ஒன்றிய பாஜக அரசே மக்காச்சோளத்தை கொள்முதல் செய்!
இந்தியாவில் மக்காச்சோளம் உற்பத்தியில் கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்க ள் அதிகம் உற்பத்தி மற்றும் கொள்முதல் செய்யும் மாநிலங்க ளாகும். குறிப்பாக கர்நாடகா 15 சதவீதத்திற்கும் மேல், மத்தியப் பிரதேசம் 14 சதவீதத்திற்கும் மேல் கொள்முதல் செய்கின்றன.
தமிழ்நாட்டில் சேலம், திருப்பூர், திண்டுக்கல், பெரம்பலூர், தூத்துக்குடி, விருதுநகர், கடலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, விழுப்புரம், நாமக்கல், தர்மபுரி, திருச்சி, அரியலூர், மதுரை, தேனி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மக்காச்சோளம் முக்கியமாக பயிரிடப்படுகிறது. தமிழ்நாடடில் சுமார் 3 சதவீதத்திற்கும்மேல் மக்காச் சோளம் உற்பத்தியாகிறது. உலக அளவில் மக்காச்சோளம் உற்பத்தியில் இந்தியா ஏழா வது இடத்தில் உள்ளது. மக்காச்சோளம் சாகுபடி மொத்தப்பரப்பில் இந்தியா உலக அளவில் நான்காவது இடத்தில் உள்ளது. உலகின் மொத்த உற்பத்தியில் இந்தியா 2 சதவீதம் பங்களிக்கிறது
. பயன்பாடுகள் இந்தியாவில் மக்காச்சோளம் பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. மக்காச்சோளம் பயன்படுத்தப்படும் சில குறிப்பிடத்தக்க வழிகள் என்னவென்றால் முதலில் கோழித் தீவனம். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மக்காச்சோளத்தில் கிட்டத்தட்ட பாதி அதாவது 47 சதவீதம் கோழித் தீவனமாக பயன்படுகிறது. அடுத்து மக்காச்சோள விளைச்சலில் உணவு மற்றும் கால்நடைத் தீவனமாக 13 சதவீதம் பயன்படுத்தப்படுகிறது. தொழில் துறையில் சுமார் 12 சதவீதம் பல்வேறு தொழில்துறை பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஸ்டார்ச் தொழிலில் சுமார் 14 சதவீதம் பயன் படுத்தப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட உணவு பயன்பாட்டில் 7 சதவீதம் பயன்படுத்தப் படுகிறது.
இந்தியாவில் உற்பத்தியாகும் மக்காச்சோளத்தில் 6 சதவீதம் பிற நாடு களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பதப்படுத்துதல் மூலம் பயன்கள் மக்காச்சோளத்தை பதப்படுத்துவதன் மூலம் பல்வேறு மதிப்புமிக்க துணைப் பொருட்கள் கிடைக்கின்றன. மக்காச்சோள மாவு, ஜவுளிப் பசைகள், உணவு மற்றும் மருந்துப் பொருட்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. மால்டோ டெக்ஸ்ட்ரின் மற்றும் குளுகோஸ் போன்ற உயர் மதிப்புள்ள மாவுச்சத்து பொருட்கள் கிடைக்கின் றன. மக்காச்சோளத்திலிருந்து சமையல் எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. கால் நடைத் தீவனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கார்ன் சிரப் மிட்டாய் தொழிலில் பரவ லாகப் பயன்படுத்தப்படுகிறது.
பயோ-எத்தனால் மக்காச்சோளத்திலிருந்து பெறப் படும் புதுப்பிக்கத்தக்க எரிபொருளாகும். இது அமெரிக்காவில் மக்காசோள நுகர்வில் 40 சதவீதத்திற்கும் அதிகமாகப் பயன்படுகிறது. இந்தியாவில் பெட்ரோ லில் 20 சதவீத அளவில் எத்தனால் சேர்க்கலாம் என்று அரசு முடிவு செய்த பின்எத்த னால் உற்பத்திக்கு மக்காச்சோளம் கூடுதலாக தேவைப்படுகிறது. மக்காச்சோளத்திலி ருந்து சிட்ரிக், லாக்டிக் மற்றும் இட்டாகோனிக் அமிலங்கள் பெறப்படுகிறது. இவை மக்கும் பிளாஸ்டிக் மற்றும் உணவு பாதுகாப்புப் பொருட்களில் பரவலாக பயன்படுத் தப்படுகிறது.மக்காச்சோள மாவுச்சத்து மாத்திரை சூத்திரங்களில் பயன்படுத்தப்படுகிறது. விலை வீழ்ச்சி ஏன்? 2025 காரீப் பருவத்தில் மக்காசோளச் சாகுபடி பரப்பளவு 94.95 லட்சம் ஹெக்டே ராக உயர்ந்தது. இது கடந்த ஆண்டு 84.30 லட்சம் ஹெக்டேராக இருந்தது. இது 12.63 சதவீதத்திற்கும் அதிகமான அதிகரிப்பாகும்.
இந்த குறிப்பிட்ட அளவிலான பரப்ப ளவு அதிகரிப்பு, சாதகமான பருவமழை நிலைமைகளுடன் இணைந்து விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் மண்டிகளுக்கு வரத்து அதிகரித்தது மற்றும் விலை களை குறைத்தது என்பது பொதுவான கருத்தாக இன்றைக்கு பல்வேறு தரப்பினர் சொல்லும் விசயமாகும். ஆனால் உண்மையில் விலை ஏன் வீழ்ச்சி அடைந்தது? இந்த விபரத்தை நாம் ஆராய்ந்தால் இந்திய அரசு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தகம் ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. அந்த ஒப்பந் தத்தினால் அமெரிக்காவிலிருந்து மக்காச்சோளம் இப்போதைய விலையை விட குறைவாக வாங்க முடியும் என்று இந்திய முதலாளிகளும், கம்பெனிகளும் கருது கின்றன.
