articles

img

பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி சிபிஎம் 2 வேட்பாளர்கள் அறிவிப்பு

பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி   சிபிஎம் 2 வேட்பாளர்கள் அறிவிப்பு

அசாம் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வரு வதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றி ணைந்து ‘அசாம் சன்மிலிதோ மோர்ச்சா’ (ASOM) எனும் மெகா கூட்டணியை அமைத்துள்ளன. இக்கூட்டணியில் இடதுசாரி சக்திகளின் பங்களிப்பை உறுதிப்படுத்தும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு முக்கியத் தொகுதிகளுக்கான தனது வேட்பாளர் களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள் ளது. மாநிலச்செயலாளர் சுப்ரகாஷ்  தாலு க்தார் இந்த அறிவிப்பை வெளியிட்டார். கோட்டையைக் காக்க களம் இறங்கும் மனோரஞ்சன் தாலுக்தார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மூத்த தலைவரும், 126 உறுப்பினர் களைக் கொண்ட அசாம் சட்டமன்றத் தின் தற்போதைய ஒரே இடதுசாரி சட்டமன்ற உறுப்பினருமான மனோ ரஞ்சன் தாலுக்தார் மீண்டும் களம் காண்கிறார். இவர் புதிதாக மறுவரை யறை செய்யப்பட்ட பவானிபூர்-சர் போக் தொகுதியில் போட்டியிடுகிறார். 72 வயதான மனோரஞ்சன் தாலுக்தார், கடந்த 2021 தேர்தலில் சர்போக் தொகுதியில் 50 சதவீதத்திற்கும் அதிக மான வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றவர். தொகுதி மறுவரையறை காரண மாக சர்போக் தொகுதியுடன் ஏஐயுடி எஃப் (AIUDF) செல்வாக்கு மிகுந்த  பவானிபூர் பகுதிகள் இணைக்கப் பட்டுள்ள நிலையில், இந்தப் புதிய களத்திலும் தனது செல்வாக்கைத் தக்கவைக்க அவர் தீவிரப் பணிகளைத் தொடங்கியுள்ளார். ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக அர சாங்கத்தின் மக்கள் விரோதப் போக்கு கள், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) ஆகியவற்றுக்கு எதிராக சட்ட மன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இவருக்கு, இம்முறை காங்கிரஸ் மற்றும் பிற கூட்டணிக் கட்சிகளின் முழுமையான ஆதரவு கிடைத்துள்ளது. போடோலாந்து பிராந்தியத்தில் புதிய அத்தியாயம்:  பாபு ராம் போரா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாவது வேட்பாளராக, போடோ லாந்து பிராந்தியத்தில் உள்ள கோரேஸ்வர் தொகுதியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பாபு ராம் போரா அறிவிக்கப்பட்டுள்ளார். இப்பகுதி போடோலாந்து தன்னாட்சி  அமைப்பின் கீழ் வரும் ஒரு முக்கியப் பகுதியாகும். ஒரு பழங்குடியினத் தலைவராகவும், பல பத்தாண்டு களாகக் கல்விப் பணியாற்றியவரு மான பாபு ராம் போராவின் வேட்பு மனு, அந்தப் பிராந்தியத்தில் இடது சாரி அரசியல் ஒரு புதிய திசையில் பய ணிக்க வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக இன ரீதியான அரசியல் முன்னிலை வகிக்கும் போடோலாந்து பகுதியில், வர்க்க அடிப்படையிலான மற்றும் சாமானிய மக்களுக்கான இடதுசாரி அரசியலை நிலைநிறுத்த இந்தக் கூட்டணியில் போட்டியிடுவது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. பிபிஎஃப் மற்றும் யுபிபிஎல் போன்ற கட்சிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதியில், ஒரு  நேர்மையான கல்வியாளரை நிறுத்து வதன் மூலம் ஆளும் கூட்டணிக்குக் கடும் சவாலை அளிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் வியூகம் மெகா கூட்டணி அசாம் மாநிலத்தில் பாஜகவின் செல்வாக்கைக் குறைக்க காங்கிரஸ் தலைமையிலான இந்தக் கூட்டணி யில் அசாம் ஜாதிய பரிஷத் (AJP), ஏபிஎச் எல்சி (APHLC) மற்றும் சிபிஐ (எம்எல்) லிபரேஷன் ஆகிய கட்சிகள் இணைந்துள் ளன. நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு எட்டப்பட்டுள்ள இந்த இடப்பகிர்வு ஒப்பந்தத்தின்படி, காங்கிரஸ் கட்சி 111 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஏஜேபி (AJP) கட்சிக்கு  11 இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. எனினும், ராய்ஜோர் தளம் மற்றும் ஏஐயுடிஎஃப் ஆகியவை இந்தக் கூட்டணியில் இடம்பெறாதது ஒரு சவாலாகப் பார்க்கப்படுகிறது. தொகுதி மறுவரையறைக்குப் பின் நிலவும் புதிய அரசியல் சூழலில், எதிர்க்கட்சிகளின் ஓட்டுகள் சிதறாமல் இருப்பதை உறுதி செய்வதே இக்கூட்டணியின் முதன்மை நோக்க மாகும். 2021 தேர்தலைப் போலல்லா மல், இம்முறை கூடுதல் எச்சரிக்கை யுடன் தொகுதிகளைப் பகிர்ந்து கொண்டுள்ள எதிர்க்கட்சிகள், பாஜக வின் தேர்தல் இயந்திரத்தை எதிர் கொள்ளத் தயாராக உள்ளன. அசாமின் வாழ்வாதாரப் பிரச்சனை களான வெள்ளப் பாதிப்பு, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் நில உரிமைகள் போன்ற வற்றை முன்வைத்து இடதுசாரி கள் தமது பிரச்சாரத்தை வடி வமைத்துள்ளனர். ஏப்ரல் 9 அன்று நடை பெறவுள்ள ஒரே கட்ட வாக்குப்பதிவும், மே 4 அன்று வெளியாகவுள்ள முடிவு களும் அசாம் மாநிலத்தின் எதிர்கால அரசியல் அதிகாரத்தை நிர்ணயிக்கும் என்பதில் ஐயமில்லை.