திருவனந்தபுரம், ஜன.25- கடந்த எட்டரை ஆண்டுகளாக புதிய வளர்ச்சி தொலைநோக்குப் பார் வையை உருவாக்கி கேரளம் முன் னேறி வருவதாகவும் நவம்பர் 1-ஆம் தேதிக்குள் நாட்டில் தீவிர வறுமை இல்லாத ஒரே மாநிலமாக கேரளம் மாறும் என்றும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள சட்டமன்றத்தில் ஆளுநரின் கொள்கை விளக்க உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் பதிலளித்து பேசியதாவது: கேரளத்தின் வளர்ச்சி, நாட்டிற்கே ஒரு முன்மாதிரியாகும். கெயில் குழாய் இணைப்பு, தேசிய நெடுஞ்சாலை மேம் பாடு, கொச்சி - எடமன் மின் நெடுஞ் சாலை, புதுவையில் எல்பிஜி முனை யம் ஆகியவற்றை, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் சாத்தியமாக்கியது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் அது ஒரு போதும் நடக்காது, என்று நினைத்த தால் யுடிஎப் அதைக் கைவிட்டது. நாட்டின் முதல் டிரான்ஷிப் மெண்ட் துறைமுகமான விழிஞ்ஞம், 2028-ஆம் ஆண்டில் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும். ஒப்பந்தத் தின்படி, இது 2045 க்குள் முடிக்கப் பட வேண்டும். ஆனால், அதற்கு முன் னதாகவே துறைமுகம் முழு செயல் பாட்டுக்கு வருகிறது. மாநிலம் முத லீட்டிற்கு ஏற்றதல்ல என்ற அடிப்ப டையற்ற பிரச்சாரத்தை முறியடித்து, எளிதாக வணிகம் செய்வதில் நாட் டில் முதலிடத்தில் இருக்கிறோம். தொழில்முனைவோர் ஆண்டின் ஒரு பகுதியாக, 3,41,636 நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. இதன் மூலம் ரூ. 21,920.88 கோடி முதலீடும், 7,24,590 வேலைவாய்ப்புகளும் உருவாக்கப் பட்டன. தொடக்க நிறுவனங்கள் 6,100 ஆக அதிகரிக்கும், இது ரூ. 5,800 கோடி முதலீட்டையும் 60,000 வேலைகளை யும் உருவாக்கும். ஐடி ஏற்றுமதி ரூ. 34 ஆயிரத்து 123 கோடியிலிருந்து ரூ. 90 ஆயிரம் கோடிக்கும் மேல் அதிகரித் துள்ளது. அரசு ஐடி பூங்காக்களில் 78 ஆயிரத்து 068 ஆக இருந்த பணியா ளர்களின் எண்ணிக்கை, தற்போது 1 லட்சத்து 47 ஆயிரத்து 200 ஆக அதி கரித்துள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில், இடது சாரி ஜனநாயக முன்னணி அரசாங்கம் கிராபீன் புதுமை மையம், டிஜிட்டல் அறிவியல் பூங்கா மற்றும் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தை சாத்திய மாக்கியுள்ளது. கேரளத்தில் 63 லட்சத்து 67 ஆயி ரம் பேர் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதி யம் பெறுகின்றனர். ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசாங்கம் ரூ. 9011 கோடி யை மட்டுமே வழங்கிய நிலையில், இடது ஜனநாயக முன்னணி அரசு ரூ. 35 ஆயிரத்து 154 கோடியை வழங்கி யது. சுகாதாரத் துறைக்கு 2,800 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இந்தியாவில் ஆண்டுதோறும் ரூ.1,600 கோடி மதிப் புள்ள இலவச சிகிச்சையை வழங்கும் முதல் மாநிலம் கேரளம். 3 லட்சத்து 57 ஆயிரத்து 898 குடும்பங்களுக்கு நிலப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள் ளன. மேலும் 1.5 லட்சம் பேருக்கு பட்டாக்கள் வழங்கப்படும். லைப் மிஷன் மூலம் 4 லட்சத்து 27 ஆயிரத்து 736 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு முதல்வர் பினராயி விஜ யன் தெரிவித்துள்ளார்.