articles

டிரம்ப்பின் வரி- இந்தியாவின் இறையாண்மைக்கு சவால்! - அ.அன்வர் உசேன்

டிரம்ப்பின் வரி- இந்தியாவின் இறையாண்மைக்கு சவால்!

டொனால்டு டிரம்ப் தலைமையி லான அமெரிக்க நிர்வாகம் இந்திய இறக்குமதி பொருட் கள் மீது 25% வரியை விதித்தது. பின்னர் ரஷ்யாவிட மிருந்து எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி  மேலும் 25% வரியை விதித்துள்ளது. டிரம்ப்புடன் மோடி பாராட்டிய நட்போ அல்லது “கட்டிப்பிடி வைத்தி யமோ” எதுவும் இந்தியாவை காப்பாற்றவில்லை. அமெரிக்காவின் பாராட்டைப் பெற சீனாவை தவறாக விமர்சித்தது கூட பலன் தரவில்லை. 

மறுபுறம் விலை குறைவான ரஷ்ய எண்ணெய் வாங்குவதால் இந்திய மக்களுக்கு பலன் கிடைப்ப தற்கு பதிலாக அம்பானி மற்றும் அதானி நிறுவனங்க ளுக்குதான் வருமானம் கிடைத்தது எனும் உண்மை யான விமர்சனமும் மோடி அரசாங்கத்தின் மீது சுமத்தப்படுகிறது. எனினும் இந்தியா எந்த தேசத்தி டம் எதனை வாங்குவது என்பதை அயல்நாடு தீர்மா னிப்பதை அனுமதிக்க முடியாது. ஏனெனில் அது இந்தியாவின் இறையாண்மை தொடர்பான பிரச்சனை. 

பாதிக்கப்படும் துறைகள்  

டிரம்ப்பின் வரியால் இந்தியாவிலிருந்து அமெ ரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பல உற்பத்தி பிரிவு களும் பாதிக்கப்படும் ஆபத்து உருவாகியுள்ளது. முக்கிய பொருட்களில் வைரம்/தங்க பொருட்களு க்கு 52.1%, துணிகளுக்கு 59%, ஆயத்த ஆடைகளுக்கு 63.9%, இறால்களுக்கு 50%, வாகன உதிரி பாகங்க ளுக்கு 26% வரை வரி உயர்த்தப்படும். அலைபேசி கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கு தற்காலிக விலக்கு தரப்பட்டாலும் அவற்றின் மீதும் வரி விதிக்கப்படும் என டிரம்ப் பயமுறுத்தியுள்ளார். 

சீனாவின் எதிர்வினை 

ரஷ்ய எண்ணெய்யை கணிசமாக சீனாவும் வாங்கு கிறது. ஆனால் சீனா மீது வரி விதிப்பு இல்லை. ஏனெனில் சீனாவிடம் அமெரிக்காவை மடக்க பல துருப்புச் சீட்டுகள் உள்ளன. அமெரிக்காவுக்கு தேவையான சில அபூர்வ முக்கிய கனிம வளங்களை சீனா ஏற்றுமதி செய்கிறது. இந்த ஏற்றுமதியை நிறுத்தி விட்டால் அமெரிக்காவின் வாகன உற்பத்தியும் அணுசக்தி மற்றும் ஆயுத உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்படும்.   மேலும் சீனாவின் சோசலிச சமூக அமைப்பு முறை மிக வேகமாக நெருக்கடிகளை சமாளிக்க உள் நாட்டுச் சந்தையை விரிவுபடுத்தவும் ஏராளமான முதலீடுகளை திட்டமிடவும் முடிகிறது. நிதி பற்றாக் குறை குறித்து எவ்வித வரையறைகளையும் கைக் கொள்ளாமல் முதலீடுகளை அதிகரிக்க சீனாவால் முடிகிறது. இத்தகைய எந்த துருப்புச் சீட்டும் இந்தி யாவிடம் இல்லை. 

பிரேசிலின் எதிர்வினை  

பிரேசில் மீதும் 50% வரியை டிரம்ப் நிர்வாகம் சுமத்தியுள்ளது. பிரேசிலின் வலதுசாரி அரசியல் தலைவர் போல்சானரோ மீது நடக்கும் ஊழல் வழக்கை கைவிட மறுத்ததற்காக இந்த வரி விதிப்பு. டிரம்ப்பின் வரி விதிப்பை ஒரு தேசபக்த போராட்டமாக மாற்ற பிரேசில் இடதுசாரி ஜனாதி பதி லூலா பல முயற்சிகளை எடுத்து வருகிறார்.  வரிவிதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்க ளுக்கு 5.5 பில்லியன் டாலர் கடன் உதவி பிரேசிலில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அடாவ டித்தனத்தை எதிர்கொள்ள பிரிக்ஸ் நாடுகளின் கூட்டு முயற்சிக்கு பிரேசில் அழைப்புவிடுத்துள்ளது. இத்தகைய எந்த முயற்சியும் மோடி அரசாங்கத்தி டமிருந்து வெளிவரவில்லை.

