ரயில்வேயைப் பாதுகாக்க தேசிய அளவில் தொழிற்சங்கங்களை ஒன்றுபடுத்துவோம்
ரயில்வேயைப் பாதுகாக்கவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தேசிய அளவில் ரயில்வே தொழிற்சங்கங்களை இணைத்து கருத்தரங்கு நடத்த சிஐடியு முன்முயற்சி எடுத்துள்ளதாக அகில இந்தியத் தலைவர் டாக்டர் ஹேமலதா தெரிவித்தார். சென்னையில் டிஆர்இயூ மண்டல மாநாட்டை ஐசிஎஃப் அம்பேத்கர் அரங்கில் புதன்கிழமை தொடங்கி வைத்து அவர் ஆற்றிய உரையின் பகுதிகள்.
அரசாங்கத்தை எதிர்த்துப் போராடுவது ரயில்வே தொழிலாளர்களின் நலன்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கத்தின் நலன்களையும், நாட்டின் சுயசார்பு பொருளாதாரத்தையும் பாதுகாப்பதாகும். இதைச் செய்ய வேண்டிய பெரிய கடமை டிஆர்இயூ போன்ற சங்கங்களுக்கு உள்ளது.
ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில் டிஆர்இயூ மகத்தான வெற்றி பெற்றுள்ளது. உண்மையில் ரயில்வே தொழிலாளர்களின் முதன்மைச் சங்கமாக டிஆர்இயூ செயல்படுகிறது. இதனால் எஸ்ஆர்எம்யூவை விட நமக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது. இன்று உலகம் முழுவதும் தொழிலாளி வர்க்கம் கடும் சவால்களை எதிர்கொள்கிறது. ரயில்வே, தபால், தொலைத்தொடர்பு, அரசு ஊழியர்கள், பொ துத்துறை நிறுவன ஊழியர்கள், அமைப்புசார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் என அனை வரும் தனியார்மய, தாராளமய, உலகமய பொரு ளாதாரக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு, சம்பளம், பணி நிலைமைகள் மோசமாக உள்ளன. நிரந்தர வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன. ரயில்வேயில் முன்பு 16-17 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றினர். தற்போது இது 12 லட்சமாக குறைந்துள்ளது. ஆனால் ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பாதுகாப்பு பிரிவு கள் உள்பட அனைத்து பிரிவுகளிலும் ஒப்பந்த முறை விரிவடைகிறது.
உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகள்
போராடிப் பெற்ற உரிமைகள் பறிக்கப்படு கின்றன. சங்கம் அமைக்கும் உரிமை, வேலை நிறுத்த உரிமை மறுக்கப்படுகின்றன. தொழிலாளர் சட்டங்களை நான்கு தொகுப்புகளாக மாற்றி உரிமை களைப் பறிக்க ஒன்றிய பாஜக அரசு முயல்கிறது. இதை எதிர்த்து பிஎம்எஸ் தவிர அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் சமீபத்தில் வேலை நிறுத்தம் நடத்தின. சம்பளம், போனஸ் குறைப்பு நடைபெறுகிறது. பல மாநிலங்களில் பணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்போசிஸ் நாராயணமூர்த்தி, எல் அண்ட் டி நிறுவன அதிகாரிகள் தொழிலாளர்கள் 12-14 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்கிறார்கள். கர்நாடகா, தெலுங்கானாவில் காங்கிரஸ் அரசு கள், ஆந்திராவில் தெலுங்கு தேசம் அரசு, பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு உள்பட அனைத்து மாநில அரசுகளும் ஒன்றிய அரசுக்கு ஆதரவாக தொழி லாளர் சட்டங்களைத் திருத்தி பணி நேரத்தை அதி கரித்துள்ளன. ரசாயன ஆபத்து நிறைந்த தொழிற் சாலைகளிலும் ஒப்பந்த தொழிலாளர்களை அமர்த்த லாம், இரவு நேரத்தில் பெண்கள் பணிபுரியலாம் என்று அரசாங்கங்கள் அனுமதிக்கின்றன.
