மக்கள் போராட்டத்தின் வெற்றியைக் கொண்டாட பாஜகவுக்கு அருகதை இல்லை
பறவைகள் மீதும் பல்லுயிர்கள் மீதும் பாசம் கொண்ட கிராமம் அரிட்டாபட்டி. பெரும்பா லும் அங்கு ஒலிபெருக்கி கட்ட மாட்டார்கள். ஆனால் இப்போது கிராம மந்தையில் கட்டப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கி இறங்கவே இல்லை. 60 நாட்களுக் கும் மேலாக அது அறைகூவி அழைத்துக் கொண்டே இருந்தது. ஒன்றிய பாஜக அரசின் ஒற்றை அறிவிப்பு பறவைகளிடம் கூட நேசம் கொண்ட அந்தக் கிரா மத்தின் சமநிலையைக் குலைத்துப் போட்டது. ஏற்றப் பட்ட ஒலிபெருக்கிகள் ஒலித்த ஒரே கோரிக்கை “டங் ஸ்டன் சுரங்கம் வேண்டாம்” என்பதே. மதுரை மாவட்டத்தின் அரிட்டாபட்டியில் பற்ற வைத்த நெருப்பு டங்ஸ்டன் கனிமத்தொகுதியாக அறி விக்கப்பட்ட அனைத்துக் கிராமங்களுக்கும் பற்றிப் பரவியது. அ.வல்லாளபட்டி கிராமத்தின் வெள்ளிமலை யாண்டி திருக்கோவில் போராட்டக்களத்தின் மையப் புள்ளி ஆனது. கிராமக் காவல் தெய்வக் கோவில்க ளின் ஒலிபெருக்கிகளும் கிராமத்தைக் காக்கும் போ ராட்ட ஒலிபெருக்கிகளாகின. கோவில் மண்டபங்க ளும், கிராமச் சாவடிகளும், மந்தைத் திடல்களும் மக்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து டங்ஸ்டன் சுரங் கத்திற்கு எதிரான அரசியலை அகமும் புறமுமாய் அலசி எடுக்கும் அரசியல் களங்களாயின. வறியவர்க ளுக்கு உணவளித்த கிடாரிப்பட்டி வள்ளலார் உண வுக்கூடம் போராட்டங்களுக்கு உணவளிக்கும் அன்ன வாசலானது. சமூகங்களுக்கு இடையில் இருந்த இடைவெளி கள் மறைந்து, வேறுபாடுகள் கடந்து டங்ஸ்டன் எதிர்ப்பு உணர்வு ஓங்கி ஒலித்த சமகாலத்தின் சரித்திரப் போர்க் களமாக மேலூர் மாறியது.
ஆபத்தை அறிவித்தது தீக்கதிர் நாளிதழ்
மதுரை மாவட்டம், மேலூர் தாலுகாவில் டங்ஸ்டன் கனிமத்தை வெட்டி எடுப்பதற்கான ஏலத்தில், வேதாந் தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் தேர்வானதாக ஒன்றிய அரசு அறிவித்தது. மதுரை நாயக்கர்பட்டியில் 2,015.51 ஹெக்டேர் பரப்பள வில் டங்ஸ்டன் சுரங்கம் அமைய உள்ளதாக குறிப்பி டப்பட்டது. இதற்கான அறிவிப்பு கடந்த நவம்பர் 7 அன்று வெளியானது. நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதி என வரையறுக்கப்பட்டு சூழ்ச்சியோடு வெளி யிடப்பட்ட திட்டத்தின் ஏல நகல் உத்தரவின் வரைகோ டுகள் எதையும் அறிய முடியாமல் மொத்த மேலூரும் பதைத்துத் தவித்தது. நவம்பர் 18 அன்று சூழலியல் செயல்பாட்டாளர்கள், சுற்றுவட்டார கிராம பொதுமக்க ளின் பிரதிநிதிகள் இணைந்து மதுரை மாவட்ட ஆட்சி யரிடம் இந்தத் திட்டத்தை அரசு ரத்துச் செய்ய வேண்டு மென மனுக் கொடுக்க, அந்த மனுவோடு கூடுதல் விப ரங்களைத் திரட்டி, ஒரு முழு பக்கச்செய்தியாக வெளியிட்டு முதன் முதலில் ஆபத்தை அறிவித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போர்க்குரலாம் தீக்கதிர் நாளேடு.
