இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24ஆவது அகில இந்திய மாநாடு நடைபெற உள்ள நிலையில், கட்சியின் தத்துவார்த்த ஏடான THE MARXIST (தி மார்க்சிஸ்ட்)-ல் வெளியாகியுள்ள தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகளின் சாராம்சம் இங்கு வெளியிடப்படுகிறது. தொழிற்சங்கங்களைப் பற்றிய மார்க்சிய பார்வையில் மிக விரிவாக முன் வைக்கிறது இக்கட்டுரை. இந்திய தொழிற்சங்க இயக்கத்திற்கு சித்தாந்த தெளிவை ஏற்படுத்திய இக்கட்டுரையை (The Marxist Volume: 03, No. 4 October-December, 1985 - Marx And Trade Unions - B T Randive) 1985ல் 40 பக்கங்களில் வழங்கியுள்ளார் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவரும், இந்திய தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடியும், மார்க்சிஸ்ட் கட்சியின் நவரத்தினங்களில் ஒருவருமான தோழர் பி.டி.ரணதிவே.
6 தவறான போக்குகளை விமர்சித்த மார்க்ஸ் புருதோனியத்திற்கு எதிரான போராட்டம்
மார்க்சின் சமகாலத்தில் பல கருத்துக்கள் மோதின. புருதோன் என்பவர் சிறு முதலாளிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் கண்ணோட்டத்தை பிரதிபலித்தார். தொழிற்சங்கங்களை அவர் கடுமையாக எதிர்த்தார். உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலமே சமூக மாற்றம் சாத்தியம் என்று கூறினார். இதற்காக “மக்கள் வங்கி” ஒன்றை உருவாக்கி, கூட்டுறவு சங்கங்களுக்கு கடன் வழங்க வேண்டும் என்றார். தொழிற்சங்கங்கள், வேலைநிறுத்தங்கள், ஊதிய உயர்வு கோரிக்கைகள் அனைத்தையும் அவர் எதிர்த்தார். “ஊதியம் உயர்ந்தால் விலைவாசி உயரும், எனவே அதனால் பயனில்லை” என்ற வாதத்தை முன்வைத்தார். தொழிலாளர்கள் எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள் என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.
லசாலியத்திற்கு எதிரான போராட்டம்
ண்பராக இருந்தார். 1863ல் “பொது தொழிலாளர் சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கினார். தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் உரிமைகளை வலியுறுத்தினார். ஆனால் அவரது கொள்கை புரட்சிகர போராட்டத்தை நிராகரித்தது. அரசு உதவியுடன் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை உருவாக்குவதன் மூலமே சோசலிசத்தை அடைய முடியும் என்றார். வாக்குரிமையை மட்டுமே முக்கியப்படுத்தினார். தொழிற்சங்க போராட்டங்களை அவர் நம்பவில்லை. “ஊதிய இரும்பு விதி” என்ற கோட்பாட்டை முன்வைத்தார். அதாவது தொழிலாளர்கள் எவ்வளவு போராடினாலும் அவர்களின் நிலையை மேம்படுத்த முடியாது என்றார். இது மார்க்சின் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. பிஸ்மார்க் அரசுடன் லசால் சமரசம் செய்து கொண்டார். பகூனினுக்கு எதிரான போராட்டம் பகூனின் என்பார் அரசை முக்கிய எதிரியாக பார்த்தார். ஆனால் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்ட த்தை புரிந்து கொள்ளவில்லை. அரசியல் போராட்டத்தை முற்றிலுமாக நிராகரித்தார். தொழிற்சங்க போராட்டங்கள் மட்டுமே போதும் என்றார். “தொழிலாளர்கள் அறியாமை நிலையில் உள்ளனர். எனவே கோட்பாட்டு விளக்கங்கள் தேவையில்லை. நடைமுறை போராட்டங்கள் மட்டுமே அவர்களுக்கு தேவை” என்றார். இது தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரத்தை புரிந்து கொள்ளத் தவறிய ஒன்றாகும்.
