games

img

விளையாட்டு

தொடங்கியது புரோ கபடி 2ஆவது லீக் ஆட்டத்திலும் வெற்றியை ருசிக்குமா தமிழ் தலைவாஸ்?

உலகின் முதன்மையான கபடி லீக் தொடரான புரோ கபடி லீக் தொடரின் 12ஆவது சீசன் வெள்ளிக்கிழமை அன்று தொடங்கி யது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் தற்போது முதற்கட்ட லீக் ஆட்டங்கள் நடைபெற்று வரு கிறது. இந்நிலையில், விடுமுறை நாளான ஞாயிறன்று 2 ஆட்டங்கள் நடைபெறு கிறது. முதல் லீக் ஆட்டத்தில் தமிழ் தலை வாஸ் - மும்பை அணிகளும் (5ஆவது லீக்), 2ஆவது லீக் ஆட்டத்தில் ஹரி யானா - பெங்கால் அணிகளும் (6ஆவது லீக்) பலப்பரீட்சை நடத்து கின்றன. இந்த இரண்டு ஆட்டங்க ளும் தெலுங்கானா மாநிலம் ஹைதரா பாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதா னத்தில் நடைபெற உள்ளது. தமிழ் தலைவாஸ் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது என்பது குறிப் பிடத்தக்கது.

அமெரிக்க ஓபன் டென்னிஸ்  ஆண்ட்ரீவா, நவர்ரோ அதிர்ச்சி தோல்வி

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும், 144ஆவது அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் தற்போது தொடக்கச் சுற்று ஆட்டங் கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்திய நேரப்படி சனிக்கிழமை அன்று அதிகாலை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 4ஆவது இடத்தில் உள்ள ரஷ்யாவின் ஆண்ட்ரீவா, தரவரிசையில் இல்லாத அமெரிக்காவின் டவுன்சென்டை எதிர்கொண்டார். யாரும் எதிர்பாராத வகையில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய டவுன்சென்ட் 7-5, 6-2 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று, 4ஆவது சுற்றுக்கு முன்னேறினார். ஆண்ட்ரீவா அதிர்ச்சி தோல்வியுடன் வெளியேறினார். இதே பிரிவின் மற்றொரு 3ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 10ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் நவர்ரோவை, தரவரிசையில் இல்லாத முன்னணி வீராங்க னையான செக்குடியரசின் கிரெஜ்சிகோவா 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 4ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றார். அதே போல உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சபலென்காவும் 4ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.   ஜோகோவிச் அபாரம் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3ஆவது சுற்று ஆட்டத்தில் தர வரிசையில் 7ஆவது இடத்தில் உள்ள முன்னணி நட்சத்தி ரம் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், தரவரிசையில் இல்லாத பிரிட்டனின் நோரியை 6-4, 6-7 (4-7), 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 4ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றார். மேலும் அமெரிக்காவின் பிரிட்ஜ், ஜெர்மனியின் ஸ்ட்ரப், செக்குடியரசின் மசாக் உள்ளிட்டோரும் 4ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேறினார் ராகுல் டிராவிட்

இந்திய அணியின் தலைமை பயிற்சி யாளர் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், 2025ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் ராகுல் டிராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். போட்டிக்கு முன்னதாக அவ ருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இருந்த போதிலும் லீல் சேரில் அமர்ந்தவாறு பணியாற்றி னார். இந்நிலையில், ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் விலகியுள்ளார். இதை ராஜஸ்தான் அணியும் உறுதி செய்துள் ளது. ராகுல் டிராவிட்டுக்கு ராஜஸ்தான் அணியு டன் வீரர், பயிற்சியாளர் என்ற வகையில் நீண்ட கால உறவு இருந்து வந்த நிலையில், தற்போது அந்த அணி உடனான உறவு முடிவுக்கு வருகிறது.