பாஜகவை தனிமைப்படுத்தி தோற்கடிக்க அறைகூவல் விடுத்த மாநாடு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-ஆவது மாநாடு 2022 ஏப்ரல் 6-10 வரை கேரளாவின் கண்ணூரில் எழுச்சியுடன் நடை பெற்றது. நாடு, மக்கள் மற்றும் கட்சிக்கு முன்னுள்ள மையப் பணியாக “பாஜகவை தனிமைப்படுத்தி தோற்கடிக்க வேண்டும்” என்ற ஒருமித்த உறு தியை கண்ணூர் மாநாடு வலியுறுத்தியது. 22-ஆவது கட்சி மாநாட்டிற்குப் பிறகு கடந்த நான்கு ஆண்டுகளில், பாஜக தனது அர சாங்கத்தைப் பயன்படுத்தி பாசிச ஆர்எஸ்எஸ்-இன் இந்துத்துவ வகுப்புவாத நிகழ்ச்சி நிரலை தீவிரமாக முன்னெடுத்தது. அதே நேரத்தில், வெறிகொண்ட புதிய தாராளவாத சீர்திருத்தங்க ளைத் தொடர்வதன் மூலம், தேசிய சொத்துக் களை இரக்கமின்றி கொள்ளையடிப்பதன் மூலம், இந்தியாவின் பொருளாதார இறை யாண்மையை சீர்குலைப்பதன் மூலம், வகுப்பு வாத கார்ப்பரேட் கூட்டணியை வலுப்படுத்துவ தன் மூலம், மிக மோசமான வகையில் கூட்டுக் களவு முதலாளித்துவத்தை ஊக்குவிப்பதன் மூலம், தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் ஊழலைச் சட்டப்பூர்வமாக்குவதன் மூலம் மற்றும் அரசியலமைப்பின் மூலம் உத்தர வாதம் அளிக்கப்பட்ட மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் குடிமைச் சுதந்திரங்களை பறித்து முழுமையான அதிகாரத்துவத்தைத் திணிப்பதன் மூலம் பல்முனைத் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்துகிறது. 2019 தேர்தலுக்குப் பிறகு பாஜக மீண்டும் அரசாங்கத்தை அமைத்ததைத் தொடர்ந்து, அது இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அரசியலமைப்பின் அடிப்படைத் தூண்களை திட்டமிட்டு சீர்குலைக்கத் தொடங்கியது. நாடாளு மன்றத்தில் சந்தேகத்திற்குரிய சூழ்ச்சி மூலம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை கலைப்பதும், அரசியலமைப்பின் சரத்து 370 மற்றும் 35 ஏ ஆகியவற்றை ரத்து செய்ததும் அதன் முதல் செயலாக இருந்தது. விரைவில் அரசியல மைப்புக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) இயற்றப்பட்டது, அதைத் தொடர்ந்து தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) அறிவிக் கப்பட்டது. மக்களின் மத பின்னணியுடன் குடியுரிமையை தொடர்புபடுத்தாத அரசி யலமைப்பை, துணிகரமான முறையில் மாற்றும் முயற்சி இது. குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லிம்களை விலக்கி, முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கு வதை விரைவுபடுத்துகிறது. இந்திய அரசி யலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட - சாதி, மதம் அல்லது பாலின பேதமற்ற - சமத்துவ உரிமையை மறுக்கும் இந்த நட வடிக்கை, முஸ்லிம் சிறுபான்மையினரை இலக்கு வைத்து தனிமைப்படுத்தி, வகுப்புவாத