வரைபடத்தை வெளியிட்ட சு.வெங்கடேசன் எம்.பி.,
நவம்பர் 19 அன்று பெண்ணின் திருமண வயது குறைந்தபட்சம் 18 என்று இருக்கின்ற நிலையில், 2023-2024 ஆம் ஆண்டில் மட்டும் 13 முதல் 19 வயதிலான 14,360 பெண்கள் கருத்தரித்திருப்பதற்கு பாலியல் கல்வி குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததே கார ணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடே சன் வெளியிட்ட முழுமையான அறிக்கை இந்தத் திட்டத்தின் முழு கோரத்தையும் பொதுச் சமூகத்தி ற்கு வெட்ட வெளிச்சமாக்கியது. திட்டத்தின் ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டது முதல் அதன் தீர்க்கமான எல்லைகளை எவரும் அறிந்து கொள்ளவே முடியவில்லை. அதன் மர்மமுடிச்சுகளை ஒன்றிய அரசின் அறிவிப்பில் உள்ள அட்சரேகை, தீர்க்க ரேகை எண்களைக் கொண்டு முதன் முதலில் டங்ஸ் டன் கனிமத் தொகுதி அமைய உள்ள 2015 ஹெக்டேர் பகுதியின் வரைபடத்தை வெளியிட்டார் சு.வெங்கடே சன் எம்.பி., அந்த வரைபடம் தான் இந்தத் சுரங்கத் திற்குள் வரும் கிராமங்களை தெளிவாக வெளிக்கொ ணர்ந்த முதல் ஆதாரமாக மாறியது. அதுவே ஊட கங்கள் இதுவரை பயன்படுத்தி வரும் டங்ஸ்டன் கனிமத் தொகுதி குறித்த வரைபடமும் கூட. இந்த வரைபடமே அ.வல்லாளபட்டி, அரிட்டாபட்டியை சுற்றியுள்ள அனைத்துக் கிராமங்களையும் போராட்டக் களத்தின் தீவிரத்திற்கு கொண்டு வந்தது. அதன் பின் மதுரை மக்களின் பிரதிநிதியாக அவர் நவம்பர் 21 அன்று ஒன்றிய கனிமவளத்துறை அமைச்ச ருக்கு கடிதம் எழுதியதும், நவம்பர் 27 அன்று ஒன்றிய அமைச்சர் கிஷண் ரெட்டியை நேரில் சந்தித்து இந்த ஏலத்தை ரத்து செய்யுமாறு வலியுறுத்தியதும்தான் இந்தப் போராட்ட வடத்தை இழுத்துச் செல்லக் காரணமாயின. இதன் தொடர்ச்சியில் பல்வேறு மக்கள் அமைப்பு கள் இணைந்த ‘கனிமவளக் கொள்ளைக்கு எதிரான கூட்டமைப்பு’ கிராம மக்களைச் சந்தித்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை - டங்ஸ்டன் தொடர்புகள் குறித்த அரசியல் உரையாடலை துவக்கினர். பல கிராமங்க ளில் போராட்டக் குரல் எதிரொலிக்கத் துவங்கியது.
