articles

img

உலகம் மாறக் காத்திருக்கிறோம்!

உலகம் மாறக் காத்திருக்கிறோம்!

ஒண்ணு, ரெண்டு,  ஒண்ணு, ரெண்டு, மூணு  நானும் என் சகாக்களும் நாம் அனைவருமே தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளோம் நாங்கள் எதற்கும் நிற்கவில்லையாம் - அவர்கள் கூறுகிறார்கள். எங்களால் ஒருபோதும் முடியாது. மொத்த உலகமும், அதை வழிநடத்துவோரும் இப்போது அனைத்தும் தவறாக நடப்பதைப் பார்க்கிறோம். நமக்கு வழியில்லை என்று நாங்கள் உணர்கிறோம், மேலே எழுந்து நின்று அதை வெல்வதற்கு.  ஆகையால், நாம் தொடர்ந்து காத்திருக்கிறோம்     (காத்திருக்கிறோம்) உலகம் மாறக் காத்திருக்கிறோம் நாம் தொடர்ந்து காத்திருக்கிறோம் அமைப்பை வெல்வது கடினம்தான் நாம் எட்டி நிற்கையில் ஆகையால் நாம் தொடர்ந்து காத்திருக்கிறோம் உலகம் மாறக் காத்திருக்கிறோம்.  நமக்கு மட்டும் இப்போது சக்தி இருந்திருந்தால் நமது அண்டை வீட்டாரை போரிலிருந்து வீட்டிற்கு அழைத்து வர அவர்கள் கிறிஸ்துமசை ஒருபோதும் தவற விட்டிருக்க மாட்டார்கள் அவர்களின் கதவுகளில் ரிப்பன்கள் இருக்காது உங்கள் தொலைக்காட்சியை நீங்கள் நம்புகையில் உங்களுக்குக் கிடைப்பதைத்தான் நீங்கள் பெறுவீர்கள் அவர்கள் தகவல்களை சொந்தமாக்கிக் கொள்வதால் தங்கள் விருப்பப்படி வளைத்துக் கொள்ளலாம்.  ஆகையால் காத்திருக்கிறோம், நாங்கள் (காத்திருக்கிறோம்) உலகம் மாறக் காத்திருக்கிறோம் நாங்கள் காத்திருக்கிறோம் உலகம் மாறக் காத்திருக்கிறோம். நாங்கள் கவலைப்படவில்லை என்றல்ல சண்டை நியாயமில்லை என்பதும் எங்களுக்குத் தெரியும் ஆகையால் காத்திருக்கிறோம், நாங்கள்(காத்திருக்கிறோம்) உலகம் மாறக் காத்திருக்கிறோம்  இன்னும் காத்திருக்கிறோம், நாங்கள்(காத்திருக்கிறோம்) உலகம் மாறக் காத்திருக்கிறோம் தொடர்ந்து காத்திருக்கிறோம், நாங்கள்(காத்திருக்கிறோம்) உலகம் மாறக் காத்திருக்கிறோம் ஒரு நாள் நம் தலைமுறை மக்களை ஆளும் ஆகையால் நாங்கள் தொடர்ந்து காத்திருக்கிறோம்(காத்திருக்கிறோம்) உலகம் மாறக் காத்திருக்கிறோம்  இப்போது நாம் தொடர்ந்து காத்திருக்கிறோம் (காத்திருக்கிறோம்) உலகம் மாறக் காத்திருக்கிறோம் நாம் தொடர்ந்து காத்திருக்கிறோம்(காத்திருக்கிறோம்) உலகம் மாறக் காத்திருக்கிறோம் உலகம் மாறக் காத்திருக்கிறோம் உலகம் மாறக் காத்திருக்கிறோம் உலகம் மாறக் காத்திருக்கிறோம்

உலகம் மாற காத்திருக்கிறேன்!

பாப் பாடகர் ஜான் மேயரின் இந்தப் பாடலை (Waiting for the world to change) பாலஸ்தீனத்தில் அமைதி தேவை என்று விரும்புவர்கள் பயன்படுத்துகிறார்கள். பாடகர் மேயர் ஒருபோதும் அரசியல் நிலைப்பாடுகளை எடுக்கவில்லை. ஆனால் அவரது பாடல்கள் சமூகப் பார்வையைப் பிரதிபலிக்கிறது என்று அவரது ரசிகர்கள் சொல்கிறார்கள். ஏழு முறை கிராம்மி விருதைப் பெற்றுள்ள ஜான் மேயர் முதன்முறை யாக இந்தியா வருகிறார். அவரின் நேரடி நிகழ்ச்சி ஜனவரி 22, 2026 அன்று மும்பையில் நடக்கிறது. அக்டோபர் 14 முதல் இதற்கான டிக்கெட் விற்பனை தொடங்குகிறது.