அணிதிரட்டலை மேலும் தீவிரப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுகிறது. இதனுடன், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் கோயில் கட்டுமானம் தொடங்கியது. உச்ச நீதிமன்றம் அயோத்தி சர்ச்சை வழக்கில் ஒரு தீர்ப்பை வழங்கியிருந்தது, ஆனால் நீதியை வழங்க வில்லை. இந்த நடவடிக்கைகள் ஆர்எஸ்எஸ்-இன் வகுப்புவாத நிகழ்ச்சி நிரலை நிறை வேற்றும் நோக்கம் கொண்டவை: சரத்து 370 ரத்து, அயோத்தியில் கோயில் மற்றும் ஒரே மாதிரியான சிவில் சட்டம். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஆகஸ்ட் 5, 2019 அன்று கலைக்கப்பட்டு துண்டு துண்டாக் கப்பட்டது. அயோத்தியில் கோயில் கட்டுமானம் ஆகஸ்ட் 5, 2020 அன்று தொடங்கியது. “ஆகஸ்ட் 15 அன்று இந்தியா தனது சுதந்தி ரத்தைப் பெற்றது, ஆனால் ஆகஸ்ட் 5 அன்று இந்தியா தனது ‘உண்மையான சுதந்திரத்தை’ குறித்தது” என்று ஆர்எஸ்எஸ் - பாஜக மிக மோசமான பிரச்சாரத்தில் ஈடுபட்டது. தில்லி யில் உள்ள பாரம்பரிய கட்டிடங்களை அழித்து கட்டப்படும் மோடி சிட்டி, சென்ட்ரல் விஸ்டா, ஆகஸ்ட் 5, 2022 அன்று திறக்கப்படும் என்று ஆகஸ்ட் 5, 2019 அன்று திட்டமிடப்பட்டது. பெருந்தொற்று இடையூறால் ஏற்பட்ட பிரச்ச னைகள் மற்றும் அனைத்து நெறிமுறைக ளையும் மீறியபோதிலும், ஆகஸ்ட் 5 ‘இந்தி யாவின் சுதந்திர தினம்’ என்பது போன்ற பிரச்சா ரத்தை வலுப்படுத்த இந்த அட்டவணை இன்னும் பின்பற்றப்படலாம் எனத்தெரிகிறது. பாஜக அரசு கோவிட் பெருந்தொற்றை கையாள்வதில் முற்றிலும் திறமையற்றதாக இருந்தது. அதன் மோசமான தவறான மேலாண்மை மற்றும் பொது சுகாதார பராம ரிப்பு வசதிகளின் முழுமையான போதாமை, தடுக்கக்கூடிய விலைமதிப்பற்ற உயிர்களின் பெரிய இழப்புக்கு வழிவகுத்தது. மருத்துவ மனை இடங்களின் பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை, தேவையான மருந்துகளின் அதிகப்படியான விலைகள் ஆகியவை - கங்கை நதியில் மிதக்கும் பிணங்களை - உலகம் முன்னெப்போதும் இல்லாத துயரக் காட்சிகளை காணும் நிலைக்கு வழிவகுத்தன. இருப்பினும் பாஜக அரசு கவலைப்படவில்லை; மாறாக பெருந்தொற்றை திறம்பட கையாண்ட தாக ஒரு தோற்றத்தை உருவாக்க புள்ளி விவரங்களை திரிப்பதில்தான் கவனம் செலுத்தியது. அதே நேரத்தில், தனியார் மூலதனத் தால் லாப அதிகரிப்பை அதிகரிக்கும் ஒற்றை நோக்கத்துடன் அது பின்பற்றிய பொருளாதா ரக் கொள்கைகள் பொருளாதாரத்தை அழித் துள்ளன. முன்னெப்போதும் இல்லாத அதிக அளவிலான வேலையின்மை, வளர்ந்து வரும் வறுமை மற்றும் பசி, அதிகரித்து வரும் விலை உயர்வு ஆகியவற்றின் விளைவுகள் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதா ரத்தை தொடர்ந்து அழித்து வருகின்றன. பெருந்தொற்றின் போதும் கூட, இந்திய பில்லியனர்கள் அதிக செல்வத்தை