ஊராட்சிகளில் தீர்மானம்
நவம்பர் 22 அன்று கிராம உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, மேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் அரிட்டா பட்டி, மீனாட்சிபுரம், தெற்குதெரு, நரசிங்கம்பட்டி, மாங்குளம், புலிப்பட்டி, எட்டிமங்கலம், வெள்ள ரிப்பட்டி, கிடாரிப்பட்டி, ஆமூர்,கம்பூர், கேசம்பட்டி, கருங் காலக்குடி, அய்யாபட்டி, காச்சிராயன்பட்டி, மதுரை கிழக்கு ஒன்றியத்தில் அரும்பனூர், கொடிக்குளம், சிட்டம்பட்டி, பனைக்குளம், தாமரைப்பட்டி, பூலாம் பட்டி, இடையபட்டி; செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றி யத்தில் திடியன் ஊராட்சி; கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வன்னிவேலம்பட்டி ஊராட்சி உள்ளிட்ட ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்த்து தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. சுரங்கத்தால் நேரடியாக பாதிக்கப்படும் அபாய முள்ள ஊராட்சிகள் மட்டுமல்ல, மற்ற கிராமங்களும் முன்மொழியப்பட்ட சுரங்கத்தை எதிர்த்து, தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தும் தீர்மானத்தை நிறை வேற்றின. அரிட்டாபட்டியில் நடைபெற்ற கிராமசபை யில் கலந்துகொண்ட அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் தமிழக அரசு இந்தத் திட்டத்தை எதிர்ப்பதில் உறுதி யோடு நிற்கும் என உறுதிபடத் தெரிவித்தார்.
முதல்வரின் கடிதமும் பாஜக அரசின் பதிலும்
அதன்பின்னர் மேலூரின் அனைத்து கிராம மக்க ளும், வர்த்தக சபையினரும், பல்வேறு அரசியல் கட்சிக ளும் பங்கேற்ற பெரும் போராட்டம் ஒன்று நடத்தப் பட்டது. அந்தப் போராட்டத்தின் கோரிக்கையாக, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையே பின்னர் தமிழக சட்டமன்றத் தனித் தீர்மானமாக பின்னர் மாறியது. அதன் பின் கடந்த நவம்பர் 29 அன்று பிரதமருக்கு தமிழக முதல்வர் அவர்கள் ஏலத்தை ரத்து செய்யக் கோரி எழுதிய கடிதத்திற்கு ஒன்றிய கனிமவளத்துறை அமைச்சகம் “கனிமத் துறையின் வளர்ச்சி உள்ளிட்ட பொருளாதார வளர்ச்சி, இந்தியாவின் தொல்லியல், கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரியத்தை பாது காப்பதுடன் கைகோர்த்துச் செல்ல வேண்டும். இந்த நோக்கத்தை உறுதி செய்வதற்காக ஒன்றிய அரசு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச் சகம் மற்றும் இதர முகமைகள் நிர்ணயித்துள்ள விதி முறைகள் நாயக்கர்பட்டி டங்ஸ்டன் தொகுதியிலும் பின்பற்றப்படும்” எனத் தெரிவித்து, சுரங்கம் அமை வதை உறுதி செய்து அடாவடி பதிலைத்தான் அனுப்பியது.
முதல் முழக்கம்!
மொத்த டங்ஸ்டன் போராட்டம் முழுக்க இரண்டு முழக்கங்களை உரத்து முழங்கியது. ஒன்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் உருவாக்கிய “அரிட்டாபட்டி யை உள்ளடக்கிய சுரங்கத் தொகுதிக்குள் ஆய்வுக் காகக் கூட ஒரு பிடி மண்ணைக்கூட ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனம் எடுக்க அனுமதிக்க மாட் டோம்” என்பது. இது டங்ஸ்டன் எதிர்ப்புக் களத்தின் எழுச்சி முழக்கமானது. அதன் பின் டிசம்பர் 3 அன்று பல்வேறு நாடாளு மன்றப் போராட்டங்களுக்கு மத்தியில் டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்துசெய்ய வேண்டுமென வலியுறுத்தி மக்க ளவை பூஜ்ஜிய நேர விவாதத்தில் பங்கேற்று சு.வெங்க டேசன் பேசிய பேச்சு இந்திய அளவிலான கவனக் குவிப்பை டங்ஸ்டன் போராட்டக் களத்திற்கு பெற்றுத் தந்தது. கிராமக் கோவில்களிலும், மந்தைகளிலும், சாவடிகளிலும், ஒவ்வொரு ஊரிலும் போராட்டத்திற் காககட்டப்பட்ட ஒலிபெருக்கிகளில் சு.வெங்கடேச னின் நாடாளுமன்ற உரை இடைவிடாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது. இதனை அடுத்து டிசம்பர் 9 அன்று தமிழக சட்டப் பேரவை விரிவான விவாதத்தை நடத்தி ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்ய வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி அரசினர் தனித் தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றியது. ஆனால் அதற்கு பின்னரும் ஒன்றிய பாஜக அரசு கள்ள மெளனம் காத்தது.
