சென்னை, ஜன.25- ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை தமிழக அரசும் புறக் கணித்தது. தமிழக அரசுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என். ரவி செயல்படுவதைக் கண் டித்து, குடியரசு நாளை முன்னிட்டு, ஆளுநர் மாளிகையில் அளிக்கப் படும் தேநீர் விருந்தில் தமிழக அர சின் சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார் கள் எனவும் தமிழக அரசு அறிவித் துள்ளது. குடியரசு நாள் மற்றும் சுதந்திர நாள் கொண்டாட்டங்களின் போது ஆளு நர் மாளிகையில், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அதன் படி, ஜனவரி 26 அன்று 76-ஆவது குடி யரசு நாளை முன்னிட்டு, வழக்கம் போல தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்தை அவ மதிப்பது, திருவள்ளுவர், வள்ள லாரைக் கொச்சைப்படுத்துவது, நீட் தேர்வு, துணைவேந்தர் நியமனம் தொடர்பான விவகாரங்களில் தமிழக மாணவர்களின் நலன்களுக்கு எதிராக செயல்படுவது என ஆளுநர் ரவி தொடர்ந்து, தமிழகத்தின் நலன் களுக்கு எதிராகச் செயல்படுவதால், அவர் அளிக்கும் தேநீர் விருந்துக்குச் செல்வதில்லை என்ற நிலைபாட்டை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சி கள் எடுத்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாக ஆளுநர் அளிக்கும் விருந்தில் இக்கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. இந்தாண் டும் கலந்துகொள்ளப் போவது இல்லை என்பதை இரண்டு நாட்க ளுக்கு முன்பே அறிவித்து விட்டன. “அரசியலமைப்பு சாசனத்தை யும், குடியரசின் விழுமியங்களையும், கூட்டாட்சி கோட்பாடுகளையும், சட்ட மன்ற மாண்புகளையும் மதிக்காமல் தொடர்ந்து சிதைத்து வருகிற ஆளு நர் ஆர்.என். ரவி தமிழ்நாட்டின் ஆளு நராக நீடிக்கிற தகுதியை இழந்து விட்டார். ஆகவே ஆளுநர் மாளிகை யில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கக் கூடிய குடியரசு தின தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்” என்று தங்களின் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தன. ஆளும் கட்சியான திமுக, ஆளு நர் விருந்தில் பங்கேற்பதில்லை என்றாலும், தமிழக அரசின் சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலினும், அமைச் சர்களும் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்று வந்தனர். ஆனால், இந்தாண்டு ஆளுநரின் தேநீர் விருந்தில் அரசின் சார்பிலும் யாரும் பங்கேற்கமாட்டார்கள் என்றும், ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆளுநர் தேநீர் அளிக்கும் நாளில், முதல்வர் மு.க.ஸ்டாலின், டங்ஸ்டன் திட்ட ஏல ரத்துக்காக அரிட்டாபட்டியில் நடைபெறும் பாராட்டு விழாவிற்காக மதுரைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சி கள் இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஏற்கெனவே அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்பதை வாடிக்கையாக கொண்டுள்ளன. புதிதாக கட்சி துவங்கியுள்ள தவெக தலைவர் விஜய்க்கும் ஆளுநர் அழைப்புவிடுத்துள்ள நிலை யில், அவர் கலந்து கொள்வாரா, புறக்க ணிப்பாரா? என்பது அதிகாரப்பூர்வ மாக அறிவிக்கப்படவில்லை. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு விஜய், ஆளுநரை நேரில் சந்தித்து மனு அளித்தார். அது கடும் விமர்சனத் திற்கு உள்ளானது. ஆளுநர் பதவி தேவையில்லை என்ற அவர், இப் போது ஆளுநரை சந்தித்ததன் நோக் கம் என்ன என்று கேள்விகள் எழுப் பப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.