பிளவுவாத முயற்சிகள் - ஆபத்தான அறிகுறி
தொழிலாளர்கள் போராடும்போது அவர்களைத் திசைதிருப்ப பாஜகவும் அதன் பரிவாரங்களும் முயல்கின்றன. உழைக்கும் வர்க்க ஒற்றுமையை மதத்தின் பெயரால் ஆர்எஸ்எஸ் சீர்குலைக்கிறது. ஒடி சாவில் சிறுபான்மையினர் தாக்கப்பட்டனர். அவர்க ளின் நிலங்கள் பறிக்கப்படுகின்றன. தமிழ்நாடு, கேரளாவில் போராடும் தொழிலாளர்களை மத ரீதியா கப் பிளவுபடுத்த மதவாத சக்திகள் தீவிரமாக முயல்கின்றன. ரயில்வே அங்கீகாரத் தேர்தலில் டிஆர்இயூ வெற்றி பெற்றாலும், பாஜகவின் பிஎம்எஸ் வாக்குகளை அதிகரித்துள்ளது. குறிப்பாக திருவனந்தபுரம், பாலக்காடு கோட்டங்களில் இது ஆபத்தான அறிகுறி. நாம் தொழிலாளர்களின் கோரிக்கைக்காகவும் மாற்றுக் கொள்கைகளுக்காகவும் போராடுகிறோம். ஆனால் ஒன்றிய பாஜக அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆதரிக்கும் பிஎம்எஸ் வளர்கிறது என்றால், அது உண்மையான பிரச்சனை களில் இருந்து தொழிலாளர்களை திசை திருப்பி மதரீதியாகத் திரட்டுகிறது. இவர்களின் பிளவுவாதக் கருத்துக்களை அம்பலப்படுத்துவதில் நாம் தீவிரமாக இருக்க வேண்டும்.
மோடி அரசின் பாராமுகம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது பெரும்பான்மை ஊழியர்களின் கோரிக்கை. பிஎம்எஸ் கூட முன்பு இதை வலி யுறுத்தியது. 8ஆவது ஊதியக் குழுவை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அரசு இதை நிறைவேற்ற மறுக்கிறது. அரசாங்கம் அனைத்து துறைகளிலும் ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கிறது. அவர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் கூட வழங்க மறுக்கிறது. நிரந்தர ஊழியர்கள் செய்யும் வேலையையே ஒப்பந்த ஊழியர்களும் செய்கிறார்கள். ஒரே வேலைக்கு ஒரே ஊதியம் தர ஏன் மறுக்கிறார்கள்? அரசு கடைப் பிடிக்கும் தவறான பொருளாதாரக் கொள்கைகளே இதற்குக் காரணம் என்பதை நாம் விளக்க வேண்டும். உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ரயில் பெட்டி களைத் தயாரிக்கும் நமது உற்பத்திப் பிரிவுகளுக்கு ஆர்டர் வழங்காமல், பன்னாட்டு நிறுவனங்களிடம் மெட்ரோ பெட்டிகளை இறக்குமதி செய்கிறது மோடி அரசு. சுயசார்பு இந்தியா பற்றிப் பேசும் பிரதமர், பொதுத்துறை நிறுவனங்களுக்குப் போதிய ஆர்டர் வழங்காமல் தனியார், பன்னாட்டு நிறுவனங்க ளுக்கு வழங்குகிறார். ஏன் இப்படி நடைபெறுகிறது என்பதை நாம் மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும்.
ரயில் விபத்துகளுக்கு யார் காரணம்?
ரயில் விபத்துகள் ஏற்படும்போது விசாரணைக்கு முன்பே ஓட்டுநர், நிலைய அதிகாரி, சிக்னல் ஊழியர், டிராக் மேன் மீது பழி போடப்படுகிறது. இதை நாம் ஏற்க முடியாது. உண்மையான காரணங்கள் - பாதை பராம ரிப்புப் பணிகள் முறையாக நடைபெறவில்லை, போதிய நிதி ஒதுக்கப்படவில்லை, பாதுகாப்புப் பணிக ளில் போதிய பயிற்சியற்ற, நிபுணத்துவமற்ற ஒப்பந்த ஊழியர்கள் அமர்த்தப்பட்டு பிரச்சனை ஏற் படும்போது அவர்கள் மீது பழி போடப்படுகிறது. இந்தப் பிரச்சனைகளில் சிஐடியு தவிர எந்தத் தொழிற்சங்கமும் கவனம் செலுத்தவில்லை. பொது மக்களுக்கு இந்தக் காரணங்கள் தெரியாது. ரயில் பயணிகள் பாதுகாப்பு விஷயத்தில் ஒன்றிய அரசு எவ்வளவு பொறுப்பற்று உள்ளது என்பதையும் நாம் அம்பலப்படுத்த வேண்டும்.