போராட்டக் களத்தைக் கட்டமைத்தது மார்க்சிஸ்ட் கட்சியே!
நவம்பர் 7 டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பு வெளி வந்ததில் துவங்கி டிசம்பர் 9 வரை சுமார் ஒரு மாத காலம் அலையடித்த போராட்டத்தில் தமிழக சட்ட மன்றத் தீர்மானம் ஒரு நம்பிக்கையை அளித்தது. இந்தத் தீர்மானமே போதுமானது; இதை மீறி எதுவும் செய்ய இயலாது; எனவே போராட்டங்கள் தேவை யில்லை என்ற மனநிலையை உடைத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் டிசம்பர் 15 அன்று மேலூரில் நடைபெற்ற மாபெரும் போராட்டம். தமிழக அரசின் தீர்மானம் நம்பிக்கை அளித்தாலும் ஒன்றிய அரசு இந்த ஏலத்தை ரத்துசெய்து அறிவிக்கும் வரை யில் மக்கள் போராட்டம் தொடரும் என முழங்கி மிகச் சரியான கோரிக்கையை முன்வைத்தது மார்க்சிஸ்ட் கட்சி மட்டுமே.
இரண்டாவது முழக்கம்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மேலூர் கிராமங்கள் முழுவதும் டிசம்பர் 20,21,22 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்ற எழுச்சியான நடைபயணம் டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டத்தின் திசைவழியைத் தீர்மானித்தது. இந்த நடைபயணத்தின் கோட்பாட்டுச் சொல்லாக வாலிபர் சங்கம் தீர்மானித்தது “மண்ணை மீட்க, மக்களைக் காக்க” என்னும் முழக்கம். அதற்கு பின்னர் நடைபெற்ற மக்கள் நடத்திய, பல்வேறு அமைப்புகள் நடத்திய போராட்டத்தின் முழக்கமாக இது மாறிப்போனது. இந்த நடைபயணத்திற்கும், டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டக்களத்தின் வெற்றிக்கும் தேவையானது நீர்த்துப் போகாத போராட்டக் குணமே என வாலிபர் சங்கத்தின் மதுரை புறநகர் மாவட்டத் தோழர்கள் டிசம்பர் 7-இல் துவங்கி டிசம்பர் 19 வரை 14 நாட்கள் ஒவ்வொரு கிராமமாக பொதுமக்களையும், இளை ஞர்களையும் சந்தித்து நடைபயணத்தின் நோக்கங்க ளை விளக்கி களப்பணியினை மேற்கொண்டனர். டிசம்பர் 20 அன்று அரிட்டாபட்டியில் துவங்கிய வாலி பர் சங்கத்தின் நடைபயணம் டிசம்பர் 22 அன்று மாலை மேலூர் நகரத்தில் நிறைவு பெற்றது. 20 க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பேரெழுச்சியான வரவேற்புக்கு மத்தி யில் மக்கள் மனதில் போராட்ட நம்பிக்கையையும், அர சியல் உரையாடலையும் விதைத்துச் சென்றது வாலிபர் சங்கத்தின் நடைபயணம். ஒவ்வொரு கிராமத்திலும் பல நூற்றுக்கணக்கில் மக்கள் திரண்டு வந்து, மணிக் கணக்கில் காத்திருந்து வாலிபர் சங்கத்தின் நடைபய ணத்தில் வந்தவர்களுக்கு எழுச்சிமிகு வரவேற்பினை அளித்தனர்.
ஒவ்வொரு வீட்டிலும் குடும்பத்திற்கும் நூறு ரூபாயில் துவங்கி, ஆயிரம் ரூபாய் வரை போராட்ட வரி வசூலித்து பல்வேறு போராட்டங்களில் மக்கள் பங்கேற்றனர். கிராமக் கண்மாய்களில் விடப்படும் மீன் குத்தகை பணத்தில் முன் தொகையைப் பெற்று போராட்டத்திற்கு செலவழித்த கிராமங்கள் உண்டு. தங்களின் 70 நாள் வருமானத்தையும் இழந்து, தங்கள் கையிருப்பைக் கூட போராட்டத்திற்கு செலவழித்த ஆயிரக்கணக்கான அர்ப்பணிப்பு மிக்க குடும்பங்க ளால் நிறைந்தது இப்போராட்டம். வாலிபர் சங்கத் தின் நடைபயணத்தின் துவக்க நிகழ்ச்சியில் அரிட்டா பட்டியில் காலையிலேயே ஆயிரம் பேருக்கான உண வைச் சமைக்க அந்த ஊர் முழுவதும் மக்களிடம் வசூ லித்து உணவிட்டார் சூர்யா என்னும் இளம்பெண். வாலிபர் சங்கத்தின் நடைபயணத்தில் நாங்கள் கண்டதெல்லாம் ஒன்று தான் -கண்ணீர் நிறைந்த முகங்களும், நம்பிக்கை கொண்ட மனதும் கொண் டோர் ஒவ்வொரு கிராமத்திலும் எங்களை அணைத்துக் கொண்டனர். வற்றிப் போன நம்பிக்கையை மீண்டும் இழுத்துப் பிடித்ததாக ஊரின் பெரியவர்களும், இளை ஞர்களும் தாங்களும் இணைந்து ஒவ்வொரு ஊரின் எல்லைவரை எங்களோடு நடந்து வந்தார்கள். அதுவரை ஒவ்வொரு கிராமத்திலும் இருந்த எதிர்ப்புணர்வை, ஒட்டுமொத்தமாக திரட்ட முடியும் என்கிற நம்பிக்கையைத் தந்த போராட்டமாக வாலிபர் சங்கத்தின் நடைபயணம் அமைந்தது. ஏறக்குறைய 2 லட்சம் மக்களை நேரில் சந்தித்த அந்த நடைபய ணத்தில் ஒட்டுமொத்தமாக 3 நாட்களும் சேர்ந்து 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வரவேற்பு நிகழ்வுகளில் பங்கேற் றவர்கள் மட்டும் சுமார் பத்தாயிரம் பேர். ஒரு இடதுசாரி இளைஞர் அமைப்பாக, தனித்த இயக்கமாக வாலிபர் சங்கம் மட்டுமே டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டக் களத்தில் இத்தனை பெரிய போ ராட்டத்தை நடத்தியது என்றால் மிகையல்ல. டிசம்பர் 9 ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 22 வரை இந்தப் போராட்டத் தேரின் வடத்தை இழுத்துச் சென்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் மட்டுமே என்பது மேலூர் பகுதி மக்கள் அறிந்த உண்மை.
