மோடியின் இந்துத்துவாவும் நேதன்யாகுவின் சியோனிசமும் சித்தாந்த நண்பர்கள்!
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். அது சட்டமன்றத்தின் ஒருமித்த கருத்தாகவும், பாலஸ்தீனத்திற்கு மக்கள் தெரிவிக்கும் ஒருமைப்பாடாகவும் மாறும். காசாப் பகுதி யில் இனப்படுகொலை, மனிதப் பேரழிவு நடக்கிறது. பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலம் பகுதியிலும் தாக்குதல் நடத்துகின்றனர். விடிந்தால் எழுந்திருக்க முடியுமா என்று தெரியாத நிலையில் அங்கு மக்கள் உள்ளனர். யுத்த மதவெறி சார்ந்த சியோனிசம் என்ற தத்துவத்தை இஸ்ரேல் அரசு கடைப் பிடிக்கிறது. அதன் காரணமாகத்தான் இந்த பேரழிவு நடக்கிறது. இதற்குப் பின்ன ணியில் அமெரிக்க ஏகாதிபத்தியம் உள்ளது. மேற்காசியப் பகுதியில் அரசு மக்களின் தேசிய எழுச்சி மீண்டும் உரு வாகக் கூடாது, அந்தப் பகுதியில் உள்ள இயற்கை வளங்களை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், தொடர்ச்சியாகப் பதற்ற நிலையை உருவாக்கி, போர் களை ஏற்படுத்தி, அதன் மூலம் ஆயுதத் தளவாட விற்பனையையும் லாபத்தை யும் அதிகரிக்க வேண்டும் என்பதுதான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அரசியல் நோக்கம். அதற்கு அடியாளாக இஸ்ரேல் உள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டுக் கொலையாளிகளாக உள்ளனர். 2023 அக்டோபர் 7க்குப் பிறகு காய மடைந்த 45 ஆயிரம் குழந்தைகளில் பாதிப் பேர் ஊனமுற்றவர்களாக மாறியுள்ளனர். ஒரு பகுதியினர் நிரந்தர மாற்றுத்திறனாளிகளாக மாறியுள்ளனர். பாலஸ்தீனத் தின் விவசாயமும் அழிக்கப் பட்டுள்ளது. உணவைக் கொடூர ஆயுதமாக இஸ்ரேல் பயன் படுத்துகிறது. இஸ்ரேல் பயன் படுத்தும் ஆயுதங்களில் ஒரு பகுதி இந்தியாவில் தயாரி க்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டவையாக உள்ளன. இதனை ஒன்றிய அரசு தடுக்க வேண்டும். தமிழக அரசு நடத்தும் டிஃபென்ஸ் காரிடார் நிகழ்வில், இஸ்ரேலிய நிறுவனங்களுடன் இணைந்து செயல் படும் இந்திய நிறுவனங்கள் பங்கேற்றுள் ளன. இஸ்ரேலிய நிறுவனங்களுடன் இந்திய நிறுவனங்கள் இணைந்து செயல்படக் கூடாது என்று ஒன்றிய அரசை நிர்பந்திக்க வேண்டும். மோடி பின்பற்றும் இந்துத்துவாவும், நேதன்யாகு பின்பற்றும் சியோனி சமும் சித்தாந்த ரீதியாக நண்பர்கள். மோடிக்கும் பெஞ்சமின் நேதன்யாகு விற்கும் இடையே உள்ள சித்தாந்த நட்பைக் கைவிட நிர்பந்திக்க வேண்டும். இந்திய அரசு தனது நலனைக் கருத்தில் கொள்ளாமல், அமெரிக்க ஏகாதி பத்தியத்திற்குச் சார்பு நிலை எடுக்கும் கீழ்த்தரமான கூட்டாளியாக மாறும் கொள்கையைக் கடைப்பிடிக்கிறது. வெகுமக்களின் அழுத்தத்தின் வாயி லாகவே இந்திய அரசின் நிலைபாட்டில் மாற்றத்தை உருவாக்குவோம்.