வாரணாசியில் தேசிய கருத்தரங்கம்
சிஐடியு 17 ரயில்வே கோட்டங்களில் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்களை இணைத்து தேசிய கருத்தரங்கம் நடத்தவுள்ளது. லோகோ பைலட்டுகள், கார்டு கவுன்சில், ஒப்பந்த தொழிலாளர் சங்கங்கள் அழைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பான ரயில் பயணத்தை உறுதிப்படுத்துவது குறித்தும் விவா திக்கப்படும். தேசிய கருத்தரங்கிற்கு முன்பு மாநில அளவில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. இந்த மாதம் 14ஆம் தேதி வாரணாசியில் கருத்தரங்கம் நடைபெறு கிறது. டிஆர்இயூ, ஐசிஎஃப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன், சித்தரஞ்சன் லோகோ சிஐடியூ சங்கம் பங்கேற்கின்றன. வட இந்தியாவில் சிஐடியு பலமாக இல்லாவிட்டாலும், அரசியல் சார்பற்ற ரயில்வே தொழிலாளர்கள் இந்த முன்முயற்சியை ஆதரிக்கி றார்கள். தென்னிந்தியாவில் டிஆர்இயூ வெற்றி பெற்ற தைப் போல், மேற்கு வங்கம் சித்தரஞ்சன் லோகோ தொழிற்சாலையில் சிஐடியூ சங்கம் வெற்றி பெற்று அங்கீகாரம் பெற்றுள்ளது. தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் ரயில்வே ஒப்பந்த தொழிலாளர் சங்கங் கள் அனைத்தும் சிஐடியுவில் இணைக்கப்பட்டுள்ளன.
டிஆர்இயூவின் பெரும் பொறுப்பு
இந்த தொழிற்சங்கங்களை இணைத்து ரயில்வே தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்குப் போராடு வதோடு, இதர பிரிவு ஒன்றிய அரசு ஊழியர்களின் ஆதரவையும் பெற வேண்டும். ரயில்வே தொழிலா ளர்களின் நிலை குறித்து மற்ற தொழிலாளி வர்க்கத்தி ற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இன்று ரயில்வேயில் உள்ள பெரிய தொழிற் சங்கங்கள் அரசாங்கத்தின் தவறான கொள்கைகளை எதிர்த்துப் போராட தயாராக இல்லை. தொழிற்சங்க கூட்டு இயக்கத்தில் எச்எம்எஸ், ஐஎன்டியூசி உள்ளிட் டவை இருந்தாலும், அவை அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்தாலும் ரயில்வேயில் போராட தயங்குகின்றன. எனவே அரசாங்கத்தை எதிர்த்துப் போராடுவது ரயில்வே தொழிலாளர்களின் நலன்களை மட்டு மல்ல, ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கத்தின் நலன்க ளையும், நாட்டின் சுயசார்பு பொருளாதாரத்தையும் பாதுகாப்பதாகும். இதைச் செய்ய வேண்டிய பெரிய கடமை டிஆர்இயூ போன்ற சங்கங்களுக்கு உள்ளது. மற்ற ரயில்வே தொழிற்சங்கங்களை இணைக்க வும், மாற்றுக் கொள்கைகளை விளக்கவும் டிஆர்இயூ முன்முயற்சி எடுக்க வேண்டும். இளம் ரயில்வே தொழிலாளர்களை அதிகளவில் சேர்க்க வேண்டும். உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தொடர்ச்சியாக அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக இதர தொழிற்சங்கங்களை இணைத்துப் போராட வேண்டும். முதலாளித்துவ முறை சீர்குலைந்து கொண்டி ருக்கிறது. முதலாளிகளின் லாபம் உற்பத்தியில் முத லீடாக வராமல் பங்குச்சந்தைக்குச் செல்கிறது. இத னால் வளர்ச்சியோ வேலைவாய்ப்புகளோ இல்லை. தொழிலாளர்களின் உரிமைகள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளதால், உலகம் முழுவதும் போராட் டங்கள் அதிகரித்துள்ளன. இந்த உலகளாவிய போராட்டங்களுடன் இணைந்து நமது போராட்டங்க ளையும் முன்னெடுக்க வேண்டும். தமிழில் சுருக்கம் : அ.விஜயகுமார்