ஏனெனில் உலகில் அதிக மக்காச்சோளம் உற்பத்தி செய்யும் நாடு அமெரிக்கா. இந்தியாவில் விலைந்துள்ள மக்காச்சோளத்திற்கு ஒன்றிய அரசு குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2400 என்று அறிவித்துள்ளது. இந்த விலை கொடுத்து எத்தனால் உற்பத்தி செய்யும் கம்பெனிகள் மற்றும் ஆல்கஹால் உற்பத்தி செய்யும் கம்பெனிகள் வாங்க வேண்டாம் என கருதுகின்றன. மறு புறத்தில் குறைந்த விலையில் உடைந்த அரிசிகளை வாங்கி எத்தனால் உற்பத்தி நடை பெறுகிறது. எனவே, விலை அதிகம் கொடுத்து ஏன் மக்காச்சோளம் வாங்கவேண்டும் என்று இந்திய பெருமுதலாளிகள் கருதுகிறார்கள். மக்காச்சோளம் கோழித் தீவ னமாக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது.
தற்போது கோழித் தீவன பயன்பாட்டிற்கு மக்காச்சோளத்தின் தேவை குறைந்துள்ளது அல்லது அந்த தொழிலில் சில ஏற்றத் தாழ்வு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்காச்சோளம் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அரசு கொள்முதல் ஒன்றிய அரசு சுமார் 23 வகையான விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ஒவ்வொரு ஆண்டும் அந்தந்தப் பருவ காலங்களில் தீர்மானிக்கின்றது. இந்திய உணவுக்கழகம் (FCI), பருத்தி கழகம் (CCI), சணல் கழகம் (JCI), இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு லிமிடெட் (NAFED) போன்ற அமைப்புகள் மூலம் நெல், கோதுமை, மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, சிறு தானியங்கள், துவரம் பருப்பு, உளுந்து, பாசிப்பயிறு, மசூர்பருப்பு, கடுகு, சூரிய காந்தி, சோயாபீன், நிலக்கடலை, எள், தேங்காய் கொப்பரை, பருத்தி, சணல் ஆகிய வற்றை ஒன்றிய அரசு மாநில அரசுகள் மூலம் கொள்முதல் செய்கிறது. அதற்கான நிதியை ஒன்றிய அரசு வழங்குகிறது.
பிரதம மந்திரி அன்னதாதா ஆய் சன்ரக்ஷன் அபியான் (PM-AASHA) திட்டத்தின் கீழ் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் கொப்பரை ஆகியவற்றின் சந்தை விலை குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) விடக் குறையும் போது கொள்முதல் செய்கிறது. ஒன்றிய அரசு அந்தந்தப் பருவ காலங்களில் அகில இந்திய உற்பத்தி யில் 25 சதவீதம் வரை கொள்முதல் செய்ய அனுமதிக்கிறது. விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்ய ஜெம் (GEM) போர்ட்டல் போன்ற அதிகா ரப்பூர்வ தளங்களை பயன்படுத்துகின்றன.
பருத்தி, சணல் கொள்முதலுக்கு அதிக பட்ச வரம்புகள் கிடையாது மற்றவைகளுக்கு உண்டு. ஒன்றிய அரசின் கொள்கைப் படி 25 சதவீதம் கொள்முதல் செய்ய அந்தந்த மாநில அரசுகள் மூலம் கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கீடு செய்தால், இந்தியா முழு வதும் உற்பத்தியான மக்காச்சோளத்தில் 25 சதவீதம் கொள்முதல் நடந்தால், ஒன்றிய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் தனியாரும் கொள்முதல் செய்ய முன்வருவார்கள். ஆனால் ஒன்றிய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவித்ததோடு என் வேலை முடிந்து விட்டது என்று அமைதியாக இருக்கிறது. மறு புறத்தில் பாஜக கட்சியினர் தமிழ்நாட்டில் மக்காச்சோளத்தை கொள்முதல் செய் என்று தேர்தலுக்கான நாடகத்தை நடத்துகிறார்கள்.
கொள்முதல் செய்ய வேண்டி யவர்கள் ஒன்றிய பாஜக அரசு என்பதை மறைக்க இவ்வாறான போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள். இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழ்நாட்டில் மக்காச்சோளத்திற்கு ஏற்பட்டுள்ள விலை வீழ்ச்சி விவசாயிகளை மிகக்கடுமையாக பாதிப்படையை வைத்துள்ளது. எனவே, ஒன்றிய அரசு, தமிழக அரசு மூலம் நிதி வழங்கி கொள்முதல் செய்வ தற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை யை விட குறைவான விலைக்கு கொள்முதல் செய்பவர்கள் மீது அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு நடந்தால் தனியார் வணிகர்களும் அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய முன்வருவார்கள். விவசாயிக ளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கும். தமிழக விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு அறிவித்த ஆதரவு விலை கிடைக்க வேண்டுமென்றால் மக்காச்சோள விவசாயிகள் மட்டுமல்ல, அனைத்து பகுதி விவசாயிகளும் ஒன்றிணைந்து அரசே கொள்முதல் செய்ய வேண்டுமென்று போராட ஒன்றிணைய வேண்டும்.
