articles

img

உணவு மானியத்தில் 73 ஆயிரம் கோடி ரூபாய் குறைப்பு ஒன்றிய அரசின் பதிலில் அதிர்ச்சித் தகவல்

உணவு மானியத்தில் 73 ஆயிரம் கோடி ரூபாய் குறைப்பு  

ஒன்றிய அரசின் பதிலில் அதிர்ச்சித் தகவல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் மத்திய நுகர்வோர் விவ காரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சரிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஸ்ரீமதி நிமுபென் ஜெயந்தி பாய் பம்பானியா, கடந்த மூன்று நிதியாண்டுகளில் பொதுவிநியோக அமைப்புக்கான உணவுப்பொருள் கொள்முதலுக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் விவரங்களை வெளியிட்டுள்ளார். அமைச்சர் அளித்த பதிலின்படி, 2022-23 நிதியாண்டில் உணவுக் கழகத்துக்கு 2,00,219.20 கோடி ரூபாயும், பரவலாக்கப்பட்ட கொள்முதல் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு 72,282.50 கோடி ரூபாயும் என மொத்தம் 2,72,501.70 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 2023-24ல் இது 2,11,393.85 கோடி ரூபாயாகவும், 2024-25ல் 1,99, 500 கோடி ரூபாயாக வும் குறைந்துள்ளது. உணவுக் கழகத்துக்கு மட்டும் 2022-23ல் 2,00,219.20 கோடி ரூபாய் வழங்கப் பட்டது. ஆனால் 2023-24ல் இது 1,39,661.03 கோடி ரூபாயாகவும், 2024-25ல் 1,29,089.40 கோடி ரூபாயாகவும் கடுமையாக குறைக்கப் பட்டுள்ளது. பரவலாக்கப்பட்ட கொள்முதல் திட்டத்தின் கீழ் மாநிலங் களுக்கான ஒதுக்கீடும் 72,282.50 கோடியிலிருந்து 70,410.60 கோடியாக குறைந்துள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் ஒன்றிய  அரசின் மக்கள் விரோத கொள்கையை தெளிவாக பிரதிபலிக்கின்றன என  சச்சிதானந்தம் எம்.பி., விமர்சித் துள்ளார். “கடந்த மூன்று ஆண்டு களில் உணவு மானியத்தில் மொத்தம் 73 ஆயிரம் கோடி ரூபாய் குறைக்கப் பட்டுள்ளது. இது ஏழை, எளிய மக்களின் உணவுப் பாதுகாப்பை கடுமையாக பாதிக்கும் அளவுக்கு உள்ளது. பணவீக்கம் அதிகரித்து, உணவுப் பொருள் விலைகள் வானத்தை முட்டும் நேரத்தில், பொதுவிநியோக அமைப்புக்கான ஒதுக்கீட்டை குறைப்பது மக்களுக்கு எதிரான நடவடிக்கை யாகும். இது கோடிக்கணக்கான ஏழைக் குடும்பங்களின் அடிப்படை உணவுத் தேவையை கேள்விக்குறியாக்குகிறது. ஒன்றிய அரசு பெருநிறுவன நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்து, மக்கள் நலனைப் புறக்கணிக்கும் கொள்கையை பின்பற்றுவது கண்ட னத்துக்குரியது” என்று அவர் கூறி யுள்ளார்