10 எம்.பி.க்கள் இடைநீக்கம் வெட்கக்கேடான நடவடிக்கை!
சிபிஎம் அரசியல் தலைமைக் குழு கண்டனம் புதுதில்லி, ஜன.25- வக்பு சட்டமுன்வடிவு தொடர்பாக அமைக்கப்பட்ட கூட்டு நாடாளுமன்றக் குழு வின் தலைவர் மிகவும் வெட்கக்கேடான முறையில் கூட்டுக்குழுவிலிருந்து நாடாளு மன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களை நீக்கியி ருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: வக்பு சட்டமுன்வடிவிற்கான கூட்டு நாடாளுமன்றக் குழுவின் தலைவர் அற்பக் காரணங்களைக் கூறி எதிர்க்கட்சி நாடா ளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் மற் றும் அரசாங்கத்தின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உறுப்பினர்களையும் கூட்டுக் குழுவிலிருந்து இடைநீக்கம் செய்திருக்கிறார். பல ஆண்டுகளாக சட்டப்பூர்வமான நாடா ளுமன்ற நடைமுறைகள் மூலம் செவ்வனே செயல்பட்டுவந்த கூட்டுக்குழு அமைப்பு முறையை இதைவிட மிக மோசமான முறை யில் எவரும் அரித்து வீழ்த்திட முடியாது. நாட்டின் ஜனநாயகத்தையும் நாடாளு மன்றத்தின் இறையாண்மையையும் போற் றும் அனைவரும் தேசிய ஜனநாயகக் கூட் டணி அரசாங்கத்தின் இத்தகைய வெட்க கேடான செயல்களை எதிர்த்திட முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறை கூவி அழைக்கிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு வின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (ந.நி.)
பெரியாரை விமர்சிக்க சீமானுக்குத் தகுதியில்லை
தந்தை பெரியார் குறித்து, நாம் தமி ழர் கட்சி சீமான் அவ தூறு செய்து வருவது குறித்த கேள்விக்கு, “தந்தை பெரியாரைப் பற்றிப் பேசுவதற்கு சீமானுக்கு குறைந்த பட்ச தகுதிகூட இல்லை” என்று சாடிய கே. பால கிருஷ்ணன், “ஒரு பெரிய தலைவரை விமர் சித்துவிட்டால் தானும் பெரிய ஆள் ஆகிவிட லாம் என அவர் நினைத் துக் கொண்டு இருக்கி றார். பெரியாரை விமர் சித்துவிட்டால், சீமான் பெரியாரைவிட பெரிய ஆள் ஆகிவிடுவாரா?” என்றும் கண்டித்தார்.
ராஜபக்சேவின் மகன் யோஷித ராஜபக்சே கைது!
இலங்கை அரசு அடுத்தடுத்து நடவடிக்கை
கொழும்பு, ஜன.25- இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே-வின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்சே, ஊழல் குற் றச்சாட்டின் பேரில் அந்நாட்டு போலீசா ரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் கடற்படை அதிகாரியான யோஷிதா ராஜபக்சே, தனது தந்தை ஜனா திபதியாக இருந்த போது 2015-ஆம் ஆண்டுக்கு முன்பு சொத்து ஒன்றை வாங்கும்போது முறைகேட்டில் ஈடுபட்ட தாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. கதிர்காமம் பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கியிருந்த கோத்தப்பய ராஜ பக்சேவிடம் இந்த வழக்கின் கீழ் போலீசார் விசாரணையும் மேற்கொண்டனர். இந்நிலையில் தான், யோஷித ராஜபக்சே, பெலியாட்டா பகுதியில் உள்ள அவரது வீட்டில் இலங்கை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2005-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை மகிந்த ராஜபக்சேவின் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தவறான நடவடிக்கைகளுக்கு காரணமான ஒவ்வொருவரும் கைது செய்யப்படுவார் என்று ஜனாதிபதி தேர்தலின் போதே அனுரகுமார திஸா நாயக்க வாக்குறுதி அளித்தார். அதன்படியே, இலங்கையின் முதல் இடதுசாரி ஜனாதிபதியாக தேர்ந்தெ டுக்கப்பட்ட அனுரகுமார திஸாநாயக்க, கடந்த நவம்பரில் ஆட்சிக்கு வந்த உடன், இதேபோன்றதொரு சொத்து விவகார வழக்கில் மகிந்த ராஜபக்சேவின் மூத்த மகனும் எம்.பி.யுமான நமல் ராஜபக்சே விடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட னர். மகிந்த ராஜபக்சேவிடம் பணியாற்றும் ஒருவரிடமும் இதே வழக்கில் போலீசார் விசாரணை செய்தனர். அடுத்ததாக, மகிந்த ராஜபக்சேவின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இதற்கு எதிராக, உச்ச நீதிமன்றம் சென்ற மகிந்த ராஜபக்சே, தமது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை, கடந்த மாதம் குறைக்கப்பட்டதை ரத்து செய்து மீண்டும் அவர்களை பாதுகாப்பு பணிக்கு நியமிக்க உத்தரவிட வேண்டும் என்று கூப்பாடு வைத்திருந்தார். இந்த சூழலில்தான் ராஜபக்சேவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கு சுமூக முடிவு முதலமைச்சருக்கு கே.நவாஸ்கனி எம்.பி., கடிதம்
