articles

img

22ஆவது மாநாடு : ஒற்றுமையின் வலிமை - எஸ்.பி.ராஜேந்திரன்

22ஆவது மாநாடு : ஒற்றுமையின் வலிமை -  எஸ்.பி.ராஜேந்திரன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22-ஆவது மாநாடு ஹைதரா பாத்தில்  2018 ஏப்ரல் 18-22 தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டின் நிறைவை குறிக்கும் வகையில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட பிரமாண்ட பேரணியில் ஒற்றுமை மற்றும் உறுதியின் உணர்வு அதிகமாக பொங்கி வழிந்தது.

இந்திய ஆளும் வர்க்கத்திற்கு மாற்று கொள்கை

22-ஆவது மாநாடு, இந்திய ஆளும் வர்க்கத் திற்கு எதிராக ஒரு மாற்றுக் கொள்கையை வழங்கிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் உறுதிப்பாட்டை, மக்கள் போராட்டங் களை தீவிரப்படுத்துவதன் மூலம் மேலும் தற்போதைய பா.ஜ.க மத்திய அரசு, அதன் கடிவாளங்கள் பாசிசத் தன்மைகொண்ட ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கால் கட்டுப்படுத்தப் படுகிறது, மக்களின் வாழ்வாதாரத்தின் மீது  பல்வேறு தாக்குதல்களை நடத்தி வரு கிறது, அதே நேரத்தில் நமது பன்முக சமூ கக் கட்டமைப்பின் ஒற்றுமை மற்றும் ஒருமைப் பாட்டை மோசமாக அச்சுறுத்துகிறது.

எதிர்கொள்ள வேண்டிய  நான்கு முக்கிய சவால்கள்

இந்த பல்வேறு சவால்களில், மக்களின் வாழ்வாதாரத்தின் நலனுக்காகவும், இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களைப் பாதுகாத்து வலுப்படுத்து வதற்காகவும் அவசரமாக எதிர்கொள்ள வேண்டிய மற்றும் மாற்றியமைக்க வேண்டிய நான்கு சவால்கள் உள்ளன: 1.    புதிய தாராளவாத பொருளாதாரக் கொள்கை களின் தாக்குதல் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்தள்ளது. 2.வகுப்புவாத அணிதிரட்டல் தீவிரமடைந்து நமது சமூகக் கட்டமைப்பின் ஒற்றுமையை இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சீரழித்துக் கொண்டிருக்கிறது. 3.நாடாளுமன்ற ஜனநாயக கட்டமைப்புகள் மற்றும் அரசியலமைப்பு நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் ஒரு ஜனநாயக விரோத சூழலையும் நெருக்கடியையும் கட்டவிழ்த்து விட்டுள்ளன. 4.இந்தியா, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாகவும், கீழ்ப்படிந்த நட்பு நாடாகவும் மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை கைவிடப்பட்டு, உலக விவகாரங்களில் அமெரிக்கா-இஸ்ரேல்-இந்தியா கூட்டணி உருவாகிவருகிறது.

இடது மற்றும் ஜனநாயக கொள்கை மாற்று

மாநாட்டினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் தீர்மானத்தில் வரையறுக்கப்பட்டுள்ள இடது மற்றும் ஜனநாயக கொள்கை மாற்றின் மூலம் இந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டும். இந்த மாற்றின் அடிப்படையில், இந்திய மக்களிடையே வர்க்க சக்திகளின் உறவை நமக்கு சாதகமாக மாற்றும் முயற்சிகள், சி.பி.ஐ(எம்) தன்னைத் தானே சுயேச்சையாக வலுப்படுத்திக் கொள்வதிலும், அரசியல் தலையீட்டுக்கான அதன் திறன்களை வலுப்படுத்துவதிலும் தான் அடங்கியுள்ளது. இந்த வலிமையின் மீது, நாட்டில் இடது சக்தி களின் ஒற்றுமையை மக்கள் போராட்டங்களை தீவிரப்படுத்துவதன் மூலம் கட்டமைக்க வேண்டும். மேலும், இடது மற்றும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையை, தற்போது பல்வேறு கொடிகளின் கீழ் உள்ள பல்வேறு மக்கள் இயக்கங்களின் பல்வேறு சக்திகளையும் ஒரு வலுவான இடது மற்றும் ஜனநாயக சக்தி களின் முன்னணியாக இணைத்து கட்டமைக்க வேண்டும். தற்போதைய ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க அரசின் தாக்குதலுக்கு எதிரான கொள்கை மாற்றை மக்கள் போராட்டங்களை தீவிரப்படுத்துவதன் மூலமே உருவாக்க முடியும்.

ஒற்றுமையின் மாநாடு

இந்த மாநாட்டையொட்டி எழுந்த விவாதங்களால், இந்திய ஆளும் வர்க்கமும், தற்போதைய பா.ஜ.க மத்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் தீவிரமாக உதவி செய்து ஆதரிக்கும் காப்பரேட் ஊடகங்களும், சிபிஐ(எம்) ஒரு பிளவுபட்ட குழுவாக உள்ளது என்று சித்தரிக்க மிகவும் முனைப்பாக செயல்பட்டன. இறுதியில், சி.பி.ஐ(எம்) இந்த மாநாட்டிலிருந்து முன்பை விட மிகவும் ஒன்றுபட்டதாக வெளிப்பட்டது, தற்போதைய சவால்களை எதிர்கொள்ளவும் தோற்கடிக்கவும் தீர்மானத்துடன் உள்ளது. இது, மீண்டும் ஒருமுறை, சி.பி.ஐ(எம்) இந்தியாவில் உள்ள கொள்கைத் துடிப்புமிக்க ஒரே அரசியல் கட்சி என்ற உண்மையை மிகவும் வலுவாக உறுதிப்படுத்துகிறது, இது அதன் உள் பலத்தை வலுப்படுத்தும் துடிப்பான உள்-கட்சி ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்தியது. வரைவு அரசியல் தீர்மானத்தின் மீதான  தீவிர விவாதத்தைத் தொடர்ந்து, 22-ஆவது மாநாடு மேலும் வலுப்படுத்த வழிநடத்தும் குழுவால் முன்மொழியப்பட்ட பின்வரும் திருத்தத்தை பெரும்பான்மையாக ஏற்றுக்கொண்டது: “முக்கிய பணி என்பது அனைத்து மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து பா.ஜ.க மற்றும் அதன் கூட்டாளிகளை தோற்கடிப்பதாகும். “ஆனால் இதை காங்கிரஸ் கட்சியுடன் அரசியல் கூட்டணி இல்லாமல் செய்ய வேண்டும். “இருப்பினும், நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட பிரச்சினைகளில் காங்கிரஸ் உட்பட அனைத்து மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளுடனும் புரிதல் இருக்கலாம். நாடாளுமன்றத்திற்கு வெளியே, வகுப்பு வாதத்திற்கு எதிராக மக்களை பரந்த அளவில் அணிதிரட்ட அனைத்து மதச்சார்பற்ற எதிர்க்கட்சி சக்திகளுடனும் ஒத்துழைக்க வேண்டும். காங்கிரஸ் மற்றும் பிற முத லாளித்துவ கட்சிகளைப் பின்பற்றும் வெகு ஜனங்களை ஈர்க்கும் வகையில், வர்க்க மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டு நட வடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும்.” இந்த ஆர்.எஸ்.எஸ்/பா.ஜ.க அரசை அகற்றும் நோக்கத்தை அடைய, சி.பி.ஐ(எம்) 22-ஆவது மாநாடு பின்வருமாறு முடிவு செய்தது: “பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகளை அதிக பட்சமாக ஒன்றுதிரட்ட, கட்சியின் மேற்கூறிய அரசியல் கோட்பாட்டின் அடிப்படையில் பொருத்தமான தேர்தல் உத்திகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.” தோழர் ஹோ சி மின் எப்போதும் நமக்கு கற்பித்தபடி, கட்சியின் ஒற்றுமை என்பது சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவர கம்யூ னிஸ்டுகள் கொண்டுள்ள ஒரே ஆயுதத்தின் வலிமையாகும். தோழர் ஹோ எப்போதும் “கட்சியின் ஒற்றுமையை நமது கண்ணின் மணிபோல் பாதுகாத்து வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை” வலியுறுத்தினார்.

அரசியல்-அமைப்பு அறிக்கை

அரசியல் தீர்மானத்தைத் தவிர, 22-வது மாநாடு அரசியல்-அமைப்பு அறிக்கையையும் விவாதித்து ஏற்றுக்கொண்டது. அரசியல்-அமைப்பு அறிக்கை, டிசம்பர் 2015-ல் கொல்கத்தாவில் நடைபெற்ற அமைப்பு பற்றிய சிறப்பு மாநாட்டில் எடுத்த முக்கிய முடிவுகளின் அமலாக்கத்தை மதிப்பாய்வு செய்தது. இந்த அறிக்கை, மேற்கு வங்கத்திலும் சமீபத்தில் திரிபுராவிலும் ஏற்பட்ட பின்னடைவுகளுக்குப் பிறகு கட்சி ஒரு கடினமான நிலையை எதிர்கொண்டுள்ளது என்ற உண்மையை எடுத்துக்காட்டியது. ஆர்.எஸ்.எஸ்/பா.ஜ.க தலைமையிலான பிற்போக்கு சக்திகள், கட்சிக்கு எதிரான தங்கள் தாக்குதல்களை கட்டவிழ்த்துவிடுகின்றன. இந்த சவாலை, வெகுஜனங்களுடனான கட்சி யின் நேரடி தொடர்புகளை வலுப்படுத்துவதன் மூலமும், தரமான உறுப்பினர்களைக் கொண்டு கட்சி அமைப்பை சீரமைப்பதன் மூலமும், நாடு முழுவதும் ஒரு வலுவான கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவதன் மூலமும் மட்டுமே எதிர்கொள்ள முடியும். இந்த ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க அரசை தோற்கடிக்க மக்கள் போராட்டங்களையும் எதிர்ப்பையும் வெற்றிகரமாக நடத்துவதற்கு இந்த நோக்கங்களை நிறைவேற்றுவது மிகவும் அவசியம். சமீபத்திய காலத்தில் வெகுஜன போராட்டங்களிலும் ஒன்றுபட்ட இயக்கங்களிலும் ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளது. கட்சியும் வெகுஜன அமைப்புகளும் இவற்றில் சுறுசுறுப்பான பங்கு வகித்துள்ளன. வர்க்க மற்றும் வெகுஜன போராட்டங்களை தீவிரப்படுத்தி விரிவுபடுத்துவதன் மூலம் இதை நாம் முன்னெடுக்க வேண்டும், இது இடது மற்றும் ஜனநாயக ஒற்றுமையை உருவாக்க நமக்கு உதவும். கொல்கத்தா சிறப்பு மாநாட்டில் வரை யறுக்கப்பட்ட அமைப்பு சார்ந்த பணிகள் முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும். 22-ஆவது மாநாடு, அடுத்த ஆறு மாதங்களில், அனைத்து மாநில குழுக்களும் மாநில  சிறப்பு மாநாடுகளால் வகுக்கப்பட்ட பணிகளின் செயல்பாட்டை முழுமையாக மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்று முடிவு செய்தது.  “அகில இந்திய வெகுஜன அடித்தளத்துடன் ஒரு வலுவான சி.பி.ஐ(எம்) கட்டமைப்பு” மற்றும் “வெகுஜனங்களுடன் உயிர்த்துடிப்புமிக்க உறவு கொண்ட ஒரு புரட்சிகரக் கட்சி” ஆகியவற்றை உருவாக்கிட அமைப்பு பற்றிய முழு கூட்டத்தால் வகுக்கப்பட்ட இலக்குகளை நிறைவேற்றுவதே நோக்கமாகும்.

