articles

img

உலகம் பிரமித்துப் பார்க்கும் சீனாவின் வளர்ச்சி - எம்.ஏ.பேபி

உலகம் பிரமித்துப் பார்க்கும் சீனாவின் வளர்ச்சி

உலகத்திலும் சீனாவிலும் அசாதார ணமான காட்சிகள் அரங்கேறிக் ்கொண்டிருக்கும் நேரத்தில், நாங்கள் ஆறு பேர்களைக்கொண்ட கட்சியின் தூதுக்குழு, செப் டம்பர் 23 முதல் 30 வரை சீனாவுக்கு விஜயம் செய்தது. இக்குழு சீனாவில் பெய்ஜிங், ஹூபே மற்றும் ஜெஜியாங் மாகாணங்களுக்கு விஜயம் செய்தது.

இராட்சத முட்டை

நாற்பது ஆண்டுகளுக்கு முன், 1985ஆம் ஆண்டில்,  சர்வதேச இளைஞர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக நான் முதன்முதலாக சீனாவிற்குச் சென்றிருந்தேன். அப்போது இருந்த சீனாவிற்கும் இப்போதுள்ள சீனாவிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பிர மிக்கத்தக்கவைகளாகும். பெய்ஜிங்கின் தியானென் மென் சதுக்கத்தில் சுரங்கத்தில் அமைந்துள்ள கலாச்சார வளாகம், ஆசியாவின் மிகப்பெரிய நாடக வளாகமாகும். அதன் அதியற்புத கட்டடக்கலை நுட்ப வசதிகள் மிகவும் குறிப்பிடத்தக்கவைகளாகும். ஒரே நேரத்தில் நான்கு அல்லது ஐந்து நிகழ்வுகளை நடத்தக்கூடிய அளவிற்கு திறன் படைத்தவைகளா கும். எனவே மக்கள் “இராட்சத முட்டை” என்று பேச்சு வழக்கில் இதனை அழைக்கின்றனர். இத்தகைய உள் கட்டமைப்பு மேம்பாடு மற்றும் கலாச்சார மேம்பாடு சீனாவின் புதுமைக்கான திறனை வெளிப்படுத்துகிறது. சென்ற முறை நான் வந்திருந்தபோது அந்த மையத்தை வெறுமனே சுற்றி வந்தேன். ஆயினும் இந்த முறை அங்கே ஓர் அற்புதமான வயலின்-கிதார் இசை நிகழ்ச்சியை எங்களால் அனுபவிக்க முடிந்தது.

80 கோடி மக்களின் உயர்வு

2021 சீன கம்யூனிஸ்ட் கட்சி துவக்கப்பட்ட தன் நூற்றாண்டைக் குறிக்கிறது. இதன் கொண்டாட் டங்களின் ஒரு பகுதியாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவின்கீழ், மிகப்பெரிய அளவில் பொது நலத் திட்டம் ஒன்று அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இது உலகளாவிய அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதன்படி உலக வங்கியால் வரையறுக்கப்பட்டபடி சீனா 80 கோடி மக்களை வறுமைக்கோட்டிற்கு மேலே உயர்த்தி இருக்கிறது. இந்த சமயத்தில் கேரள அனு பவம் ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். சீனா வின் இந்தத் திட்டங்களிலிருந்து உத்வேகம் பெற்று கேரளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு வறுமையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது. நவம்பர் மாதத்திற்குள் கேரளம் அதனைப் பூர்த்தி செய்திடும். அதன்மூலம் இந்தியா வில் வறுமையை ஒழித்த மாநிலத்தில் முதல் மாநில மாக கேரளம் மாறும்.

கட்சி அருங்காட்சியகம்

நூற்றாண்டு விழாவில், ஜூலை 15 அன்று  சீன  கம்யூனிஸ்ட் கட்சியின் அருங்காட்சியகம் ஒன்று பெய்ஜிங்கில் திறக்கப்பட்டுள்ளது. வளர்ந்துள்ள அறி வியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஒரு நாட்டின் வரலாற்றையும் ஒரு கட்சியின் வரலாற்றை யும் எவ்வாறு மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல முடி யும் என்பதற்கு இந்த அருங்காட்சியகம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்த அருங்காட்சியகத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உருவான விதம் முதல் இன் றைய சாதனைகள் வரையிலுமான கடந்த நூற்றாண்டு கால பயணத்தின் கதை, டிஜிட்டல் கருவிகளின் உத வியுடன் மிகவும் சிறப்பாக அளிக்கப்பட்டிருக்கிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, தொடக்க காலத்தில் ஏகாதி பத்திய மற்றும் காலனித்துவ சக்திகளிடமிருந்து நாட்டை விடுவிப்பதற்காக மேற்கொண்ட போராட் டங்கள், பின்னர் புரட்சிக்குப்பின் நாட்டை முன்னேற்று வதற்காகப் பல்வேறு காலகட்டங்களில் மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கைகள் விளக்கப்பட்டுள்ளன. மாசே துங்கின் தலைமைத்துவ சகாப்தம், கோமிங்டாங்கு டன் கூட்டணி, ஏகாதிபத்திய மற்றும் காலனித்துவ சக்தி களிடமிருந்து நாட்டை விடுவிப்பதற்கான சீனக் கம்யூ னிஸ்ட் கட்சியின் போராட்டங்கள், நெடும் பயணம், பெரும் தியாகங்கள் மற்றும் போராட்டங்கள் மூலம் புரட்சி பெற்ற மகத்தான வெற்றி, அதன் தொடக்கத்திலி ருந்தே பல்வேறு காலகட்டங்களில் ஏற்றுக்கொள்ளப் பட்ட நடவடிக்கைகள் விளக்கப்பட்டுள்ளன.  டெங் சியோ பிங் தலைமையின் கீழ் நவீனமயமாக்கல் முயற்சிகள், 2012க்குப் பின்னர் ஜியாங் ஜெமின் மற்றும் ஹு ஜின்டாவோ தலைமையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் ஆகியவற்றையும் அவை எடுத்துக் காட்டுகின்றன.

