இரவின் மௌனமும் காலையின் அதிர்ச்சியும்....
ஹவானாவின் அந்த இரவு வித்தியாசமானது. மறுநாள் துவங்கும்நான்காவதுசர்வதேச பத்ரியா கருத்தரங்கரங்கம் குறித்த நினைவுகள் சுழன்று கொண்டிருந்தது. கருத்தரங்கத்தின் திட்டங்களை மீண்டும் ஒருமுறை பார்த்துக் கொண்டு, நாளை 47 நாடுகளிலிருந்து வரும் 500க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் ஆய்வாளர்களை சந்திக்கப் போகிறேன் என்ற உணர்வில் தூங்கச் சென்றேன்.
காலை வேளையில் கண் திறந்தவுடன் - நமது தலைமுறையின் சாபம் - கையில் போன். வழக்கம் போல் Facebook திறக்க முயற்சித்தேன். ஆனால் காத்திருந்தது அதிர்ச்சி - “No Connection”. ChatGPT? - “Service Unavailable”. Wi-Fi signal பார்த்தேன் - Full bars. Internet speed test செய்தேன் - Perfect connection. அப்போதுதான் உணர்ந்தேன் - நான் இருக்கும் இடம் வெறும் கியூபா அல்ல. இது அமெரிக்க டிஜிட்டல் காலனித்துவத்திலிருந்து விடுதலை பெற்ற ஒரு தீவு! என் முன் கிடந்த நான்காவது சர்வதேச பத்ரியா கருத்தரங்கத்தின் அழைப்பிதழில்”Universidad de La Habana”என்று அச்சிடப்பட்டிருந்தது. இது வெறும் முகவரி அல்ல - இது புரட்சி வீரர்களை வார்த்தெ டுக்கும் ஓர் உலைக்களம். 1728 இல் நிறுவப்பட்ட இந்த பல்கலைக்கழகம், லத்தீன் அமெரிக்காவின் மிகப் பழமையான கல்வி நிலையங்களில் ஒன்று.ஆனால் அதன் உண்மையான பெருமை - இது புரட்சியாளர்களின் தொட்டில்! பல்கலைக்கழகத்திற்கு செல்லும் வழியில், ஹவானாவின் சாலைகளில் நடந்து கொண்டிருந்த போது, ஒவ்வொரு கல்லும் ஒரு கதை சொல்லிக் கொண்டிருந்தது. இதே சாலைகளில் 1950களில் ஃபிடல் நடந்திருக்கிறார். புத்தகங்களுடன், கனவு களுடன்!
ஹவானா பல்கலைக்கழகம் - சரித்திரத்தின் இதயம்!
ஹவானா பல்கலைக்கழகத்தின் வாசலில் நிற் கும்போது, என் உள்ளத்தில் ஒரு அதிர்வு ஏற்பட்டது. இதுதான் அந்த புனித பூமி! இதே படிகளில்ஃபிடல் காஸ்ட்ரோநடந்திருக்கிறார். இதே வகுப்பறைகளில் அவர் சட்டம் பயின்றிருக்கிறார். இதே மண்டபங்களில் அவர் முதன்முதலில் புரட்சியின் கனவுகளைக் கண்டிருக்கிறார். 1945 இல் இங்கே நுழைந்த ஃபிடல் ஒரு சாதா ரண மாணவன். ஆனால் இங்கிருந்து வெளி யேறும்போது, அவர் ஒரு புரட்சியாளர்! இதே நூல கங்களில் அவர் மார்க்ஸ் மற்றும் மார்த்தியைப் படித்தி ருக்கிறார். இதே பூங்காவில் நண்பர்களுடன் ஆழ்ந்த அரசியல் விவாதங்கள் நடத்தியிருக்கிறார். செ குவேராமருத்துவம் பயின்ற அர்ஜெண்டினா விலிருந்து கியூபா வரும் முன், இந்த பல்க லைக்கழகம் ஏற்கனவே புரட்சியின் வித்துகளை விதைத்துக் கொண்டிருந்தது. கமிலோ சியன்ஃ புயகோஸ், ஃபிராங்க் பைஸ், ஜோஸ் அன்டோனியோ எச்செவேரியா - இவர்கள் எல்லோரும் இதே மண்ணின் மக்கள்! 1953 இல் மன்காடா படைமுகாம் தாக்குதலுக்கு முன், ஃபிடல் இங்கே எத்தனை இரவுகள் திட்ட மிட்டிருப்பார்! “சரித்திரம் என்னை விடுதலை செய்யும்” என்ற அவரது புகழ்பெற்ற பேச்சுக்கான யோசனை களும் இங்கேதான் முளைத்திருக்கும்! என்ற சிந்தனை தொடர்ந்து கொண்டே இருந்தது.
