articles

இந்தியா எனும் சிந்தனையோட்டத்திற்கு ஏற்பட்டுள்ள பேராபத்து

இந்தியா எனும் சிந்தனையோட்டத்திற்கு ஏற்பட்டுள்ள பேராபத்து

இந்தியா என்ற சிந்தனையோட்டம் என்பது, சாவர்க்கரின் இந்துத்துவ சித்தாந்தத்தினால் பின்னப்பட்ட புனைகதைகளால் உருவாக்கப் பட்டது அல்ல. மாறாக, பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியை அகற்றுவதற்காகத் தேசிய சுதந்திரப் போராட்டத்தில் சிந்தப்பட்ட இரத்தம் மற்றும் வியர்வை யினால் இது வடிவமைக்கப்பட்டது. இந்தச் சிந்தனை யோட்டமே, 1950 ஜனவரி 26 அன்று அரசமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படைத் தூண்களுக்கு வலுவான அஸ்திவாரமாக அமைந்தது.

அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைகள் பொருளாதார மற்றும் அரசியல் இறையாண்மை மற்றும் காலனித்துவ நீக்கத்தை நோக்கிய பயணம் ஆகியவை சுதந்திரப் போராட்டத்தின் தர்க்கரீதியான தொடர்ச்சியாகும். இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும்; அது மக்கள் தங்கள் விருப்ப மான நம்பிக்கையைப் பின்பற்றுவதற்கான சுதந்தி ரத்தையும் சமத்துவத்தையும் அங்கீகரிக்க வேண்டுமே  தவிர, குறிப்பிட்ட பிரிவினரைத் திருப்திப்படுத்துவ தற்காக அல்ல. அதேபோல், அது ஜனநாயகமாக இருக்க வேண்டும்; ஜனநாயகம் இல்லாமல் சமூகத்தில் நலிந்தவர்களுக்கும் அதிகாரம் பெற்ற வர்களுக்கும் இடையிலான இடைவெளியையும், செல்வத்திலும் வாய்ப்பிலும் உள்ள மிகப்பெரிய பிளவையும் குறைக்க முடியாது.

மேலும், இந்தியா கூட்டாட்சித் தத்துவத்தைக் கொண்டதாக இருக்க வேண்டும். இந்துத்துவா முன்வைக்கும் ஒற்றைத் தன்மை கொண்ட மேலா திக்கத்தினால் (one-dimensional straitjacket), இந்தியாவிலுள்ள பல்வேறு தேசிய இனங்கள், கலாச்சாரங்கள், மொழிகள், உணவு முறைகள் மற்றும் பன்முகத்தன்மையைப் பாதுகாக்க முடி யாது. இந்திய அரசமைப்புச் சட்டம் நிறுவியுள்ள இந்தியா என்ற சிந்தனை, சமமான குடியுரிமையுடன் கூடிய பலதரப்பட்ட மக்களின் கொள்கையை அடிப்ப டையாகக் கொண்டதாகும். தேர்தல் ஆணையத்தின் கடமை இந்தச் சிந்தனை நிலைபெற, சமத்துவமான உலக ளாவிய வயதுவந்தோர் வாக்குரிமை அவசியமானது.

ஒரு தேசிய மொழி அல்லது ஒரு தேசிய மதம் என்ற யோசனை அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கே அப்பாற்பட்டதாகும். இந்திய ஒற்றுமையைப் பேணுவ தில், பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை மேற்பார்வை யிட அரசமைப்புச் சட்ட ரீதியாக அதிகாரம் பெற்ற  இந்திய தேர்தல் ஆணையத்தின் பங்கு மிக முக்கிய மானது. ஒவ்வொரு தகுதியுள்ள குடிமக்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது தேர்தல் ஆணை யத்தின் கடமையே தவிர, அது ஆணையம் காட்டும் கருணை அல்ல.

எனவே, வாக்காளர் பட்டியலைத் தயா ரிக்கும் பொறுப்பு தனிப்பட்ட குடிமக்களைச் சார்ந்தது அல்ல, அது தேர்தல் ஆணையத்தையே சாரும். இந்தியா எனும் சிந்தனைக்கு எழுந்துள்ள அச்சுறுத்தல் துரதிர்ஷ்டவசமாக, இப்போது இந்தியா எனும் இந்தச் சிந்தனையோட்டத்திற்குப் பெரும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. குடிமக்களை அவர்களின் மத அடையாளங்களின் அடிப்படையில் பாகுபடுத்திப் பார்க்கும் ‘இந்துத்துவ’ கருத்தாக்கமே இந்த அச்சுறுத்தலின் ஆணிவேராகும். உலகளவில் எழுந்துள்ள தீவிர வலதுசாரி சித்தாந்தங்களைப் போலவே, இங்கும் ‘பிறராகப் பிரித்து ஒதுக்குதல்’ (Othering) என்பது ஒரு முக்கிய உத்தியாக மாறியுள்ளது.

அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப்பின் குடியேற்ற முகவர்களைப் போலவே, இங்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் மக்களிடையே அச்சத்தை விதைக்க முயல்கிறது. நாட்டின் உள் பாதுகாப்பிற்குப் பொறுப்பான அமித் ஷா, ‘கரையான்களைப்’ போல நாட்டின் உயிர்நாடிகளை அரிப்பதாகக் கூறப்படும் ‘ஊடுருவல்காரர்களை’ அடையாளம் காணச் சிறு துரும்பைக் கூட அசைக்கவில்லை. வாக்குரிமை பறிப்பும்  ‘சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியும்’ எவ்வித ஆதாரமும் இன்றி ‘ஊடுருவல்காரர்கள்’ என்ற விவகாரத்தை அரசியல் ஆயுதமாகப் பயன் படுத்துவது இப்போது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளிலும் ஊடுருவிவிட்டது. ‘கரையான்கள்’ என இழிவுபடுத்தப்படும் குடிமக்களின் வாக்குரி மையைப் பறிப்பதை நோக்கமாகக் கொண்ட தேர்தல் ஆணையத்தின் ‘சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி’யின் (SIR) முழக்கமாக ‘கண்டறிதல், நீக்குதல் மற்றும் நாடு கடத்துதல்’ என்பது மாறியுள்ளது. பீகாரில் தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கையிலோ அல்லது  மற்ற மாநிலங்களில் நடைபெற்று வரும் செயல் முறைகளிலோ, அத்தகைய ஊடுருவல்காரர்கள் இருக்கிறார்கள் என்பதற்கான எவ்வித ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை. மாறாக, ஏழை எளிய மக்களே இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மேற்கு வங்கமும்  திட்டமிட்ட அச்சுறுத்தலும் எல்லைப்புற மாநிலமான மேற்கு வங்கத்தில் இதன் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. அங்கு பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் கணிசமான முஸ்லிம் மக்களின் வாக்குரிமையைப் பறிக்க முயற்சிகள் நடக்கின்றன.

இப்பணி தொடங்கப்படு வதற்கு முன்பு 7.66 கோடியாக இருந்த வாக்காளர் எண்ணிக்கை, வரைவுப் பட்டியல் வெளியானபோது 7.08 கோடியாகக் குறைந்தது. 2002-03 ஆம் ஆண்டின் பட்டியலோடு இணைக்க முடியவில்லை என்ற காரணத்தால் மட்டும் லட்சக்கணக்கானவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஆவணங்களற்றவர்கள் என்றோ, குடிமக்கள் அல்லாதவர்கள் என்றோ கருத முடியாது. ஆனால் இவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. அமித் ஷாவின் ஆதரவாளராகத் தேர்தல் ஆணையம் செயல்பட்டு, ‘தர்க்கரீதியான முரண்பாடு’ (logical discrepancy) என்ற பெயரில் பெயர்ப் பிழைகள், வயது வித்தியாசம் போன்ற சிறு காரணங்க ளை முன்வைத்து சுமார் 60 லட்சம் பெயர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளது. இவர்கள் பெரும்பாலும் தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் பெண்களாவர்.

ஆரம்பத்தில் நேரில் வந்து சரிபார்ப்பதாக உறுதி அளித்த தேர்தல் ஆணையம், இப்போது டிஜிட்டல் வழிமுறைகளைப் பயன்படுத்தி இவர்களை ஒதுக்குகிறது. அரசமைப்பு நெருக்கடி வங்கத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த முரண்பாடுகளைச் சரிபார்க்க நீதித்துறை அதிகாரி களைப் பணியமர்த்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது, இது அத்த கைய நடவடிக்கையின் அரசமைப்புச் சட்டப்பூர்வத் தன்மை குறித்துக் கேள்விகளை எழுப்புகிறது. 2026 மே 7-க்குள் புதிய சட்டமன்றம் அமைய வேண்டி யிருப்பதால், மே 6-க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். ஆனால் வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்படாமல் இது சாத்தியமில்லை.

இது ஒரு பெரும் அரசமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 60 லட்சம் வாக்காளர்களின் நிலை கேள்விக்குறி யாக இருக்கும்போது, பட்டியலை இறுதி செய்ய முடி யாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நியாயமாக வலியுறுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் அமித் ஷாவின் யோசனையைப் பின்பற்றி அரசமைப்புச் சட்ட ஏற்பாடுகளுக்கு ஆபத்தை விளைவிக்கிறது. ஜன நாயகத்தைப் போற்றும் அனைவரும், குறிப்பாக இடது சாரி சக்திகள், வயது வந்தோர் வாக்குரிமை எனும்  அடிப்படைத் தத்துவத்தைப் பாதுகாப்பதில் உறுதி யுடன் நிற்க வேண்டும். தமிழில் சுருக்கம் : ச.வீரமணி பீப்பிள்ஸ் டெமாக்ரசி, மார்ச் 15