 தமிழ்நாட்டுக்கு பாதிப்பு  

டிரம்ப் நிர்வாகத்தின் வரிவிதிப்பு தமிழ்நாட்டையும் கடுமையாக பாதித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆயத்த ஆடைகள், தரை விரிப்புகள், இறால் ஆகிய ஏற்றுமதி கள் பாதிக்கப்படும். எதிர்காலத்தில் அலைபேசி கள், மருந்து பொருட்கள் ஏற்றுமதிகளும் பாதிக்கப் படும் ஆபத்து உள்ளது.  குறிப்பாக ஆயத்த ஆடைகள் உற்பத்தி செய்யும் திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கும் ஆபத்து உருவாகியுள்ளது. டிரம்ப்பின் வரிவிதிப்பு கள் அமலானால் ஆயத்த ஆடைகளுக்கு தற்போது உள்ள 13.9% வரி என்பது 63.9%ஆக உயரும்.  இந்தியாவிலிருந்து ஆயத்த ஆடைகள் சுமார் ரூ.45,900 கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்யப்படு கின்றன. இதில் திருப்பூர் மட்டும் ரூ.45,000 கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்கிறது. திருப்பூரிலிருந்து செய்யப்படும் ஏற்றுமதியில் 30% அமெரிக்காவுக்கு செல்கிறது. திருப்பூரில் மட்டும் இந்த தொழிலில் 10 லட்சம் பேர் பணி புரிகின்றனர்.   டிரம்ப்பின் வரி விதிப்பு ஆகஸ்ட் 27முதல்தான் அமலுக்கு வரும் என்றாலும் இப்பொழுதே ஆர்டர்கள் குறைந்து விட்டன எனவும் ஏற்கெனவே போட்ட ஆர்டர்களை நிலுவையில் வைக்குமாறு அமெரிக்க ஏற்றுமதியா ளர்கள் கேட்டுக்கொள்வதாகவும் திருப்பூர் ஏற்றுமதி யாளர்கள் கூறுகின்றனர். மேலும் ஏற்கெனவே உற் பத்தி செய்யப்பட்ட ஆடைகளை வேறு நாடுகளுக்கு  விற்க முடியாது. ஏனெனில் அந்த ஆடைகளுக்கான “வடிவமைப்பு உரிமையை” அமெரிக்க நிறுவனங் கள் வாங்கி வைத்துள்ளன.  வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்களுக்கு 1%லிருந்து 26%ஆக வரி உயர்த்தப்பட்டுள்ளது. வாகன உற்பத்தியின் தலைநகரம் என அழைக்கப்படும் சென்னை நிறுவனங்கள் பாதிக்கப்படலாம்.  இந்த பிரச்சனைகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் ஒன்றிய அரசுக்கு நீண்ட கடிதம் எழுதியுள்ளார். இந்த வரிவிதிப்புகள் அமலானால் ஜவுளித்துறையில் மட்டும் 30 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழப்பார் கள் எனும் ஆபத்தை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் தொழில்துறையினருக்கு கடன் நிவாரணம், வரி விலக்கு உட்பட பல ஆலோசனைகளையும் முன் வைத்துள்ளார்.

 இந்தியா என்ன செய்ய வேண்டும்?  

பலவீனமானவரையே திரும்பத் திரும்ப தாக்கும்  சண்டியர் போல டிரம்ப் நிர்வாகம் இந்தியாவை குறி வைத்துள்ளது. இதற்கு காரணம் அமெரிக்காவின் இளைய ராணுவக் கூட்டாளியாக மாற இந்தியா முன் வந்ததுதான்! இப்பொழுது இந்தியாவின் இறையாண்மையையே விலையாகக் கேட்கிறது டிரம்ப் நிர்வாகம்.  இதற்காக அமெரிக்காவின் அடாவடித்தனத்தை எதிர்கொள்ள பிரிக்ஸ் மற்றும் ஷாங்காய் ஒத்து ழைப்பு கவுன்சில் போன்றவற்றுடன் இணைந்து இந்தியா செயல்பட வேண்டும். குவாட் போன்ற ராணுவ சூழ்ச்சி அமைப்புகளிலிருந்து வெளியேற வேண்டும். அமெரிக்க இறக்குமதி பொருட்க ளுக்கும் இந்தியா பொருத்தமான வரிவிகிதங்களை செயல்படுத்த வேண்டும்.  டிரம்ப் வரிவிதிப்பால் பாதிக்கப்படும் துறைக ளுக்கு நிதி உதவி, வங்கி கடன் அடைத்திட கால அவ காசம் நீட்டிப்பு, வட்டி குறைப்பு போன்ற சலுகைகள் தரப்பட வேண்டும். தொழிலாளர்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் அவர்களின் மறுவாழ்வுக்கு உதவி திட்டங்களை வகுக்க வேண்டும்.   நாசகர நவீன தாராளமயக் கொள்கைகள் காரண மாக நிதிப் பற்றாக்குறை வரம்பை மீறக்கூடாது எனும் அணுகுமுறையை கைவிட வேண்டும். உள்நாட்டு சந்தையை விரிவாக்கி உற்பத்தி பொருட்களின் விற்பனைக்கு வழிவகுக்க வேண்டும். விலை குறைவாக வாங்கும் ரஷ்ய எண்ணெய் யைக் கொண்டு இந்திய மக்களுக்கு விலை குறைவாக பெட்ரோலியப் பொருட்கள் கிடைப்பதை உத்தரவாதம் செய்ய வேண்டும்.  அமெரிக்காவின் வரி விதிப்பு இந்தியாவுக்கு பெரும் நெருக்கடியை தோற்றுவித்துள்ளது. எனினும் இதிலிருந்து மீண்டு வரும் திறன் இந்தியா வுக்கு உண்டு. அந்த திறனை வெளிக்கொணர மோடி அரசாங்கம் முயலுமா என்பதுதான் பில்லி யன் டாலர் கேள்வி.

அமெரிக்காவின் வரி விதிப்பு இந்தியாவுக்கு பெரும் நெருக்கடியை தோற்றுவித்துள்ளது. எனினும் இதிலிருந்து மீண்டு வரும் திறன் இந்தியாவுக்கு உண்டு. அந்த திறனை வெளிக்கொணர மோடி அரசாங்கம் முயலுமா என்பதுதான் பில்லியன் டாலர் கேள்வி.