ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்
லெபனானில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஐ.நா. அவையின் அமைதிப்படையினர் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. லெபனானை ஆக்கிரமிக்க அந்நாட்டின் மீது இஸ்ரேல் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அமைதிப் படையினர் இருந்த பகுதியில் திட்டமிட்டு கையெறி குண்டுகளை வீசித் தாக்கியுள்ளது. அமைதிப்படையினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது முதல் முறையல்ல. ஹிஸ்புல்லாவுடனான போரின்போது அவர்கள் மீது ஏற்கெனவே தாக்குதல் நடத்தியுள்ளது.
ஆப்கனுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பியது இந்தியா
நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு 21 டன் நிவாரணப் பொ ருள்களை இந்தியா வழங்கியுள்ளது. ஆகஸ்ட் 31 ஞாயிற்றுக்கிழமையன்று ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 1,400-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். 2,500 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வேண்டி அந்நாட்டு அரசுகோரிக்கை விடுத்திருந்த நிலையில் ‘அத்தியாவசி யமான மருந்துகள், சக்கர நாற்காலிகள்,டென்ட்கள், போர்வைகள் என இந்தியா சார்பில் நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
நைஜீரியாவில் படகு கவிழ்ந்து 60 பேர் பலி
நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். சிறிய படகில் சுமார் 100 பயணிகள் பயணித்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தெரிவிக்கப்படுள்ளது. இந்த விபத்தில் 10 க்கும் மேற்பட்ட நபர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலர் மிகுந்த கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி நடை பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேதன்யாகுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ராணுவ வீரரின் வாகனத்திற்கு தீ
இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ராணுவ வீரரின் வாகனத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். ஹமாஸ் வசம் உள்ள பணயக் கைதிகளை மீட்க நேதன்யாகு முயற்சிக்காததால் இஸ்ரேலில் அவருக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றது. இந்நிலையில் ஜெருசலேமில் ஆக்கிரமித்து குடியேறியுள்ள இஸ்ரேல் மக்கள் சிலர் நேதன்யாகுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ராணுவ வீரர் ஒருவரின் வாகனத்திற்கு தீவைத்துள்ளனர்.