articles

img

அமெரிக்காவால் வெல்ல முடியாத போர் இது! - பேரா.விஜய் பிரசாத்

அமெரிக்காவால் வெல்ல முடியாத போர் இது!

உலக ஏகாதிபத்தி யத்தின் மேலாதிக்கப் பசிக்கு எல்லைகளே கிடையாது. தங்கள் காலடியில் பணிய மறுக்கும் நாடுகளின் இறை யாண்மையை நசுக்குவது அமெரிக்காவின் நீண்டகால வாடிக்கையாகிவிட்டது. தற்போது, புதிதாக அமைக்கப்பட்ட ‘அமைதி வாரியம்’ (Board of Peace) என்ற பெயரில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஒரு புதிய போரைத் தொடங்கியுள்ளன. 2026 பிப்ரவரி 28 அதிகாலை யில், ஈரானின் பல்வேறு பகுதிகள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்கள் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக, ஹோர்மோஸ் கான் மாகாணத்தின் மினாப் பகுதியில் உள்ள  ஒரு சிறுமியர் தொடக்கப் பள்ளி இந்தத் தாக்கு தலுக்கு இரையாகியுள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட பிஞ்சு உயிர்கள் கொல்லப்பட்டுள்ளன. ஈரான் உயர் தலைவர் காமேனி உட்பட ஒட்டு மொத்தமாக நாடு முழுவதும் இதுவரை 201 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின் றன. பலிகள் மேலும் தொடர்கின்றன. ஒரு வரலாற்றுப் போர் 2026 பிப்ரவரி 28 அன்று நடந்த இந்தத் தாக்கு தல் ஈரானுக்கு எதிரான ஏதோ ஒரு திடீர் நடவடிக்கை அல்ல.

கடந்த பல பத்தாண்டுகளாகவே அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது ஒரு தொடர்ச்சியான போரை நடத்தி வருகின்றன. இது  சில நேரங்களில் நேரடி ராணுவத் தாக்குதலாக வும் (2025 ஜூன் மாதத் தாக்குதல் போல), பல நேரங்களில் பொருளாதாரத் தடைகள் மூலமான மறைமுகப் போராகவும் (1996 முதல் தொடரும் தடைகள்) இருந்து வருகிறது. அமெரிக்காவிற்கோ அல்லது இஸ்ரேலுக்கோ ஐக்கிய நாடுகள் சபை சாசனத்தின் மீது எவ்வித மதிப்பும் இல்லை. அதன் விதி 2-ஐ இவை தொடர்ந்து மீறி வருகின்றன. ஆனால், ஐநா பாது காப்பு கவுன்சிலில் இவர்களுக்கு எதிராக எந்தக் கண்டனமும் தெரிவிக்கப்படுவதில்லை.

கடந்த பல பத்தாண்டுகளாக, ஈரானின் அரசியலைப் பயங்கரவாதமாகவும், அதன் அரசாங்கத்தைச் சர்வாதிகார அமைப்பாகவும் உலக அரங்கில் இவை சித்தரித்து வருகின்றன. ஒரு நாட்டின் அரசாங்கத்தைக் கவிழ்க்க முயல்வது சர்வதேச சட்டப்படி குற்றம் என்றாலும், டெஹ்ரானில் ஆட்சி  மாற்றத்தைக் கொண்டுவருவது ‘சட்டப்பூர்வ மானது’ என்ற மாயையை இவை உலக நாடுகள் மத்தியில் உருவாக்கியுள்ளன. டொனால்டு டிரம்ப்பின் மேலாதிக்க வெறி அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பிற்கு நீண்ட காலப் போர்களை நடத்தும் ஆர்வம் இல்லை. அவர் எப்போதும் உடனடி வெற்றிகளை யும், உலகச் செய்திகளில் தலைப்புச் செய்திகளாக வரும்படியான அதிரடி நடவடிக்கைகளையுமே விரும்புகிறார். 2026 ஜனவரி 3-இல் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கடத்தி யதும், ஜனவரி 30-இல் கியூபாவிற்கு எண்ணெய் விற்பதைத் தடுத்ததும் டிரம்ப்பின் இத்தகைய மனநிலைக்குச் சான்றுகள். ஈரானிலும் இதேபோன்ற ஒரு முடிவை அவர் எதிர்பார்த்தார். ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனி அல்லது ஜனாதிபதி  மசூத் பெசெஷ்கியான் ஆகியோரை படுகொலை செய்வதே இந்தத் தாக்குதலின் முக்கிய நோக்க மாக இருந்தது.