மார்க்சின் குறிப்பேடு,  மாவோவின் கையெழுத்துப் பிரதி...

இந்த அருங்காட்சியகத்தில் 4,548 கண்காட்சிப் பொருட்கள் உள்ளன. இவற்றில் கார்ல் மார்க்ஸின் பிரஸ்ஸல்ஸ் குறிப்பேடு, சீன மக்கள் குடியரசு நிறு வப்பட்டதை அறிவிக்கும் போது மாசேதுங் அணிந் திருந்த கோட் மற்றும் தொப்பி, மாவோவின் கையால் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகள், சென் வாங்டா வோவின் கம்யூனிஸ்ட் அறிக்கையின் சீன மொழி பெயர்ப்பு, நீண்ட பயணத்தின்போது பயன்படுத்தப் பட்ட பெல்ட்டுகள் மற்றும் சீனப் படைகளால் தோற்க டிக்கப்பட்ட அமெரிக்க இராணுவத்தின் 31ஆவது காலாட்படை படைப்பிரிவிடமிருந்து கைப்பற்றப்பட்ட கொடி ஆகியவையும் அடங்கும். இந்தப் பயணத்தின்போது இரு கட்சிக்கும் இடையே பல விவாதங்கள் நடைபெற்றன. அவற்றில் மிக முக்கியமானது சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலை மையின் பிரதிநிதிகள் குழுவுடன்,  அவர்களின் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் லீ சூலேயுடன் நடத்தப்பட்ட விவாதங்களாகும். இந்த சந்திப்பு களின்போது சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான ஆழமான மற்றும் நீண்டகால உறவு மீண்டும் உறுதிப்படுத்தப் பட்டது.  ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் கீழ் உள்ள அமெரிக்க அரசு, ஓர் ஒற்றை துருவ உலகத்தை அதன் ஆதிக்கத்தின் கீழ் திணிக்க முயற்சிக்கிறது என்பதை இரு கட்சிகளும் அங்கீகரித்தன.

இந்திய, சீன உறவு மேம்பாடு...

இதை எதிர்த்திட ‘தெற்கத்திய வளரும் நாடுகள்’ ஒன்றிணைந்து நிற்க வேண்டும். இந்தப் பின்ன ணியில், தியான்ஜினில் நடைபெற்ற 2025 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்  உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றது குறிப்பாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த ஆண்டு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத் தப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ஒத்துழைப்புக்கு அப்பால், இரு நாடுகளும் ‘பிரிக்ஸ்’ (‘BRICS’)க்குள் தங்கள் பங்கை வகிக்கின்றன. வரும் ஆண்டுகளில், இந்தியாவும் சீனாவும் ‘பிரிக்ஸ்’ தலைவர் பதவியை மாறி மாறி வகிக்க உள்ளன. இந்தியாவும் சீனாவும் தங்களுக்கு இடையேயான பிரச்சனைகளை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்பதை விவாதங் கள் வலியுறுத்தின. இந்திய-சீன உறவுகளை மேம் படுத்துவது இரு நாடுகளுக்கும் பயனளிப்பது மட்டு மல்லாமல், உலகளாவிய அமைதி மற்றும் முன்னேற் றத்திற்கும் பங்களிக்கும். எனவே, எல்லையில் அதிகரித்து வரும் பதற்றங்க ளைத் தணிக்க இரு தரப்பினரும் பொறுமையாகவும் கவனம் செலுத்தியும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எங்கள் வருகையின் போது, இந்தியா விற்கும் சீனாவிற்கும் இடையே நேரடி விமானங்களை மீண்டும் தொடங்குவது போன்ற சில குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் நிகழ்ந்தது தற்செயலானதே. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் “வரி பயங்கரவாதம்” மூலம் உலகெங்கிலும் உள்ள கிட்டத் தட்ட அனைத்து நாடுகளையும் தாக்கி அச்சுறுத்தல் களை விடுத்தபோது, சீனா அதனை எதிர்ப்பதில் தளர்வில்லாமல் உறுதியாக நின்றது. இது சீனப் பொரு ளாதாரத்தால் பெறப்பட்ட வலிமை மற்றும் சீன கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் பார்வையை அடிப்படையா கக் கொண்டதாகும். சர்வதேச உறவுகளைத் தவிர, இந்தியாவும் சீனாவும் முக்கிய பொருளாதாரங்க ளைக் கொண்ட பிராந்திய சூழ்நிலை குறித்தும் எங்கள் விவாதங்கள் நடைபெற்றன.

மாவோ அருங்காட்சியகத்தில்...

நாங்கள், மாசேதுங்கின் அருங்காட்சியகத்திற்குச் சென்றது ஒரு மறக்க முடியாத நிகழ்வு. அங்கு பதப்படுத்தப் பட்ட அவருடைய உடல் அழுகாமல் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு நாங்கள் மரியாதை செலுத்தினோம். அங்குள்ள அதிகாரப்பூர்வ பார்வை யாளர் புத்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சில வரிகளை எழுதுவது ஓர் ஆழமான அனு பவமாக இருந்தது. மாசேதுங் மற்றும் பிறரால் வழிநடத்தப்பட்ட சீனத் தோழர்களின் துணிச்சல், செங்கொடியை உயர்த்திப் பிடித்து, சுரண்டலற்ற உலகத்தைப் படைப்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் என்றென்றும் உத்வேகத்தை அளித்திடும்.