பிரிட்டிஷ் தொழிற்சங்க இயக்கம்
ராபர்ட் ஓவன் பிரிட்டிஷ் சோசலிசத்தின் முன்னோடி. ஆனால் புரட்சிகர போராட்டத்தை நிராகரித்தார். பிரிட்டிஷ் தொழிலாளர்களின் போராட்டங்களை மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆதரித்தனர். ஆனால் வெறும் பொருளாதாரக் கோரிக்கைகளோடு நின்றுவிடக் கூடாது என்று எச்சரித்தனர். அமெரிக்காவிலும் இதேபோன்ற கருத்துக்கள் எழுந்தன. இவ்வாறு பல்வேறு தவறான போக்குகளுக்கு எதிராக மார்க்சியம் தொடர்ந்து போராடி வந்தது. தொழிற்சங்க இயக்கத்தை புரட்சிகரப் பாதையில் வழிநடத்த முயன்றது.
7 மார்க்சின் அறிவியல்பூர்வ புரிதல்
தொழிற்சங்க இயக்கத்தை மார்க்ஸ் ஒரு அறிவியல்பூர்வ கண்ணோட்டத்தில் ஆராய்ந்தார். தொழி லாளர்களின் அன்றாட போராட்டங்களில் இருந்து உரு வாகும் அமைப்புகளாக தொழிற்சங்கங்களை அவர் பார்த்தார். ஆனால் அவற்றின் பங்கு அதோடு நின்று விடக்கூடாது என்று வலியுறுத்தினார். ஜெனீவா காங்கிரசில் மார்க்ஸ் முன்வைத்த கருத்துக்கள் தொழிற்சங்க இயக்கத்திற்கு ஒரு புதிய திசை யைக் காட்டின. தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கை யை மேம்படுத்தும் போராட்டங்கள் அவசியமானவை என்றாலும், அவை மட்டுமே போதாது என்பதை தெளிவு படுத்தினார். முதலாளித்துவச் சுரண்டலை முற்றிலுமாக ஒழிப்பதற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக தொழிற்சங்கங்கள் மாற வேண்டும் என்றார். “தொழிற்சங்கங்கள் வெறும் பொருளாதார அமைப்பு களாக மட்டுமல்லாமல், தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலைக்கான அரசியல் போராட்டத்தின் மையங்களாக செயல்பட வேண்டும்” என்பது மார்க்சின் அடிப்படை கருத்தாக இருந்தது.
பகுதி கோரிக்கைகளுக்கான போராட்டம்
தொழிலாளர்களின் உடனடி கோரிக்கைகளுக்கான போராட்டங்களை மார்க்ஸ் முக்கியமானவையாகக் கருதினார். எட்டு மணி நேர வேலை, பெண் தொழிலாளர் களுக்கான பாதுகாப்பு, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை முன்வைத்தார். இந்த போராட்டங்கள் மூலம் தொழிலாளர்கள் தங்கள் வர்க்க பலத்தை உணர்வார்கள் என்றும், கூட்டு நடவடிக்கையின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வார்கள் என்றும் கருதினார். அதே நேரத்தில் இந்த போராட்டங்கள் முதலாளித்துவ அமைப்பை மாற்றுவதற்கான புரட்சிகர போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். உதாரணமாக, எட்டு மணி நேர வேலை நாள் கோரிக்கை வெறும் நேர குறைப்பு மட்டுமல்ல, தொழி லாளர்களின் மனித உரிமைக்கான போராட்டம் என்று சுட்டிக்காட்டினார். வேலை நேரம் குறைந்தால் தொழி லாளர்கள் படிப்பதற்கும், சிந்திப்பதற்கும், அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கும் நேரம் கிடைக்கும் என்றார்.
8 தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் கட்சி
1872ல் ஹேக் காங்கிரசில் மார்க்ஸ் ஒரு முக்கியமான முன்மொழிவை வைத்தார். தொழிலாளர் வர்க்கத்திற்கு தனியான அரசியல் கட்சி தேவை என்பதே அது. ஏனெனில் தொழிற்சங்கங்களின் பொருளாதார போராட்டங்கள் மட்டும் போதாது என்பதை அனுபவம் காட்டியது. “தொழிலாளர் வர்க்கம் ஓர் அரசியல் கட்சியாக தன்னை அமைத்துக் கொள்ளாத வரை, அது ஒரு வர்க்கமாக செயல்பட முடியாது” என்று மார்க்ஸ் கூறினார். முதலாளிகள் தங்கள் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி தொழிலாளர்களை அடக்குவதால், அந்த அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதே தொழிலாளர் வர்க்கத்தின் முக்கியக் கடமை என்றார்.
