“குழந்தைகளின் நெற்றியில் சுடும் புதிய ஹிட்லர் நேதன்யாகு!”
காசாவில் இரண்டு ஆண்டு களுக்கு மேலாக மனித படு கொலை நடந்து கொண்டிரு க்கிறது. ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிரான நடவடிக்கை என்று கூறி, குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோரை இஸ்ரேல் அன்றாடம் படுகொலை செய்கிறது. இந்த படுகொலைக்கு எதிராக உலகம் முழுவதும் சுதந்திர பாலஸ்தீனம் அமைய வேண்டும், காசா இனப்படுகொலையைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தி லட்சக்கணக்கான மக்கள் பிரம்மாண்ட ஆதரவு இயக்கங்களை நடத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில்தான் இந்தியா முழுவதும் அனைத்து மாநில தலைநகரங்களிலும் அக்டோபர் மாதம் முழுவதும் ஒருமைப்பாடு இயக்கம் நடைபெறுகிறது. பாலஸ்தீன மக்கள் ஒரு கைப்பிடி சோற்றுக்காக உயிரைப் பணயம் வைக்கக் கூடிய அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளது. உணவுப் பொருட்கள் வழங்குவதாக அறிவித்து மக்களை வரிசையில் நிற்க வைத்து இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கியால் சுடுகிறது, குண்டு வீசுகிறது. இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு புதிய ஹிட்லர் என்று சொல்லத்தக்க அளவிற்கு கொடூரமான மனித படுகொலையை நிகழ்த்துகிறார். அவரது அனைத்து விதமான மனித உரிமை மீறல், யுத்த நடவடிக்கைகளுக்கு அமெரிக்க அதிபர் ஆதரவளிக்கிறார். குழந்தையைக் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதுபோல, ஒரு பக்கம் இஸ்ரேலுக்கு ஆதரவளித்துவிட்டு, மறு பக்கம் சமாதானத்தை உருவாக்க அமைதிப் பேச்சு வார்த்தை நடத்துவதாக நாடகம் நடத்துகிறார். நாம் கோருவது சுதந்திரமான பாலஸ்தீனம் - அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள அடங்கி கிடக்கும் பாலஸ்தீனத்தை அல்ல. பள்ளிக்குச் செல்ல வேண்டிய குழந்தைகள், உணவுப் பொருட்களுக் காக வாரக்கணக்கில் காத்துக் கிடக்கின்றன. குழந் தைகளின் நெற்றியில் சுடுகிறார்கள். சர்வதேச சட்டங்களை, ஐ.நா.வை மீறி இதுவரை காணாத கொடூர யுத்தத்தை இஸ்ரேல் நடத்துகிறது. இத்த கைய இஸ்ரேல் நாட்டுடன் ஒன்றிய அரசு, கார்ப்ப ரேட் நிறுவனங்கள் செய்துள்ள பொருளாதார ஒப்பந்த ங்கள், உடன்படிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான நிலைபாட்டை ஒன்றிய அரசு எடுக்க வேண்டும். அங்கு அமைதி நிலவ வேண்டும். பாலஸ்தீன குழந்தைகளின் முகத்தில் புன்னகை பூக்க வேண் டும்.
