games

img

விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் காலிறுதியில் அனீஸ்மோவா

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும்,  144ஆவது அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது நடுக்கட்டத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில், இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 4ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசை யில் 8ஆவது இடத்தில் உள்ள முன்னணி நட்சத்திர வீராங்கனை அமெரிக்காவின் அனீஸ்மோவா, தரவரிசையில் 18ஆவது இடத்தில் உள்ள பிரேசிலின் ஹதாத் மாயாவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப் படுத்திய அனீஸ்மோவா 6-0, 6-3 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். சின்னர் அபாரம் ஆடவர் ஒற்றையர் பிரிவு 4ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் முத லிடத்தில் உள்ள இத்தாலியின் சின்னர்,  தரவரிசையில் 23ஆவது இடத்தில் உள்ள கஜகஸ்தானின் பப்ளிக்கை எதிர் கொண்டார். பெரியளவில் போராட்டம் இல்லாமல் விளையாடிய சின்னர் 6-1, 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி  பெற்றார். இதே பிரிவின் மற்றொரு 4ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரி சையில் 10ஆவது இடத்தில் உள்ள இத்தாலியின் முஸ்ஸெட்டி 6-3, 6-0,  6-1 என்ற செட் கணக்கில் தரவரிசை யில் இல்லாத ஸ்பெயினின் முனாரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும்,  

144ஆவது அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது நடுக்கட்டத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில், இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 4ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசை யில் 8ஆவது இடத்தில் உள்ள முன்னணி நட்சத்திர வீராங்கனை அமெரிக்காவின் அனீஸ்மோவா, தரவரிசையில் 18ஆவது இடத்தில் உள்ள பிரேசிலின் ஹதாத் மாயாவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப் படுத்திய அனீஸ்மோவா 6-0, 6-3 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். சின்னர் அபாரம் ஆடவர் ஒற்றையர் பிரிவு 4ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் முத லிடத்தில் உள்ள இத்தாலியின் சின்னர்,  தரவரிசையில் 23ஆவது இடத்தில் உள்ள கஜகஸ்தானின் பப்ளிக்கை எதிர் கொண்டார். பெரியளவில் போராட்டம் இல்லாமல் விளையாடிய சின்னர் 6-1, 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி  பெற்றார். இதே பிரிவின் மற்றொரு 4ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரி சையில் 10ஆவது இடத்தில் உள்ள இத்தாலியின் முஸ்ஸெட்டி 6-3, 6-0,  6-1 என்ற செட் கணக்கில் தரவரிசை யில் இல்லாத ஸ்பெயினின் முனாரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

ஆசியக் கோப்பை ஹாக்கி இன்று முதல் சூப்பர் 4 சுற்றுகள் தொடக்கம்

12ஆவது சீசன் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி  தொடர் பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் உள்ள ஸ்போர்ட்ஸ் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்று வரு கிறது. மொத்தம் 8 நாடுகள் பங்கேற்று ள்ள இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங் கள் திங்களன்று நிறைவு பெற்றன. லீக் சுற்று முடிவில் இந்தியா, தென் கொரியா, சீனா, மலேசியா ஆகிய 4  நாடுகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்நிலையில், புதன்கிழ மை அன்று சூப்பர் 4 சுற்றுகள் தொடங்கு கின்றன. புதன்கிழமை அன்று நடை பெறும் 2ஆவது சூப்பர் சுற்று ஆட்டத்தில் இந்தியா - தென் கொரியா  அணிகள் மோதுகின்றன. முதல் ஆட்டத் தில் மலேசியா - சீனா நாடுகள் பலப் பரீட்சை நடத்துகின்றன. சூப்பர் 4 சுற்று புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிக்கு முன்னேறும். இறுதிப் போட்டி செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கிரிக்கெட்டில் ஆசிப் அலி ஓய்வு

பாகிஸ்தான் ஆடவர் கிரிக்கெட் அணியின் பேட்டர் ஆசிப் அலி (33), சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார். 2018ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமான ஆசிப் அலி 58 டி-20 (577 ரன்கள்) மற்றும் 21 ஒருநாள் (382 ரன்கள்) போட்டிகளில் விளையாடியுள்ளார். கடைசியாக 2023ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி க்காக விளையாடினார். அதன்பின் அணியில் அவர் இடம் பெறவில்லை. இத்த கைய சூழலில் திடீரென ஆசிப் அலி ஓய்வை அறி வித்துள்ளார். இருப்பி னும் பாகிஸ்தான் உள்நா ட்டு போட்டிகளில் தொட ர்ந்து விளையாடுவேன் என அவர் தெரி வித்துள்ளார். ஸ்டார்க் : முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பந்துவீச்சா ளரான மிட்செல் ஸ்டார்க் சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திங்களன்று அறி வித்தார். 2027 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தவுள்ளதால் இம்முடி வை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஸ்டார்க் 65 சர்வதேச டி-20 போட்டிகளில் விளையாடி 79 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.