குவித்து, வெட்கக்கேடான - மனிதாபிமானமற்ற பொரு ளாதார ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகமான அளவுக்கு அகலப்படுத்தியுள்ளனர். இந்த யதார்த்தங்களை முற்றிலும் புறக் கணித்து, மக்களுக்கு அடிப்படை பொறுப்பு களை நிறைவேற்ற மறுத்து, மத்தியில் உள்ள பாஜக அரசும் மாநிலங்களில் உள்ள அதன் அரசுகளும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக சட்டங்களை இயற்றி, வெறுப்பு, பயங்கரவாதம் மற்றும் வன்முறையைப் பரப்பு வதன் மூலம் வகுப்புவாத அணிதிரட்டலை மேலும் தீவிரப்படுத்தவே செய்தன. சமீபத்திய ராம நவமி வகுப்புவாத வன்முறை உட்பட அனைத்து சம்பவங்களிலும், பிரதமர் மவு னமே சாதித்தார். இந்த மவுனம் மதவெறி குண்டர் படைகள் அனுபவிக்கும் அதிகா ரப்பூர்வ ஆதரவுக்கு - முஸ்லிம் சிறுபான்மையி னருக்கு எதிரான இனப்படுகொலைக்கு - வெளிப்படையான அங்கீகாரம் வழங்குவதை ஊக்குவிக்கும் ஒரு தெளிவான சான்றாகும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம், ஆர்எஸ்எஸ்-இன் அரசியல் முகமாக செயல் படும் பாஜக அரசு, இந்தியாவின் மதச்சார் பற்ற ஜனநாயக தன்மையை அதன் வெறி கொண்ட சகிப்புத்தன்மையற்ற, பாசிசத் தன்மைகொண்ட, வகுப்புவாத ‘இந்துத்வ ராஷ்ட்ரா’-வாக மாற்றும் ஆர்எஸ்எஸ் திட்டத்தை தீவிரமாக முன்னெடுக்கிறது. மக்க ளின் துன்பங்களையும் சுமைகளையும் புறக்க ணித்தும் மறுத்தும் ‘இந்துத்துவ வகுப்புவாத அடையாளத்தின்’ பரந்த கதை விடாப்பிடியாக வலுப்படுத்தப்படுகிறது. இந்த அரசு பாசிசத் தன்மை கொண்ட ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலை முன்னேற்றுவதில் தனி கவனம் செலுத்து கிறது.
வளர்ந்து வரும் மக்கள் போராட்டங்கள்
22-ஆவது கட்சி மாநாட்டிற்கு பிறகு கடந்த நான்கு ஆண்டுகளில், அனைத்துப் பிரிவினரி டையேயும் மக்கள் போராட்டங்கள் பெரும் அளவில் அதிகரித்துள்ளன. வரலாற்று சிறப்புமிக்க விவசாயிகளின் போராட்டம் பாஜக அரசை விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய கட்டாயப்படுத்தியது. தேசிய சொத்துக்களின் சூறையாடல், பரவலான தனியார்மயமாக்கல் மற்றும் புதிய தொழிலாளர் சட்டங்களை இயற்றி தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் நடத்திய தொடர்ச்சியான போராட்டம் மற்றும் வேலை நிறுத்த அழைப்புகள், மார்ச் 28-29 அன்று கடைபிடிக்கப்பட்ட இரண்டு நாள் தேசிய வேலைநிறுத்தத்துடன் தீவிரமடைந்தன. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான முன்னெப்போதும் இல்லாத எதிர்ப்பு, நாடு முழுவதும் தன்னிச்சையான கொந்தளிப்பின் வெடிப்பைக் கண்டது; இதன் விளைவாக மக்கள் ஒன்றிணைந்து இந்திய அரசியல மைப்பு மற்றும் சமத்துவத்திற்கான உரிமை யைப் பாதுகாப்பதற்காக எழுந்தனர்.
இந்துத்துவ வகுப்புவாத சிந்தனையை தோற்கடிப்போம்!
