரவு சட்ட வரம்புக்குள் இலங்கைத் தமிழர்கள் இனி வரமாட்டார்கள் என கூறப்படுகிறது. முன்னதாக, 2015 டிசம்பர் 16 அன்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒரு நிர்வாக உத்தர வை வெளியிட்டது. அதில், 2015 ஜனவரி 9-க்கு முன்னர் வந்த இலங்கை அகதிகள், தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்ப விரும்பி னால், அவர்களுக்கான விசா கட்டணம் மற்றும் அதிக நாட்கள் தங்கியதற்கான அபராதம் தள்ளு படி செய்யப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது. அதேபோல, செப்டம்பர் 2 அன்று ஒன்றிய உள்துறை அமைச்ச கம் வெளியிட்ட மற்றொரு உத்தர வில், மதரீதியான துன்புறுத்தலி லிருந்து பாதுகாத்துக்கொள்வ தற்காக, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து 2024 டிசம்பர் 31 வரை இந்தியாவிற்கு வந்த இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் பாஸ்போர்ட் அல்லது பிற பயண ஆவணங்கள் இல்லாமல் நாட்டிலேயே தங்க அனுமதிக்கப்படுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டது. இந்த பட்டி யலில் முஸ்லிம்கள் சேர்க்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.