கட்டாய கல்வி உரிமைச் சட்ட நிதியை தமிழகத்திற்கு வழங்காதது ஏன்? ஒன்றிய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுதில்லி, செப். 1 - கட்டாய கல்வி உரிமைச் சட்ட (RTE) விவகாரத்தில், தமிழக அர சின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதி லளிக்குமாறு ஒன்றிய பாஜக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைவருக்கும் அடிப்படைக் கல்வியை கட்டாயமாக்கும் வகையில், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளிலும் 25 சதவிகித இடங்கள் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். அதற்கான கட்டணத்தில், 65 சதவிகிதத்தை ஒன்றிய அரசும், 35 சதவிகிதத்தை மாநில அரசும் வழங்க வேண்டும். ஆனால், ஒன்றிய அரசு தனது பங்கை வழங்காததால், தமிழ்நாட்டில் ஆர்டிஇ சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை தடைப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதி பதிகள், தமிழகத்திற்கான நிதியை ஒதுக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தர விட்டதோடு, நிதி கிடைக்கவில்லை என்று காரணம் கூறி, தனியார் பள்ளி களுக்கு வழங்க வேண்டிய நிதியை தமிழ்நாடு அரசு வழங்காமல் காலம் தாழ்த்தக் கூடாது. உரிய காலத்துக்குள் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தனர். இந்த தீர்ப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகி யோர் அடங்கிய அமர்வு திங்கட்கிழமை யன்று விசாரித்தது. அப்போது, ஆர்டிஇ சட்டத்தின் கீழ், கல்விக்கு நிதியளிக்கும் பொறுப்பை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் ஒரே நேரத்தில் பகிர்ந்து கொள் கின்றன. அவ்வாறிருக்க மாநிலம் மட்டுமே முதன்மைப் பொறுப்பு என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த தில் தவறு உள்ளது என தமிழ்நாடு அரசுத் தரப்பில் வாதம் வைக்கப் பட்டது. மேலும், 2021-22, 2022-23 நிதி ஆண்டுகளுக்கு வழங்க வேண்டிய 342.69 கோடி ரூபாயையும் கூட ஒன்றிய அரசு வழங்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியது. இதையடுத்து, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற நிதி தராத விவகாரம் தொடர்பாக, 4 வாரங்களில் பதிலளிக்கு மாறு ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.