பத்ரியா கருத்தரங்கம்
கருத்தரங்க மண்டபத்தில் நுழைந்தபோது, என்னைப் போல் பல்வேறு நாடுகளின் பத்திரிகை யாளர்கள் இருந்தனர். வெனிசுலா, நிக்கராகுவா, பொலிவியா, ஈக்வடார், பிரேசில், அர்ஜெண்டினா, மெக்சிகோ, சிலி... ஆனால் இவர்களின் முகத்தில் ஏதோ ஒரு தீவிரம் தெரிந்தது. வெறும் பத்திரிகை யாளர்கள் அல்ல - இவர்கள் போர்வீரர்கள்! அந்த பல்கலைக் கழகத்தின் சுவர்களைப் பார்த்த போது, ஒரு உண்மை தெளிவாக புரிந்தது - இது வெறும் கருத்தரங்கம் அல்ல! இது 21ஆம் நூற்றாண் டின் புதிய டிஜிட்டல் புரட்சிக்கான திட்டமிடல் கூட்டம் என்று. ஃபிடல் ஒரு காலத்தில் இதே மண்ணில் அமெ ரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஆயுதங்களுடன் போரிட்டார். இன்று அவரது சித்தாந்தத்தின் வாரிசுகள், அதே அமெரிக்காவின் டிஜிட்டல் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக keyboards மற்றும் algorithms-களுடன் போரி டுகிறார்கள்!
அந்த முதல் அதிர்ச்சி
வெனிசுலாவின் தகவல் தொடர்பு அமைச்சர் ஃப்ரெடி ஞானெஸ் மேடையில் வந்து பேசத்தொடங்கினார். அவரது துவக்க வார்த்தைகளே என்னை உலுக்கிப் போட்டன: “நண்பர்களே, நம்மைச் சுற்றி ஒரு அதிநவீன போர் நடைபெறுகிறது. இது துப்பாக்கியோ, டாங்கோ, விமா னங்களோ இல்லை. ஆனால் இது உலகம் கண்டிராத மிகவும் அபாயகரமான போர் -அறிவாற்றல் போர்!” அமைச்சர் அதனை இன்னும் விரிவாக விவரிக்கத் தொடங்கினார் - வெனிசுலாவில் எப்படி Hybrid War நடத்தப்பட்டது என்று. அதென்ன Hybrid War?“ நவீன காலத்தின் மிகவும் சிக்கலான பாதுகாப்பு சவாலாகும். இது பாரம்பரிய போர் மற்றும் சமாதானம் என்ற இருவேறு நிலைகளுக்கு மாறாக ஒரு நீடித்த, பல்பரிமாண போராகும். இந்த போர் முறையின் வெற்றி என்பது இராணுவ வெற்றி யை விட, எதிரி நாட்டின் அரசியல், சமூக மற்றும் பொருளா தார அமைப்புகளில் நீண்ட கால சீர்குலைவுகளை ஏற் படுத்துவதாகும். எனவே, இதற்கு எதிரான பாதுகாப்பும் பல்பரிமாண அணுகுமுறை கொண்டதாக இருக்கும். அதன்படி, முதலில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வெனிசுலாமீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. இரண்டாவதாக.. உணவு, மருந்து, அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. மூன்றாவதாக.. சமூக ஊடகங்களில் மூன்று முக்கிய கதைகள் தகவல் சூழ்ச்சியின் அடிப்படையில் வைர லாக்கப்பட்டன. அந்த மூன்று கதைகள் 1.வெனிசுலா ஒரு தோல்வி யுற்ற நாடு 2. மக்கள் மனிதாபிமான நெருக்கடியில் சிக்கி யுள்ளனர் 3.வெனிசுலா மக்களுக்கு அவசர மனிதாபி மான உதவி தேவை மேற்கண்ட வடிவில் கதைகள் கட்ட விழ்த்து விடப்பட்டன. அதனால் வெனிசுலாவில் உள்ள மக்களை எப்படி யாவது காப்பாற்ற வேண்டும் என்று பெயரில் இராணுவ தலையீட்டுக்கான வழியை தயார் செய்தனர். அதாவது தலையிட்டிற்கான நியாயத்தை உருவாக்கினர். இதைக் கேட்டபோது என் மனதில் ஒரு பிரபஞ்சமே திறந்தது. இது வெறும் அரசியல் அல்ல – இது ஊடகக் கருத்துருவாக்கத்தின் மூலம் மக்களின் இசைவை பெறுவதற்கான மிகப்பெரிய உத்தி என்பது.
நான்கு சிந்தனை வடிகட்டிகள்
அதிலும் நான்கு “சிந்தனை வடிகட்டிகள்” (Cognitive Filters) பயன்படுத்தப்பட்டன என்பதையும் ஞானெஸ் விளக்கினார். 1.எதைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். 2.என்ன செய்ய வேண்டும். 3.எந்த தகவலை நம்பக் கூடாது. 4.எதைப் பற்றி கவலைப்பட வேண்டும் என்பதையும் அந்த கதை களுக்குள் உள்ளடக்கியிருந்தனர். அதன் இறுதி நோக்கம்,”உங்களை நிஜ உலகத்திலி ருந்து துண்டித்து, மெய்நிகர் உலகில் அடைத்து வைப்பது. நீங்கள் எப்போதும் கோபமாகவும், பயத்தோடும், குழப் பத்தோடும் இருக்க வேண்டும்.” என்பதுதான் என்றார்.
புதிய டிஜிட்டல் காலனித்துவம்
அந்த நேரத்தில் ரஷ்ய மீடியா நிபுணர் டாரியா யூரியேவா எழுந்து பேசினார். அவரது வார்த்தைகள் இன்னும் அதிர்ச்சி யாக இருந்தன: “200 ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேயர்கள் நமது தங்கத்தை, வைரத்தை, நமது செல்வங்களை எடுத்துச் சென்றனர். இன்று அமெரிக்கக் கம்பனிகள் (Google, Face book, Amazon) நமது தரவுகளை, நமது கவனத்தை, நமது சிந்தனையையே எடுத்துச் செல்கின்றன!” “மனக் கட்டுப்பாட்டுக்கான முக்கியப் போர் சமூக ஊட கங்களில் நடைபெறுகிறது. Algorithm-கள் பெருகிய முறை யில் அதிநவீனமாகி, சூழ்ச்சியைக் கண்டறிவது கடினமா கிறது.” என்றார். தொழில் நுட்ப வளர்ச்சியை முதலாளித்துவ நாடுகன் கட்டுப்பாட்டிலும், பெரும் நிறுவனங்களின் கைகளி லும் இருக்கும் போது மனிதனை எப்படி தொழில்நுட்பத் திற்கான நுகர்வுப் பொருட்களாக மாற்றுகின்றனர் என்பதை சிந்தனையில் நிறுத்திய போது இதற்கு மாற்று என்ன என்ற கேள்வி எழுந்தது.
நம்பிக்கையின் விளக்குகள்...
மாலை அமர்வில் மிகவும் ஆர்வமுட்டும் தகவல் வந்தது. சிஸ்காம் (SISCOM)என்ற மெசேஜிங் ஆப் பற்றிய விவரம்! வெனிசுலா, மெக்சிகோ, கியூபா, டொமினிகன், பிரேசில் நாடுகளின் டெவலப்பர்கள் கூட்டாக உருவாக்கிய இந்த ஆப், WhatsApp-க்கு பதிலான லத்தீன் அமெரிக்க மாற்றாகச் செயல்படுகிறது. அமெரிக்கக் கம்பனிகளின் கட்டுப்பாட்டில் இல்லை. மக்களின் தரவுகளை விற்பனை செய்வதில்லை.லத்தீன் அமெரிக்க நாடுகளின் கூட்டுச் சொத்து. மக்களை ஒன்றி ணைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது என்ற வுடன்.. நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகள் தென்பட்டன.
எதிர்ப்பின் குரல் –டெலிசூர்...