மார்க்சைத் தொடர்ந்த லெனின்
லெனின் மார்க்சின் கருத்துக்களை மேலும் வளர்த்தார். தொழிற்சங்கங்கள் கட்சியிடமிருந்து முற்றிலும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற “நடுநிலைமை” கோட்பாட்டை அவர் கடுமையாக எதிர்த்தார். அதேபோல தொழிற்சங்கங்களை கட்சியின் கிளைகளாக மாற்ற முயலும் “இடதுசாரி” போக்கையும் விமர்சித்தார். “நடைமுறையில் உள்ள தொழிற்சங்கங் களில் கம்யூனிஸ்டுகள் பணியாற்ற வேண்டும். அங்கு தொழிலாளர்களிடம் புரட்சிகரக் கருத்துக்களைக் கொண்டு செல்ல வேண்டும்” என்பதே லெனினின் அணுகு முறை. வெறும் பொருளாதாரக் கோரிக்கைகளோடு நின்றுவிடக்கூடாது என்றார்.
கட்சியும் தொழிற்சங்கங்களும்
தொழிற்சங்கங்களின் வெகுஜனத் தன்மையை பாதுகாப்பது முக்கியம். அதே நேரத்தில் கட்சியின் வழிகாட்டுதலும் தேவை. இந்த இரண்டையும் சரியான முறையில் இணைப்பதே சவால். “தொழிற்சங்கங்கள் என்பவை தொழிலாளர்கள் அனைவரையும் உள்ளடக்கிய அமைப்புகள். ஆனால் கட்சி என்பது முன்னணிப் படை யினரின் அமைப்பு” என்று லெனின் விளக்கினார். இந்த வேறுபாட்டை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். வர்க்க ஒற்றுமை தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் ஒற்றுமை என்பது தொழிற்சங்க ஒற்றுமையில் இருந்துதான் வளர வேண்டும். அன்றாட போராட்டங்களில் ஒன்றிணையும் தொழிலாளர்கள், படிப்படியாக புரட்சிகர அரசியல் புரிதலை பெற வேண்டும். வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றில் தொழிலாளர்கள் தங்கள் வர்க்க பலத்தை உணர்கிறார்கள். இந்த அனுபவங்கள் மூலம் முதலாளித்துவ அமைப்பை மாற்றுவதற்கான தேவையைப் புரிந்து கொள்கிறார்கள். 9 இந்திய தொழிற்சங்க இயக்கம் இந்திய தொழிற்சங்க இயக்கம் பிரிட்டிஷ் காலனி ஆட்சியின் கீழ் கடும் சவால்களை எதிர்கொண்டது. தொழிலாளர்களுக்கு எந்த அடிப்படை உரிமைகளும் இல்லை. தொழிற்சங்கங்களை அமைக்கும் உரிமை கூட மறுக்கப்பட்டது. 1920ல்தான் தொழிற்சங்க சட்டம் கொண்டு வரப்பட்டது - அதுவும் ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு. இந்திய தொழிலாளர் வர்க்கம் அக்காலத்தில் மிகச் சிறிய எண்ணிக்கையில் இருந்தது. பெரும்பாலான தொழி லாளர்கள் விவசாயப் பின்னணியில் இருந்து வந்தவர்கள். தொழிற்சாலை வேலையை தற்காலிகமானதாகவே பார்த்தனர். ஆனால் படிப்படியாக தொழிலாளர் வர்க்க உணர்வு வளர்ந்தது.
ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகள்
இந்திய தொழிலாளர்கள் தேசிய விடுதலை இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தனர். 1908ல் திலகர் கைது செய்யப்பட்டபோது பம்பாய் தொழிலாளர்கள் ஆறு நாட்கள் வேலைநிறுத்தம் செய்தனர் - திலகருக்கு விதிக்கப்பட்ட ஆறு ஆண்டு சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்க. 1919ல் காந்தி கைது செய்யப்பட்டபோது அகமதாபாத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். 1930ல் சோலாப்பூர் ஜவுளித் தொழிலாளர்கள் முழு வேலை நிறுத்தம் செய்து, நகர நிர்வாகத்தையே முடக்கினர். 1946ல் கப்பற்படை எழுச்சிக்கு ஆதரவாக பம்பாய் தொழிலாளர்கள் பொது வேலைநிறுத்தம் நடத்தினர்.
