கே.பாலகிருஷ்ணன் பேட்டி
புதுக்கோட்டை, ஜன.25- தமிழகத்தின் கனிம வளங்களை தனியார் நிறு வனங்கள் நீண்டகாலமாக சூறையாடி வருவதாகவும், இதனால், அரசுக்கு பல லட் சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். புதுக்கோட்டையில் சனிக்கிழமை செய்தியாளர் களுக்கு பேட்டியளித்த அவர், இதுதொடர்பாக மேலும் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக கனிம வளக் கொள்ளை நடைபெற்று வரு கிறது. நெல்லை, தூத்துக் குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தாது மணல் எடுப்பதற்கு 7 நிறுவனங்க ளுக்கு 64 உரிமங்கள் வழங்கப்பட்டன. அதையும் மீறி அளவுக்கு அதிகமாக தாதுமணல் கொள்ளை அடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் தானே முன்வந்து வழக்கை எடுத் துக்கொண்டு விசாரணை நடத்தியதில், உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. அணுசக்திக்கு தேவை யான மூலப்பொருட்கள் இந்த தாதுமணலில் உள்ள தால், அந்நிய நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு பல லட்சம் கோடி கொள்ளைய டிக்கப்பட்டது. இந்த கனிம வளக் கொள்ளையில் ஈடு பட்ட 7 நிறுவனங்களுக்கு 3528 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. விவி மின ரல்ஸ் மணல் நிறுவனத்திற்கு மட்டும் 2,500 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதுவும் முறையாக வசூ லிக்கப்படுமா என்று தெரியாது. ஐஏஎஸ் அதிகாரி சகாயம் நடத்திய விசாரணையில், மதுரையைச் சேர்ந்த பிஆர்பி நிறுவனம் மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அரசுக்கு இழப் பீடு ஏற்படுத்தியதாக அர சுக்கு அறிக்கை கொடுத்தார். கனிமவள நிறுவனங் களை அரசே ஏற்று நடத்தி னால், அரசுக்கு நல்ல வரு மானம் கிடைக்கும். அரசின் கடன்களை அடைக்கலாம். பல திட்டங்களைச் செயல் படுத்தலாம். கனிமவள வரு வாயை அரசு பயன்படுத்த லாம். ஆனால், பணம் வரக் கூடிய பல துறைகள், தனி யார் நிறுவனங்கள் கொள் ளையடிப்பதற்கு திறந்து விடப்பட்டுள்ளன. இது அர சுக்கு மிகப்பெரும் இழப்பே. இத்தகைய சூழலில் கனிமவளக் கொள்ளையை தடுப்பதற்காக தொடர்ந்து போராடிய புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஜக பர் அலி படுகொலை செய் யப்பட்டுள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது.” இவ்வாறு கே. பால கிருஷ்ணன் தமது பேட்டி யில் குறிப்பிட்டார். பேட்டியின் போது, கட்சி யின் மாநிலக்குழு உறுப்பி னர் எம். சின்னதுரை எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர் எஸ். சங்கர், செயற்குழு உறுப்பி னர்கள் எஸ். கவிவர்மன், ஏ. ராமையன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். (ந.நி.)
வேங்கைவயல்: சிபிஐ விசாரணைக்கு உட்படுத்துவதில் தவறில்லை!
வேங்கைவயல் வழக்கு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த கே. பாலகிருஷ்ணன், “சிபிசிஐடி போலீசார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வேங்கைவயலைச் சேர்ந்த 3 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த விசாரணை அறிக்கை யில், சில நியாயமான கேள்விகளும், சந்தேகங்களும் உள்ளன” என்று கூறினார். “குறிப்பாக, 2022 டிசம்பர் 21 தேதிகளில் வேங்கை வயலைச் சேர்ந்த சில குழந்தைகளுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் குடிநீரில் பிரச்சனை இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அதன டிப்படையில்தான் டிச.26 அன்று குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் காலை 7.30 மணிக்கு குடிநீர்த் தொட்டி யில் ஏறிப் பார்த்துள்ளனர். அப்படிப் பார்த்தபோது தான், அவர்கள் மூவரும், மனிதக் கழிவைக் கலந்து விட்டதாக குற்றப்பத்திரிகை சொல்கிறது. பொதுமக்கள் கூடியிருந்த அந்த நேரத்தில் இவர்களால் எப்படி அதைச் செய்தி ருக்க முடியும்; எனவே, இந்த வாதம் பொருந்தவில்லை. என்று அவர் குறிப்பிட்டார். “சில சந்தேகங்களுக்கு விடை இல்லாத காரணத்தால், மீண்டும் ஒரு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று தான் கேட்கிறோம். தமிழ்நாடு அரசும் ஏற்கெனவே பல வழக்குகளை தானாக முன்வந்து சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தி உள்ளது. பதற்றமான இப்பிரச்சனையில் இன்னொரு முறை விசாரணையை நடத்தி ஒழுங்கு படுத்துவதில் என்ன தவறு இருக்கிறது?” என்றும் கே. பால கிருஷ்ணன் குறிப்பிட்டார்.