இராமநாதபுரம், ஜன.25- திருப்பரங்குன்றம் பிரச்சனை தொடர்பாக கோவில் நிர்வாகத்தினர், தர்கா நிர்வா கத்தினர் உள்ளடக்கிய குழுவினை ஏற்படுத்தி, சுமூகமான முடிவு எட்டப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான கே.நவாஸ்கனி முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் அனுப்பிய கடிதம் வருமாறு: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அமைந்திருக்கும் சிக்கந்தர் பாதுஷா தர்கா தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு உட்பட்டது என்ற வகையில், வக்பு வாரிய தலைவர் என்ற முறையில் அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன். திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதனை சுற்றியுள்ள மதுரை சுற்றுவட்டார பகுதி அனைத்து தரப்பட்ட மக்களும் ஒற்றுமையுடனும், நல்லிணக்கத்துடனும் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். வெளியூர்களில் இருந்து அரசியல் செய்யும் நோக்கத்தோடு செல்லும் ஒரு சில அரசியல் கட்சியினரால்தான் அங்கு தேவையற்ற பதற்றமும் அமைதியின்மையும் பிரச்சனையும் ஏற்படுகிறது என்பதை அறிய முடிகிறது. எனவே முதலமைச்சர் அங்கு அமைந்துள்ள கோவில் நிர்வாகத்தினர், இந்து அறநிலை யத்துறை, தர்கா நிர்வாகத்தினர், தமிழ்நாடு வக்பு வாரியம், அரசு வருவாய் துறை ஆகியோர் உள்ளடக்கிய குழுவினை ஏற்படுத்தி, மாவட்ட ஆட்சியர் தலைமையில் இக்குழு வோடு உரிய ஆலோசனை செய்து, விரிவான ஆய்வு மேற்கொண்டு இந்த பிரச்சனைக்கு சுமூகமான முடிவு, நிரந்தர தீர்வு எட்டப்பட வழிவகுக்க வேண்டும். அமைதியை கெடுக்க நினைப்போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் சுமுகமான முடிவை விரைந்து எடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
‘ரேசனில் பருப்பு நிறுத்தம் பொய்ச் செய்தி
சென்னை,ஜன.25- ரேசன்கடைகளில் பருப்பு, பாமாயில் விநியோகத்தை அரசு நிறுத்தப் போவதாகப் பரப்பப்படும் தகவல் வதந்தி என்று தமிழ்நாடு அரசு அறி வித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்ப கம் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு: “கடும் நிதி நெருக்கடி யில் இருப்பதால், ரேசன் கடை களில் பருப்பு, பாமாயில் வழங் கும் திட்டத்தை நிறுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது” என்று செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப் பப்படுகிறது. இது முற்றிலும் பொய்யான செய்தி. இச்செய்தி கடந்தாண்டு ஜனவரி மாதம் வெளியானது. ஆனால், தற்போதுவரை ரேசன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகம் நடைபெற்றே வருகிறது. அரசாணையின் படி ஒவ்வொரு ஆண்டும் இத் திட்டமானது நீட்டிக்கப்படும். தற்போது 30.6.2025 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. பருப்பு, பாமாயில் விநியோகம் நிறுத்தப் போவதாகப் பரவும் தகவல் பொய்யானவை என்று உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை விளக்கம ளித்துள்ளது. 5 வழக்கறிஞர்கள் சஸ்பெண்ட் சென்னை,ஜன.25- 5 வழக்கறிஞர்களை சஸ்பெண்ட் செய்துள்ளதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் அறிவித்துள் ளது. நீதிபதி குறித்து அவதூறு, பல்வேறு குற்றச்சம்பவங்க ளில் ஈடுபட்ட 5 வழக்கறிஞர்க ளை பார்கவுன்சில் சஸ் பெண்ட் செய்தது.
வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவை போதிய ஊழியர்களை நியமிக்கக் கோரி வங்கி ஊழியர்கள் தர்ணா
சென்னை, ஜன. 25 - வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவை வழங்க தேவையான ஊழியர்க ளை நியமிக்க வலியுறுத்தி சனிக்கிழமை யன்று (ஜன.25) சென்னையில் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (பெபி) சார்பில் தர்ணா போராட்டம் நடை பெற்றது. இந்திய பொதுத்துறை வங்கிகளில் கடந்த 10 ஆண்டுகளில் 2.11 லட்சம் ஊழியர்கள் குறைக்கப்பட்டுள்ளனர். வங்கிகள் அளிக்கும் சேவைகளின் அளவு பெருமளவு அதிகரித்துள்ளது. எனவே, வாடிக்கையாளர்களுக்கு மேம் பட்ட சேவை வழங்க, தேவையான ஊழி யர்களை நியமிக்க வேண்டும். தற்காலிக காண்ட்ராக்ட், அப்பரண்டிஸ் முறை நியமனங்களை ரத்து செய்ய வேண்டும். எளிய மக்களிடம் ரூ. 8 ஆயிரம் கோடி அபராதம் வசூல் பெரு முதலாளிகளின் கடன் கடந்த 10 ஆண்டுகளில் 21 லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நேர்மை யாக கடனை திருப்பிச் செலுத்தியவர்கள் மூலம் கிடைத்த லாபத்தை கொண்டு இந்த தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் எளிய மக்களிடம் 8 ஆயிரம் கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப் பட்டுள்ளது. எனவே, சாதாரண மக்களி டம் வசூலிக்கப்படும் சேவை கட்ட ணங்களை ரத்து செய்ய வேண்டும். சேமிப்பு கணக்கில் ஆண்டுக்கு 6 விழுக்காடு வட்டி வழங்க ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது. ஆனால், அரசு வங்கிகள் 3 முதல் 3.5 விழுக்காடு வரை மட்டுமே வட்டி வழங்குகின்றன. இதனால் சேமிப்புகளின் உண்மை மதிப்பு குறை ந்து கொண்டே செல்கிறது. ஆகவே, சிறு வைப்பு வைத்துள்ளவர்களுக்கு (டெபா சிட்தாரர்) வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டும், சிறு கடன் பெறுபவர்களுக் கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும், நலத்திட்ட வரவுகளில் பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும். தமிழ்நாடு வங்கி உருவாக்கிடுக மாநில, மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்க வேண்டும். நகர கூட்டுறவு வங்கிகளை மண்டல அளவில் இணைத்து பலம் பொருந்தியதாக மாற்ற வேண்டும், அனைத்து கிராம வங்கிகளையும் ஒருங்கிணைத்து தேசிய கிராம வங்கி உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சம்மேள னத்தின் மாநிலத் தலைவர் எஸ்.சுனில் குமார் தலைமை வகித்தார். அகில இந்திய செயலாளர் அரிராவ் தொடங்கி வைத்தார். அகில இந்திய செயலாளர் அஸ்வத், மாநில பொதுச்செயலாளர் டி.ரவிக் குமார், நிர்வாகிகள் தேவிகா, சந்திரகுமாரி உள்ளிட்டோர் பேசினர்.