இன்டெல் நிறுவனம், அமெரிக்காவில் உள்ள பல்வேறு மாகாணங்களில் பணிபுரியும் அதன் ஊழியர்கள் சுமார் 5,500 பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
இன்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கலிஃபோர்னியா, ஓரிகான், அரிசோனா ஆகிய மாகணங்களில் உள்ள அதன் அலுவலகங்களில் உள்ள 5,500 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது. கலிஃபோனியாவில் 1,935 ஊழியர்களையும், ஓரிகானில் 2,932 ஊழியர்களையும், அரிசோனாவில் 696 ஊழியர்களையும் பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தில் செலவுகளை குறைக்கவே, அதன் ஊழியர்கள் 20% பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தலைமை நிர்வாக அதிகாரி லிப்-பு டான் தெரிவித்துள்ளார்.
அண்மையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனம், அதன் 9,100 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.