பாஜக அரசின் சூழ்ச்சிகர அறிவிப்பு
வாலிபர் சங்க நடைபயணம், தொடர் போராட் டங்கள், சட்டமன்றத் தீர்மானம் ஆகியவற்றிற்குப் பிறகும் டிசம்பர் 24 அன்று அரிட்டாபட்டியில் 193 ஹெக்டேரை சுற்றியுள்ள பத்து கி.மீட்டர் அளவிலான பரப்பைக் கணக்கிட்டால் சுமார் 500 ஹெக்டேர் பரப்ப ளவைத் தவிர்த்து மீதம் உள்ள 1500 ஹெக்டேரை கனிம சுரங்கத்துக்குப் பயன்படுத்தும் நோக்கில் அறி விப்பினை ஒன்றிய கனிமவளத்துறை வெளியிட்டது. அன்றைய தினமே “ஒன்றிய அரசின் சூழ்ச்சி மிகுந்த திட்டத்தை மக்கள் முறியடிப்பார்கள். இது எங்கள் வாழ்வு, வரலாறு, மற்றும் வளத்தை காக்க நடக்கும் போராட்டம். ஒன்றிய அரசு டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை மக்கள் போராட்டம் தொடரும்” என மீண்டும் உறுதியோடு போராட்ட அறிவிப்பை வெளியிட்டார் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன். அதனைத் தொடர்ந்து கிராம அளவில் டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டக்குழுக்கள் உருவாக்கப்பட்டன.
பிரம்மாண்ட நடைபயணம்
இந்த போராட்டத் தேரின் முத்தாய்ப்பாக ஜனவரி 7 அன்று ‘முல்லைப் பெரியாறு பாசன ஒரு போக விவ சாயிகள் சங்கம்’ சார்பில் மேலூர் நரசிங்கம்பட்டி முதல் மதுரை தமுக்கம் வரை பிரம்மாண்டமான நடைபயவருவதற்கான அச்சாரத்தை இட்டது என்றால் மிகையல்ல. இவ்வளவு போராட்டங்களுக்கும், மக்கள் எழுச்சிக் கும் முகம் கொடுக்க முடியாமல் தான் - தமிழக பாஜக தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டுமென்ற சுயநல அரசியலோடு தான் - தாங்கள் கொண்டு வந்த திட்டம் தான் இது என்பதை மக்கள் மறந்துவிடுவார்கள் என்கிற குறை மதிப்பீட்டில் - இழிவான அரசியலை செய்து கொண்டி ருக்கின்றனர்.
இது ஏகாதிபத்திய கொள்ளைக்கு எதிரான எழுச்சி
உலகம் முழுக்க வளங்களைக் கைப்பற்றவே இன்றும் போர்கள் நடந்து வருகின்றன. இயற்கை வளங்களை கார்ப்பரேட்டுகளின் கொள்ளை லாபத்திற்காக எளிய மக்களின் குருதியூற்றிக் குளிர்விக்கும் பணியை உலகம் முழுவதும் ஏகாதிபத்திய அரசுகள் தொடர்ந்து செய்து வருகின்றன. உலகம் முழுவதும் கார்ப்பரேட்டுகளின் இயற்கை வளக் கொள்ளைக்கு எதிரான மக்கள் போராட்டங்களும் அதிகரித்து வருகின்றன. ஒன்றிய அரசு கொண்டு வந்த- அதிமுக ஆதரித்த, கனிமவளங்கள் திருத்தச் சட்டம் 100 சதவிகித அந்நிய முதலீட்டை அனுமதிக்கிறது. அந்த வகையில் டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டம் ஏகாதிபத்தியக் கொள்ளை க்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கியமானது. மக்களின் வாழ்வு, வளம் எல்லாவற்றையும் பறிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஏல அறிவிப்பினால் மேலூர் முழுக்க கடந்த 70 நாட்களாக தங்கள் அன்றாட வாழ்க்கையை போராட்டக் களத்தோடு இணைத்துக் கொண்டிருக்கின்றனர் மேலூர் மக்கள். இந்த மாபெரும் எழுச்சியை விதைத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. எப்போதும் போல துரோகம் செய்து, சூழ்ச்சி செய்து, பின்னர் மக்களிடம் சரணாகதி அடைந்துள்ளது பாஜக. எனவே இதை தமது வெற்றியாகச் சித்தரிக்க அண்ணாமலைக்கும் பாஜகவுக்கும் எந்த அருகதையும் இல்லை.