articles

img

ஆர்எஸ்எஸ் சதித்திட்டம் - அம்பலமாகிறது இங்கே - எஸ்.பாலா

ஆர்எஸ்எஸ் சதித்திட்டம் - அம்பலமாகிறது இங்கே! 

மோடி அரசால் அமலாக்  கப்படும் இந்துத் துவா நிகழ்ச்சிநிரலை விளக்கக்கூடிய முறையில் எழுதப் பட்டுள்ள ஐந்து கட்டுரைகளின் தொகுப்புதான், ‘ஓய்ந்திருக்க லாகாது தோழா’ எனும் நூல். மார்க்சிய சிந்தனையாளரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கட்டுப் பாட்டுக் குழுவின் தலைவருமான ஜி.ராமகிருஷ்ணன் எழுதியுள்ள இந்நூல், மனுவாதத்தை உயர்த்திப் பிடித்து இந்தியாவை இந்துராஷ்டிர மாக மாற்றுவதற்கான ஆர்எஸ் எஸ்இன் செயல் திட்டத்தை அம்பலப் படுத்துகிறது.  இந்துத்துவ கருத்தியலை மக்க ளின் சிந்தனையாக மாற்ற புதிய புதிய திட்டங்களை உருவாக்கி வரு கின்றனர். இதன் ஆபத்துகளையும், அதற்கு பின்னால் இருக்கக்கூடிய சதி திட்டங்களையும் புரிந்து கொள்வ தற்கு மிக முக்கியமான நூலாக அமைந்துள்ளது.  புதிய கல்விக் கொள்கையின் உள்நோக்கம்  கல்வியை மையப்படுத்துதல், வணிகமயமாக்குதல், காவிமய மாக்குதல் ஆகியவற்றை நோக்க மாகக் கொண்டது புதிய கல்விக் கொள்கை. நவீன சமூகத்தில் மனு வாதத்தின் அடிப்படையிலான குரு குல கல்விக்கு அங்கீகாரம் அளிக்கக் கூடிய முறையில் உருவாக்கப் பட்டுள்ளது. பன்னிரண்டாவது முடித்த பின்னர் ஐந்து வருடங்கள் குருகுல முறையில் படித்தாலும் ஐஐடியில் பிஎச்டி சேர்வதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இது யாரை அங்கீகரித்து, யாருக்கான வாய்ப்பை உருவாக்குகிறது?  மாநில பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி கல்வியை படிக்க வேண்டும் என்று சொன்னாலும் தேசிய தேர்வு முகமை நடத்தக்கூடிய தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று வரையறையை உருவாக்கு கிறது. இதன் மூலமாக ஒட்டுமொத்த  கல்வியையும் மையப்படுத்துவதற் கான ஏற்பாட்டை தீவிரமாக மேற் கொள்கிறது.  விஸ்வகர்மா யோஜனா - சாதியத்தின் புனரமைப்பு  பாரம்பரியம் என்ற பெயரால் சாதியம் மீண்டும் சமூகத்தில் கோலோச்சுவதற்கான ஏற்பாட்டை நோக்கி விஸ்வகர்மா யோஜனா திட்டம் மோடியால் அறிவிக்கப்பட்டுள்ளது. குலத் தொழிலை மேற்கொள்வதற்கு கடன் வசதி செய்து தருவதன் மூலம் மனுவாதத்தை புனரமைப்பதற்கு உரிய ஏற்பாட்டை செய்து தருகிறது.  அறிவிக்கப்படாத அவசரநிலை  50 ஆண்டுகால எமர்ஜென்சி காலத்திற்குப் பின்னால் அறிவிக்கப் படாத அவசர நிலை மோடி அரசாங் கம் கொண்டு வந்துள்ளது. ஆனால் அவசர நிலையின் 50 ஆண்டு என்ற தலைப்பில் எத்தகைய பொய்யான தகவல்களை நாட்டு மக்களுக்கு மத்தியில் பரப்புகின்றனர் என்பதை மிகச் சிறப்பாக விளக்கக்கூடிய கட்டு ரை அடங்கியுள்ளது.  செயல்பாட்டுக்கான வழிகாட்டுதல்  காரல் மார்க்ஸ் குறிப்பிட்டதை போல உலகை பல வழிகளில் தத்துவ  ஞானிகள் விளக்கியுள்ளனர். ஆனால் மாற்றுவது என்பதே இன் றைய பணியாகும். அதையே ஓய்ந்தி ருக்கலாகாது தோழா என்னும் தலைப் பில் அரசியல் சமகால நெருக்கடியை விளக்கி சிறப்பான கட்டுரைகளை நூலாசிரியர் தந்துள்ளார்.  மோடி அரசாங்கத்தின் திட்டங்கள் ஜனநாயகம், சமத்துவம், மதச்சார் பின்மை ஆகியவற்றை மறுதலித்து மதவெறி, ஏற்றத்தாழ்வு, உரிமை பறிப்பு ஆகிய வற்றை முன்னெடுத்து வருகிறது என்பதை இந்நூல் தெளிவாக்கு கிறது.  தனித்தனி கட்டுரையாக இருந்தாலும் ஒருசேர படிக்கும்போது அதில் ஆழமான புரிதலும் செயல் பாட்டுக்கான வழிகாட்டுதலும் கிடைக்கிறது. இந்துத்துவா கார்ப்ப ரேட் கருத்தியலை முறியடிக்க ஒவ்வொரு ஜனநாயக இயக்கத்தைச் சார்ந்தவர்களும் வாசிக்க வேண்டிய அவசிய நூலாகும்.  ஓய்ந்திருக்கலாகாது தோழா ஆசிரியர்: ஜி.ராமகிருஷ்ணன்