பாஜக சமீபத்திய மாநில சட்டமன்றத் தேர்தல் வெற்றிகளில் கண்டது போல், இந்துத்துவ வகுப்புவாதம் தன்னை முதன்மை யாக முன்னிறுத்தி, தொடர்ந்து மக்களின் உணர்வுகளை ஆதிக்கம் செலுத்துகிறது. பாஜ கவை தனிமைப்படுத்தல் என்பது தேர்தல் வழிமுறைகள் மூலம் மட்டுமே அடைய முடி யாது. இந்துத்துவ வகுப்புவாத நிகழ்ச்சி நிரலை அரசியல், கருத்தியல், சமூக, கலாச்சார மற்றும் அமைப்பு நடவடிக்கைகள் மூலம் எதிர்கொள்ள பல்முனை முயற்சி மேற்கொள் ளப்பட வேண்டும். ஆர்எஸ்எஸ்/பாஜக மக்க ளிடையே பரந்த இந்துத்துவ அடையாளத்தை உறுதிப்படுத்தும் இந்த முயற்சிகளை திறம்பட எதிர்கொள்ள கட்சி மேற்கொள்ள வேண்டிய உறுதியான பணிகளை 23-ஆவது கட்சி மாநாடு ஏற்றுக்கொண்டது. இதற்கு, முதலாவதாகவும் முக்கியமாகவும், மார்க்சிஸ்ட் கட்சியின் சுயேச்சையான வலிமையிலும் அதன் அரசியல் தலையீட்டுத் திறன்களிலும் குறிப்பிடத்தக்க உயர்வு தேவைப்படுகிறது. அதே நேரத்தில், நாட்டில் உள்ள இடதுசாரி சக்திகளின் ஒற்றுமை வலுப் படுத்தப்பட வேண்டும். இதன் அடிப்படையில், ஆளும் வர்க்கங்களால் பின்பற்றப்படும் கொள்கைகளுக்கு மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து, மக்கள் மற்றும் சமூக இயக்கங் கள் உட்பட அனைத்து இடது மற்றும் ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைக்க வேண்டும். அதே சமயம், இந்துத்துவ வகுப்புவாத நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகளின் மிகப் பரந்த அணிதிரட்டல் மேற்கொள்ளப்பட வேண்டும். அடுத்தடுத்து அல்ல, ஒரே நேரத்தில் செயல் படுத்தப்பட வேண்டிய இந்த நடவடிக்கைகள், பாஜகவை தனிமைப்படுத்தி தோற்கடிக்க மேற்கொள்ளப்பட வேண்டும்.
தீர்மானத்தை நிறைவேற்றும் உறுதி
இந்த தீர்மானத்தை நிறைவேற்றும் உறுதி, அரசியல் தீர்மானம், அரசியல் அமைப்பு அறிக்கை ஆகியவற்றை உறுதியான முறை யில் ஏற்றுக்கொண்டதன் மூலமும், புதிய மத்தி யக் குழுவை ஒருமனதாக தேர்ந்தெடுத்ததன் மூலமும் மாநாட்டு பிரதிநிதிகள் மத்தியில் பிரதிபலித்தது. வர்க்க மற்றும் மக்கள் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவது; இந்திய குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக தன்மையைப் பாது காப்பது; அரசியலமைப்பால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களின் சுதந்திரத்தை மீட்டெடுத்து நிலைநிறுத்துவது, உள்ளிட்ட தீர்மானத்தை நிறைவேற்ற கட்சி மாநாடு போர்க்குணம் மிக்க போராட்டங்களை முன்னெடுக்க உறுதி பூண்டது. எனவே, 23-ஆவது கட்சி மாநாடு ஒரு உறுதியின் மாநாடு மற்றும் இந்த உறுதியை நிறைவேற்றும் தீர்மானத்தின் மாநாடாகும். இன்றைய இந்தியாவைக் காப்பாற்று வதற்கும், எதிர்காலத்தில் இந்தியாவை மேம்படுத்த வர்க்க மற்றும் மக்கள் போராட்டங்க ளைத் தீவிரப்படுத்துவதன் மூலம் நமது புரட்சிகர நோக்கத்தை முன்னெடுப்பதற்கும் கட்சியின் மிகப்பெரிய பொறுப்பை நிறை வேற்றுவது கட்சிக்கு அவசியமாகிறது. தமிழில் சுருக்கம்: எஸ்.பி.ராஜேந்திரன்