court

img

ரிலையன்ஸ் அறக்கட்டளையின் வந்தாரா விலங்கியல் மையம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ரிலையன்ஸ் அறக்கட்டளை நடத்தும் வந்தாரா விலங்கியல் மையம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
வந்தாரா விலங்கியல் மையத்தை ரிலையன்ஸ் பவுண்டேஷன் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சார்பில் ஆனந்த் அம்பானி நடத்துகின்றார். 2024ஆம் ஆண்டு பிரதமர் மோடி இதனை தொடங்கி வைத்தார். இந்த மையத்தில் 43 வகை உயிரினங்கள் மற்றும் 2000 வனவிலங்குகள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த விலங்கியல் மையத்தில் வெளிநாடு மற்றும் உள்நாட்டில் இருந்து சட்ட விரோதமாக விலங்குகளை கொண்டு வந்துள்ளதாக தொடரப்பட்ட பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி செல்லமேஷ்வர் தலைமையில் உச்சநீதிமன்றம் சிறப்பு குழு அமைத்துள்ளது.
மேலும் வருகின்ற செப்டம்பர் 12ஆம் தேதி இக்குழு விசாரணை அறிக்கையை சமர்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது.