articles

img

உழைக்கும் மக்கள் நலன்களுக்காக வாழ்வை அர்ப்பணித்த தலைவர்

உழைக்கும் மக்கள் நலன்களுக்காக வாழ்வை அர்ப்பணித்த தலைவர் 

திருவனந்தபுரத்தில் மாணவர் இயக்கத்தில் தன்னை ஈடு படுத்திக்கொண்டு அரசியல் பாடம் கற்றவர் தோழர் ஜே.ஹேமச்சந்தி ரன். பின்னர் குமரி மாவட்ட தோட்டம் தொழிலாளர்களை அணிதிரட்டும் பணியில் தோழர்கள் ஜி.எஸ்.மணி, டி.மணி, கிருஷ்ணன் உள்ளிட்ட தோ ழர்களுடன் இணைந்து பணியாற்றி னார். குலசேகரத்தில் உள்ள தோட்டத் தொழிலாளர் சங்க அலுவலக செயலா ளராக தனது பணியை தோழர் ஜே. ஹேமச்சந்திரன் தொடங்கினார்.  தோட்டத் தொழிலாளர்களின் உரி மைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டங் களில் முதலாளிகளின் கைக்கூலிகள் நடத்திய தாக்குதல்களிலிருந்து அவர்க ளையும் அவர்களது வாழ்வாதாரத்தை யும் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை கொண்டார்.

பின்னர் அவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழி லாளர்களின் நலன்களிலும், தமிழக தொழிலாளி வர்க்க நலன்களை பாது காப்பதிலும் தன்னை அர்ப்பணித்தார். இந்தியத் தொழிற்சங்க மையத்தில் பல்வேறு பொறுப்புகளை விகித்தார்.  தேசிய அளவிலும் பங்களிப்பு தேயிலை, ஜவுளி, தோட்டம் தொழி லாளர்கள், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைவாரி போராட்டங்களை  வழி நடத்தினார்.  மாவட்டச் செயலாளர் மற்றும் சிஐடியு போக்குவரத்து தொழி லாளர் கூட்டமைப்பின் மாநிலச் செய லாளர் பொறுப்பில் இருந்து திறம்படப் பணியாற்றினார். அவர் அனைத்து இந்திய தோட்டம் தொழிலாளர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் செயல்பட்டார். 1990 களில் அவர் சிஐடியு தமிழ்நாடு மாநிலக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தேசிய ரப்பர் வாரிய உறுப் பினராகவும் இருந்தார்.  தமிழ்நாட்டில்  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின்  முன்னணித் தலை வராகத் திகழ்ந்தார். 1978 ஆம் ஆண்டு சிபிஎம் தமிழ்நாடு மாநிலக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், 1995 முதல் 98 வரை மாநில செயற்குழு உறுப்பி னராகவும் பணியாற்றினார். 1980, 1984,  1989 மற்றும் 2001இல் திரு வட்டாறு தொகுதியில் இருந்து தமிழ் நாட்டின் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார். சட்டமன்ற சிபிஎம்  குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.  

மண்டைக்காடு கலவரம் 1982 இல் நடந்த மண்டைக்காடு கலவரம் ஆர்எஸ்எஸ் சங்பரிவாரங்க ளின் திட்டமிட்ட ஏற்பாடு என்பதை நீதி யரசர் வேணுகோபால் ஆணையத்தின் முன் வாதாடி நிறுவினார். அதற்கு ஆதாரமான ஆவணங்களையும் சமர்ப்பித்தார். ஆணையத்தின் அறிக் கையிலும் அவை இடம்பெற்றன. மத நல்லிணக்கம் ஏற்பட நடந்த பல்வேறு முயற்சிகளில் தோழர் ஜே.ஹேமச்சந்தி ரன் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தார். இதனால் ஆத்திரமுற்ற சங் பரிவார் அமைப்பினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்களுக்கு எதிராக திட்ட மிட்ட தாக்குதல்களை நடத்தினர். ஊழி யர்களை பாதுகாப்பதில் தீவிர அக்கறை செலுத்தினார் தோழர்.ஜே.ஹேமச் சந்திரன்.  சுனாமியும் மறுவாழ்வும் 2004 டிசம்பர் 26 இல் வரலாறு காணாத சுனாமி பேரழிவு கடற் கரை மக்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். வாழ்வாதாரம் இழந்த பல்லாயி ரக்கணக்கான மக்களுக்கு உடனடி நிவாரணமும் மறுவாழ்வும் தேவைப் பட்டது. இதில், அரசுடனும், தொண்டு நிறுவனங்களுடனும் இணைந்து சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த தோழர்கள் ஜே.ஹேமச்சந்திரன், டி.மணி, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர்.  கேரளத்தில் இருந்து நாடாளு மன்ற உறுப்பினர் வர்க்கலா ராதா கிருஷ்ணன் தலைமையில் வந்த நாடாளுமன்றக்குழு ஏராளமான நிவாரணப் பொருட்களை நேரடியாக மக்களுக்கு வழங்கியது. அரசின் நிவாரண நடவடிக்கைகளில் முறை கேடு நடப்பதாக பொதுமக்கள் தெரி வித்தபோது மாவட்ட ஆட்சியராக இருந்த ரமேஷ்சந்த் மீனாவுடன் நேரடியாக மோதினார். தொழிற் சங்க உறுப்பினர்களையும், இளை ஞர்களையும் மீட்பு மற்றும் நிவார ணப் பணிகளில் ஈடுபடுத்தி ஒருங்கி ணைப்பதில் தோழர் ஜே.ஹேமச்சந்தி ரன் முன்னிலை வகித்தார்.   கட்சியும்  தொழிற்சங்கமுமே குடும்பம் மாணவப் பருவத்திலேயே பொது வாழ்க்கையை தேர்வு செய்த தோழர் ஜே.ஹேமச்சந்திரன் திருமணம் செய்துகொள்ளாமல் முழுமையாக தன்னை உழைப்பாளி மக்களின் நலன்களுக்காக அர்ப்பணித்தார். 2008 பிப்ரவரி 8 அன்று திருவனந்த புரம் மருத்துவமனையில் காலமா னார். அவரது சோசலிசக் கனவை  நிறைவேற்ற பல்லாயிரம் தொழிலா ளர்களும் இளைஞர்களும் அவரது வாரிசுகளாக அணிவகுத்து வரு கின்றனர்.