மக்கள் போராட்டங்களை தீவிரப்படுத்துவோம்!

கடந்த மூன்று ஆண்டுகளில், தொழி லாளர் வர்க்கம் இரண்டு அகில இந்திய தொழில்துறை வேலைநிறுத்தங்களை நடத்தியதுடன், நாடாளுமன்றத்தின் முன் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்ற ஒரு பிரமாண்டமான முற்றுகைப் போராட்டம் - மஹாபடாவ் - ஆகியவற்றுடன் மக்கள் போராட்டங்களின் எழுச்சியைக் கண்டது. ஆழமடையும் விவசாய நெருக்கடிக்கு எதி ராக போர்க்கள போராட்டங்களில் விவசாயி கள் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் மும்பையை நோக்கி நடந்த விவசாயிகளின் நீண்ட பேரணி இந்த போராட்டங்களின் முக்கிய நிகழ்வாக இருந்தது. சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட பிரிவுகள், குறிப்பாக எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி  மக்களிடையே, எதிர்ப்புகள் மற்றும் கிளர்ச்சி களின் வலுவான வெளிப்பாடு, இடது தலைமை யிலான இயக்கங்களுடன் புதிய தொடர்புகளை உருவாக்குகிறது. இந்த ஆர்எஸ்எஸ் - பாஜக கூட்டணி விடுத்த தலித்துகள் மற்றும் முஸ்லீம்கள் மீதான கொலைகாரத் தாக்கு தல்களுக்கு எதிராக தபோல்கர், பன்சாரே, கல்புர்கி மற்றும் கவுரி லங்கேஷ் ஆகியோரின் படுகொலைகளில் காணப்படும் வளர்ந்து வரும் சகிப்புத் தன்மையில்லா சூழலுக்கு எதிராக அறிவுஜீவிகள் மற்றும் நாடு முழு வதும் உள்ள நல்லெண்ணம் கொண்ட மக்க ளிடையே பரவலான அதிருப்தி மற்றும் எதிர்ப்பு வலுப்பெற்று வருகிறது. ஆர்.எஸ்.எஸ் ஆதரவு பெற்ற ‘தார்மீக காவல்’ குழுவினர் மக்கள் எப்படி வாழ வேண்டும் என்றும் அவர் களின் இணையர்களை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கட்டளை யிடுகிறார்கள். ஆனால் இதற்கு உறுதி யான எதிர்ப்பை மக்கள் பதிவு செய்து வரு கின்றனர். இந்த போராட்டங்களும் மற்ற மக்கள் அணிதிரட்டல்களும் மேலும் ஒருங்கி ணைக்கப்பட்டு தீவிரப்படுத்தப்பட வேண்டும். சி.பி.ஐ(எம்) 22-ஆவது மாநாடு, இந்த சவால்களை எதிர்கொண்டு தோற்கடிக்க முழு கட்சியும் ஒரு மனிதராக எழுந்து நிற்க அழைப்பு விடுத்தது. சி.பி.ஐ(எம்) கட்சியை மேலும் வலுப்படுத்த; இடது ஒற்றுமையை ஒருங்கிணைக்க; மற்றும் இடது மற்றும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையை உருவாக்கி, வரும் நாட்களில் வலுவான மக்கள் அணிதிரட்டல்கள் மற்றும் போராட்டங்களை தீவிரப்படுத்துவதற்கான அடிப்படையாக ஒரு கொள்கை மாற்றை வழங்க அழைப்பு விடுத்தது.