court

img

ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் - உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!

ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தொடரப்பட்ட ஒரு வழக்கின் விசாரணையில், ஆசிரியர்கள் பணியில் சேர, தொடர, அல்லது பதவி உயர்வு பெற, ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறுதல் அவசியம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற, TET தேர்வில் தகுதி பெற வேண்டும். TET தேர்வு எழுத விரும்பாதோர், வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.