ஃபிடல் காஸ்ட்ரோமற்றும்ஹியூகோ சாவேஸ் 20 ஆண்டுகளுக்கு முன்பு சிஎன்என், பிபிசி போன்ற மேற்கத்திய ஊடகங்களுக்கு மாற்றாக உருவாக்கிய இந்த டெலிசூர சேனல், இன்று லத்தீன் அமெரிக்காவின் குரலாக ஒலிக்கிறது. இதில் என்ன வித்தியாசம் இருக்கிறது என்றால், லத்தீன் அமெரிக்க மக்களின் பார்வையில் செய்திகள். மேற்கத்திய ஊடகங்களின் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்துதல். மக்களின் போராட்டங்களையும் வெற்றிகளையும் முன்னிலைப் படுத்துதல் இதுதான் இன்று அமெரிக்க ஏகாதிபத்தி யத்தின் Hybrid War இல் இருந்து வெனிசுலாவை பாது காத்து வருகிறது. அதையும் முறியடிக்க சிஐஏ மூலம் அமெரிக்கா தொடர்ந்து முயற்சித்து வருகிறது என்பதையும் டெலிசூர் அறிந்தே வைத்திருக்கிறது என்பது அவர்களின் பேச்சுகளில் இருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.
டிஜிட்டல் போராளிகள்...
மூன்றாம் நாள் புருனோ லோனாட்டி என்ற அர்ஜெண்டி னாவின் இளைஞர் மேடைக்கு வந்தார். அவர் ஒரு “இன்ஃப்ளுயன்சர்” - ஆனால் விளம்பரங்களுக்காக அல்ல, சமூக நீதிக்காக! புருனோ 12 நண்பர்களோடு சேர்ந்து “சமூக நீதி லீக்” உருவாக்கியுள்ளார். அவர்கள் கூட்டாக ஒரு மில்லியன் பேரை சென்றடைகின்றனர். அவர்கள் செய்வதுஉண்மையான செய்திகளைப் பரப்புதல். பெரிய கம்பனிகளின் சூழ்ச்சிகளை அம்பலப் படுத்துதல். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல். ஒன்றாக இணைந்து வேலை செய்தல் என்பதை முன்னெடுத்து வருகின்றனர். நிறைவாக புருனோ “நாங்கள் பணத்திற்காக உள்ளடக்கத்தை (Content) உருவாக்குவதில்லை,”. ”நாங்கள் மக்களின் விழிப்புணர்வுக்காக, நீதிக்காக உள்ள டக்கத்தை (Content) உருவாக்குகிறோம்” என்று கூறினார். என் மனதில் இந்தியா.. கருத்தரங்கத்தின் நிறைவு நாளில் எனக்குள் இந்தி யாவை பற்றிய சிந்தனையே மேலோங்கி நின்றது. நமது நாட்டில் சொந்த சமூக ஊடக தளங்கள் (WhatsApp, Facebook, Instagram எல்லாம் அமெரிக்காவிடம் இருக்கிறது) பெரிய அளவில் இல்லை. 98 சதவிகித மக்கள் அயல்நாடுகளின் சமூக ஊடகங்களையே பயன்படுத்தி வருகின்றனர். நமது நாட்டில் உள்நாட்டு மொழிகளில் செயல்படும் ஏஐ (AI) அமைப்புகள் பெரிய அளவில் இல்லை. அதனை உருவாக்கும் கட்டமைப்பும் இதுவரை உருவாக்கப்பட வில்லை. அமெரிக்க சிந்தனையில் உருவான சமூக ஊட கங்கள் மற்றும் ஏஐ களுக்கு நாம் அடிமையாக இருக்கி றோம். டிஜிட்டல் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வில் நாம் எங்கே இருக்கிறோம் என்ற கவலை காரிருளாக சிந்தனை யில் சூழ்ந்தது. நீண்ட சிந்தனைக்கு பின்.. “அமெரிக்க டெக் ஜாம்பவான்கள் நம்மைக் கட்டுப்படுத்தி வருகிறார்கள். அது முக்கியமில்லை, நாமும் லத்தின் அமெரிக்க இடதுசாரிகள் வழியில் சென்றால் நம் மக்களும் டிஜிட்டல் காலனித்துவத்திலிருந்து விடுதலை பெற முடியும் என்ற நம்பிக்கை உருவானது. அப்படியே எதிரே இருந்த பேனரில் என் கண்கள் பதிந்தன.. “நாம் வலைப்பின்னல்களை நெய்யும் மக்கள்” (We Are The People Who Weave Networks). இந்த வார்த்தைகள் எனக்கு ஒரு ஆழமான உணர்வை ஏற்படுத்தின. டிஜிட்டல் உலகம் தானாக நடக்கும் ஒன்று அல்ல - நாம் செயலில் உருவாக்கும் ஒன்று. நமது எதிர் காலத்தை நாமே வடிவமைக்கலாம்.
பயணம் நிறைவு...