மும்பை:
மகாராஷ்டிராவை சேர்ந்த 39 வயது நபர், கடந்த 2016-ஆம் ஆண்டு12 வயது சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், குற்றவாளிக்கு போக்ஸோ சட்டம் மற்றும் ஐபிசி பிரிவு 354-இன்கீழ் மூன்று ஆண்டுகள் சிறைத்தண் டனை விதித்தது.
ஆனால், சம்பந்தப்பட்ட குற்றவாளி, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா கனேடிவாலா, “பாலியல் நோக்கத்துடன் ஒருவரை தோலுடன் தோல் தொடர்பு கொண்டால் மட்டுமே அது பாலியல் வன்முறை; விருப்பம் இல்லாத ஒருவரை வெறுமனே ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் தொந்தரவு கொடுத்தால் அது பாலியல் வன்முறைக்கு கீழ் வராது; ஆடையின் மேல் அத்துமீறித் தடவுவது பாலியல் வன்முறை அல்லது அத்துமீறலில்வராது” என்று சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கினார். நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் தலையிட்டு தற்போது நிறுத்தி வைத் துள்ளது.இந்நிலையில், குழந்தைகள் வன்முறை தொடர்பான மற்றொரு வழக்கிலும் நீதிபதி புஷ்பா கனேடிவாலா, சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியுள்ளார்.
அதாவது, இந்த புதிய வழக்கில், ஒருவர் சிறுமியின் கைகளைப் பிடிப்பதும், பேண்ட் ஜிப்பை திறப்பதும் போக்சோ சட்டத்தின் கீழான பாலியல்குற்றத்தில் வராது என்று தீர்ப்பளித் துள்ளார்.ஐந்து வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வழக்கில் 50 வயது நபருக்குபோக்சோ சட்டத்தின் கீழ் ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துமாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில், அதனை மாற்றி,இது வெறும் பாலியல் துன்புறுத்தல் தான் என்று நீதிபதி புஷ்பா கனேடிவாலா கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கொடுத்த புகாரில், “தான் பார்த்தபோது 50 வயது முதியவர், தனது மகளின் கைகளைப் பிடித்திருந்தார், அப்போதுஅந்த நபரின் பேண்ட் ஜிப் திறந்திருந்தது” என்று மட்டுமே குறிப்பிட்டுள் ளார். அதேபோல சிறுமியும் தனதுவாக்குமூலத்தில், “குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை படுக்கைக்கு அழைத் தார்” என்றே வாக்குமூலம் அளித்துள் ளார். எனவே, இவற்றை வைத்துப் பார்க்கும்போது சிறுமிக்கு நேர்ந்தது, பாலியல் துன்புறுத்தல்தானே தவிர, பாலியல் வன்கொடுமை ஆகாது என்று குறிப்பிட்டுள்ளார்.போக்சோ சட்டம் பிரிவு 8 மற்றும் 10-இன் கீழ் 5 முதல் 7 ஆண்டுகள் வரைசிறைத்தண்டனை கிடைக்க வேண்டியதை, நீதிபதி புஷ்பா, பாலியல் துன்புறுத்தல் என்ற பிரிவு 12-க்கு மாற்றி, 3 ஆண்டு மட்டுமே சிறைத்தண்டனை கிடைக்க வழி செய்துள்ளார்.