அதன்படி இந்தத் தாக்குதலில் ஈரானின் உயர் தலைவர் கொல்லப்பட்டுள்ளார். இருப்பினும், டொனால்டு டிரம்ப் எதிர்பார்த்த அந்த உடனடி ‘ஆட்சி மாற்றம்’ நிகழவில்லை. 2025 ஜூன் தாக்குதலில் ஈரானின் அணுசக்தித் திட்டத்தை அழிக்க முடியாததைப் போலவே, இந்த 2026 பிப்ரவரி தாக்குதலும் ஈரானின் அரசியல் கட்டமைப்பைச் சிதைக்க முடியவில்லை. ‘எதிர்ப்பின் அச்சு’ சிதைப்பும் ராணுவச் சூழ்ச்சிகளும் ஈரானுக்கு எதிரான தற்போதைய ராணுவ நடவடிக்கை 2020 ஜனவரியில் ஜெனரல் காசிம் சுலைமானியின் படுகொலையுடன் தொடங்கியது எனலாம். ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தலைவராக இருந்த அவர், ‘எதிர்ப்பின் அச்சு’ (Axis of Resistance) என்ற ஈரானின் முதல் தற்காப்பு வளையத்தை உருவாக்கியவர். அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ ஈரானைத் தாக்க முயன்றால், ஹிஸ்புல்லா (லெபனான்) முதல் அன்சர் அல்லா (ஏமன்) வரையிலான நட்பு சக்திகள் பதிலடி கொடுக்கும் என்பதே இதன் அடிப்படை.

சுலைமானியின் மரணத்திற்குப் பிறகு, வரிசையாக நடந்த நிகழ்வுகள் இந்த பாதுகாப்பு வளையத்தைச் சிதைத்தன. பாலஸ்தீனத்தில் ஹமாஸை பலவீனப்படுத்தியது, லெபனானில் சையத் ஹசன் நஸ்ரல்லாவை (2024 செப்டம்பர்) படுகொலை செய்தது மற்றும் சிரியாவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்தது எனப் பல ராணுவம் சார் சூழ்ச்சிகள் மூலம் ஈரானைத் தனிமைப்படுத்த ஏகாதிபத்தியம் முயன்றது. இதன் விளைவாகவே, தற்போது ஈரான் மீது இவ்வளவு துணிச்சலாக அமெரிக்க-இஸ்ரேல் படைகள் நேரடித் தாக்குதலை நடத்தியுள்ளன. அணுசக்திப் பிரச்சனையா அல்லது ஆட்சி மாற்றமா? ஈரானின் அணுஆயுதத் திட்டம் என்பது ஒரு புனையப்பட்ட கதை என்று ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது. ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் 2024-இல் ஒரு ‘சீர்திருத்த’ நோக்கத்துடன் ஆட்சிக்கு வந்தார்.

அவர் ஒரு நவதாராளவாத நிதியமைச்சரை (அலி மதானிசாதே) நியமித்து, சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) ஆகியவற்றிற்கு இணக்கமாகச் செல்ல முயன்றார். 2026 பிப்ரவரி தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கூட, ஓமன் நாட்டின் மத்தி யஸ்தத்தில் ஒரு அமைதி ஒப்பந்தம் எட்டப்படும் நிலையில் இருந்தது. ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தில் பல கட்டுப்பாடுகளை ஏற்கத் தயாராக இருந்தது. அப்படியிருந்தும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதிலிருந்து ஒன்று தெளிவாகத் தெரிகிறது: ஈரானின் அணுசக்தித் திட்டம் அவர்களின் உண்மையான கவலை அல்ல; ஈரானின் இறையாண்மையை நசுக்கி, அங்கே தங்களுக்குச் சாதகமான ஒரு ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதே அவர்களின் இறுதி நோக்கம். ஒரு வெல்ல முடியாத தேசபக்தி ஈரானுக்கு எதிரான போர் என்பது ஒருபோதும் வெல்ல முடியாத போர். அங்கு வாழும் சுமார் 10 கோடி மக்களில் பெரும்பகுதியினர் தங்கள் குடியரசைத் தற்காத்துக் கொள்ள இறுதிவரை போராடுவார்கள்.

அயதுல்லா அலி காமேனியின் படுகொலை ஈரானிய மக்களைச் சோர்வடையச் செய்யாது; மாறாக, அவரை ஒரு தியாகியாக (Martyr) உயர்த்தி, மக்களின் போராட்ட உணர்வை இன்னும் தீவிரப்படுத்தும். ஏகாதிபத்திய சக்திகளிடம் ஈரானை வீழ்த்துவதற்கான யதார்த்தமான திட்டம் எதுவும் இல்லை. அவர்கள் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொல்லலாம், உள்கட்டமைப்புகளைச் சிதைக்கலாம். ஆனால் ஈரானிய மக்களின் தேசபக்தியையும் அவர்களின் சுதந்திர வேட்கை யையும் ஒருபோதும் முறியடிக்க முடியாது. ஏகாதிபத்தியத்தின் இந்தப் பசிக்கு எதிராகக் குரல் கொடுப்பது சர்வதேச சமூகத்தின் கடமையாகும். அணுஆயுதங்கள் குறித்த கவலைகள் வெறும் போலி முகமூடி மட்டுமே என்பதை இந்தத் தாக்கு தல் உலகிற்குத் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. ஈரானின் நிலப்பரப்பு மற்றும் அதன் மக்களின் வீரம், அமெரிக்காவின் ராணுவம் சார் சூழ்ச்சிகளுடன் கூடிய  கனவுகளை நிச்சயம் சிதைத்துவிடும். ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்க வேட்கைக்கு எதிராக அணிதிரள்வோம்.