articles

img

திருநந்திக்கரை கிராம அறிவியல் திருவிழா சாதனை முதல் களப்பணிவரை சி.முருகேசன்

திருநந்திக்கரை கிராம அறிவியல் திருவிழா சாதனை முதல் களப்பணிவரை

பள்ளிகள், கல்லூரிகளில், பணியாற்றும் இடங்களில் சகாக்களை பாராட்டுவதும் பிரபலங்களுக்கு பாராட்டு விழா நடத்துவதும் இயல்பானவை. ஆனால், ஒரு கிராமத்தில் திறமையாளர்களை, சாதனையாளர்களை மட்டுமல்லாது மக்களுக்கான அன்றாட சேவைகளில் ஈடுபடுவோரை பாராட்டுவது அரிதானது. 16 ஆண்டுகளாக வெவ்வேறு துறைகளின் சாதனை அல்லது சேவைகளை பாராட்டுவது அரிதிலும் அரிதான நிகழ்வு. அப்படி ஒரு அரிய நிகழ்வை ஆண்டு தோறும் நடத்தி வருகிறது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருநந்திக்கரை கிளை. கடந்த ஆகஸ்ட் 16, 17 ஆகிய இரண்டு நாட்கள் கிராம அறிவியல் திருவிழா  நடத்தி பலரை பாராட்டி சிறப்பு செய்தி ருக்கிறது அறிவியில் இயக்கம்.  ஆகஸ்ட் 15 சுதந்திர தின கொடி யேற்றத்துடன் அறிவியல் திருவிழா களை கட்டத்தொடங்கியது. தொடர்ந்து சது ரங்கம், கேரம், வினாடி வினா போன்ற உள்  அரங்க போட்டிகள் நடைபெற்றன. வெகு மக்கள் பங்கேற்பை நோக்கமாக கொண்ட விளம்பர நிகழ்வாக நடந்த இயற்கை ஓவியம் தீட்டுதலில் 30 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 40க்கும் மேற்பட்ட குடும்பத்தி னர் தங்களது வீடுகளில் சமைத்த உணவை  காட்சிப்படுத்தினர். இதில் காய்கறிகள், மீன்,  இறைச்சி வகைகள் என வண்ணமய மான படைப்புகள் இந்திய பன்முக கலாச்சா ரத்தையும், பழக்க வழக்கங்களையும் சுட்டிக்காட்டுவதாக அமைந்திருந்தது. பெண்களுக்கான வேலைவாய்ப்பு மையத்தை பீல்ஸ் நிறுவன தலைவர் ஜி.முரளீ தரன், செயலாளர் ஆகியோர் பேராசிரியர் த.மனோகர ஜஸ்டஸ் துவக்கி வைத்தனர். வீட்டு முற்றங்களை அலங்கரித்த பூச்செடி களைக் கொண்டு அமைக்கப்பட்ட ஸ்ட்றீட் கார்டன். போருக்கு எதிரான வாசகம் எழுதும்  இயக்கம், ஸ்ட்றீட் சயன்ஸ் எக்ஸ்போ, புத்த கம் மற்றும் ஓவிய கண்காட்சி, போதைப் பழக்கத்திலிருந்து மீண்டோர் முன்னிலை வகித்த பெருநடை, கலை நிகழ்ச்சிகள்…. என ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  திருநந்திக்கரையைச் சேர்ந்த 22 செவிலியர்கள், 16 ஆசிரியர்கள், சுகா தாரப் பணியாளர்கள், மின்துறை களப்பணி யாளர்கள், மும்பை ஐஐடியில்  முனைவர் பட்டம் பெற்ற ஆனந்த் கார்த்திகேயன், சி.ஏ.  தேர்வில் சாதனை புரிந்த அம்ஜித் விஜய் பாராட்டப்பட்டனர். வறிய நிலையிலிருந்து போட்டித்தேர்வு எழதி நீதிமன்ற ஊழியரான யு.எம்.சுரேகா,  ஓய்வு பெற்ற பி.எப். அதிகாரி கிருஷ்ண குமார், ஓய்வு பெற்ற ஆசிரயை ரோஸி, நூலகர் கார்த்திகேயன்,  உள்ளிட்ட ஏராளமா னோருக்கு பாராட்டு தெரிவித்து நினை வுப்பரிசுகள் வழங்கப்பட்டன.  சிறந்த உடற்பயிற்சி மற்றும் உடற்கட்ட மைப்புக்காக எஸ்.தினேஷ் (பயிற்றுநர்), எம்.அனீஷ் (பயிற்சியாளர்), உடற்பயிற்சி யில் முன்மாதிரி எஸ்.சிவகுமார், ஸ்ரீஜித்,  விஷ்ணுணண, 4 முறை குமரி மாவட்ட ஆண ழகன் பட்டம் பெற்றவரும் ராணுவத்தின் பாராசூர் சாகசத்தில் 32 முறை சாதனை படைத்த ஏ.அஜித் ஆகியோரை பாராட்டி நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை யை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் துவக்கப்பட்டதுதான் கிராம அறிவியல் திருவிழா. அது இன்று பல்வகை திறன்களை யும், சாதனைகளையும், சேவைகளையும் சிறப்பிக்கும் விழாவாக பரிணமித்துள்ளது. அரசுப்பள்ளியில் முதல்வகுப்பில் சேர்க்கை பெற்ற பிஞ்சுக்குழந்தைகள் தமது பெற்றோ ருடன் மேடையேறி பாராட்டையும் பரிசுகளை யும் பெற்றுக்கொண்டனர். 2024-2025  கல்வியாண்டில் திருநந்திக்கரை அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களக்கும், அரசு மறறும் தனியார் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் படித்து  வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பாராட்டு விழாவுக்கு கிராம வளர்ச்சி மைய தலைவர் பி.டி.திவாகரன் தலைமை வகித்தார். திற்பரப்பு பேரூராட்சி வார்டு உறுப்பினர் பி.ஷீஜாசந்திரன், பொருளாளர் டி.கார்த்திகேயன் உறுதிமொழி வாசித்தார். மலர் அமைப்பின் மாவட்ட தலைவர் ஏ.விஜயலட்சுமி, அறிவியல் இயக்க மாநில செயலாளர் ஜி.ஜினிதா, நிர்வாகி கள் பேபி, ஆகியோர் கல்வி தீபம் ஏற்றினர்.  அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் சிவஸ்ரீரமேஷ், திருவனந்தபுரம் மகாத்மா காந்தி கல்லூரி துணை பேராசிரியர் டாக்டர் வைஷாகன் தம்பி சிறப்புரையாற்றினார். பேரூராட்சி துணை தலைவர் எஸ்.சி.ஸ்டாலின்தாஸ், நிர்வாகிகள் டி.ஷாஜி, எஸ்.அபிலாஷ், எம்.ஏ.பிபினிஷா பங்கேற்ற னர்.