10 இயக்கத்திற்குள் போராட்டம்
ஏஐடியுசி உருவான காலத்தில் இருந்தே அதில் பல்வேறு போக்குகள் மோதின. காங்கிரஸ் தலைவர்கள் தொழிற் சங்கங்களை வெறும் பொருளாதாரக் கோரிக்கைகளுக் கானவையாக மட்டுமே பார்த்தனர். கம்யூனிஸ்டுகள் புரட்சிகர அரசியலுடன் இணைக்க முயன்றனர். “தொழி லாளர்கள் வேலைநிறுத்தம் செய்வது தேசிய நலனுக்கு எதிரானது” என்று சர்தார் வல்லபாய் பட்டேல் கூறினார். 1947ல் காங்கிரஸ் சார்பு தொழிற்சங்கங்கள் ஐஎன்டியுசி-யை உருவாக்கின. “வர்க்க சமரசம்” என்ற கொள்கையை முன்வைத்தனர். 1970 பிளவு 1964ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிளவு தொழிற்சங்க இயக்கத்திலும் எதிரொலித்தது. சிபிஐ தலைமை வர்க்க சமரசப் பாதையில் செல்லத் தொடங்கி யது. சோவியத் யூனியனில் இருந்த திருத்தல்வாத போக்குகளின் தாக்கமும் இதற்கு காரணமாக இருந்தது. இந்த சூழலில் ஏஐடியுசி-க்குள் இருந்து கொண்டே சரியான கொள்கைக்காக போராட வேண்டும் என்று சிபிஐ(எம்) முடிவு செய்தது. ஆனால் நிலைமை மாறியது. வர்க்க சமரசக் கொள்கைகளை எதிர்த்து, தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டக் குணத்தை பாதுகாக்க புதிய அமைப்பு தேவைப்பட்டது. இந்த சூழலில்தான் 1970ல் சிஐடியு உதயமானது.
தொழிற்சங்க ஒற்றுமைக்கான சிபிஐ(எம்) போராட்டம்
சிஐடியு உருவான பிறகும் தொழிற்சங்க ஒற்றுமைக்கு சிபிஐ(எம்) முக்கியத்துவம் கொடுத்தது. கூட்டுப் போராட்டங்கள், கூட்டு நடவடிக்கைகள் மூலம் தொழிலாளர் வர்க்க ஒற்றுமையை வலுப்படுத்த முயன்றது. 1973ல் எச்எம்எஸ், சிஐடியு போன்ற அமைப்புகளுடன் இணைந்து ஒரு கூட்டு அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 1974 ரயில்வே வேலைநிறுத்தம் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டங்கள் நடத்தப்பட்டன. நெருக்கடி நிலை காலத்தில் இயக்கம் தடைப்பட்டாலும், அதற்குப் பிறகு மீண்டும் பரந்த ஒற்றுமைக்கான முயற்சிகள் தொடங்கின. 1981ல் தேசிய பிரச்சாரக் குழு (National Campaign Committee) உருவாக்கப்பட்டது. ஐஎன்டியுசி தவிர அனைத்து முக்கிய தொழிற்சங்க அமைப்புகளும் இதில் இணைந்தன. 1982 ஜனவரி பொது வேலைநிறுத்தம், மூன்று நாள் நிலக்கரி வேலைநிறுத்தம் போன்றவை தேசிய பிரச்சாரக் குழுவின் முக்கிய சாதனைகள். தொழிலாளர் வர்க்கத்தின் அகில இந்திய ஒற்றுமையை வலுப்படுத்தியது. அனைத்து தொழிற்சங்க அமைப்புகளையும் இணைத்து ஒரு கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பது சிஐடியுவின் முன்மொழிவு. கருத்துப் பரிமாற்றம், பொது பிரச்சனைகள் குறித்த விவாதம் ஆகியவற்றுக்கு இது உதவும். ஆனால் இன்னும் பல சவால்கள் உள்ளன. பொரு ளாதார கோரிக்கைகளுக்கு அப்பால் தொழிலாளர்களின் அரசியல் உணர்வை உயர்த்த வேண்டும். சர்வதேசிய கண்ணோட்டத்தை வளர்க்க வேண்டும். அணு ஆயுத எதிர்ப்பு, அமைதிக்கான போராட்டம் போன்றவற்றில் தொழிலாளர்களின் பங்கேற்பை அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு மார்க்சிய கோட்பாட்டின் அடிப்படையில் தொழிற் சங்க இயக்கத்தை புரட்சிகரப் பாதையில் வளர்த்தெடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது.