ரகசியம்?
மாநிலங்களவையில் உள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டம் நடந்துள் ளது. பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவும் இதில் கலந்து கொண்டார். எதிர்க்கட்சிகளின் குரல்கள் நசுக்கப்படுகின்றன என்று குற்றச்சாட்டு எழுந்தபோது, அப்படியெல்லாம் இல்லை என்று பாஜகவினரும், நடக்காது என்று சிபி ராதாகிருஷ்ணனும் சொன்னார்கள். ஆனால், ஜான் பிரிட்டாஸ் பாஜகவினரின், முன்னாள் குடியரசுத்தலைரின் செயல்பாடுகளை உரித்துத் தொங்கவிட்டார். சாதாரணமாக, தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் கிடைக்கும் தகவல்களைக் கூட தருவதில்லை என்றார். சில எடுத்துக்காட்டுகளையும் கூறி னார். புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட எவ்வளவு செலவானது என்று கேட்டதற்குப் பதில் இல்லை. பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி பற்றிய கேள்விக்கும் பதில் இல்லை. கூடுதல் அதிர்ச்சி என்னவென்றால், இரண்டாவது கேள்விக்கான பதில் “ரகசியம்” என்று சொல்லி விட்டார்கள்.
சாதனை..!
உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷ் நகரில் மத வெறிக் கும்பலை விரட்டியடித்துப் பெண்கள் சாதனை புரிந்துள்ளனர். “மிஸ் ரிஷிகேஷ்” போட்டி நடக்குமிடத்திற்குள் ராஷ்டிரிய இந்து சக்தி அமைப்பைச் சேர்ந்த குண்டர்கள் நுழைந்துள்ளனர். இந்தியப் பண்பாட்டுக்கு இந்த நிகழ்ச்சி எதிரானது என்று கூச்சல் போட்டிருக்கிறார்கள். ஆனால், அந்தக் குண்டர்கள் எதிர்பார்த்ததைப் போன்று, பெண்கள் அஞ்சவில்லை. எதிர்த்து நின்றார்கள். இது எங்கள் உரிமை. நாங்கள் இதற்கெல்லாம் அஞ்சமாட்டோம் என்று முழங்கினர். குண்டர்கள் பின்வாங்கினர். நிகழ்ச்சி தொடர்ந்தது. பொதுவெளியில் எங்களுக்கான இடம் அதிகரித்துள்ளது. அதைப் பயன்படுத்திக் கொள்வதில் பின்தங்க மாட்டோம் என்று பெண்கள் தெரிவித்துள்ளனர். குண்டர்களை எதிர்கொள்வதில் முன் நின்ற முஸ்கான் போட்டியில் முதலிடத்தைப் பெற்றார்.
மகிழ்ச்சி
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்பதற்கான சட்டத்தை ஆட்சிக்கு வந்த 20 நாட்களில் கொண்டு வருவோம் என்ற தேஜஸ்வி யாதவின் அறிவிப்பு பீகார் தேர்தல் களத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பீகாரில் வேலையின்மைப் பிரச்சனை, அரசு வேலைகளில் காலிப்பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது, நிரப்புகையில் ஏராளமான ஊழல் உள்ளிட்டவற்றால் படித்த இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுகிறது. இந்த அறிவிப்பு இளைஞர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துணை முதல்வராக இருந்த வெறும் 17 மாதங்களில் ஐந்து லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்பியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நீங்கள் அந்த சாதனைக்கு உரிமை கொண்டாட முடியாது என்ற கருத்துக்கு பதில் அளித்த தேஜஸ்வி, அதன்பிறகு அப்படியொரு பணி நிரப்புதலை உங்களால் ஏன் செய்ய முடியவில்லை என்று எதிர்க்கேள்வியை எழுப்பியுள்ளார்.
தெளிவு..??
யமுனா ஆற்றைப் பார்க்கையில் தெளிவான நீராக இருந்தால் எப்படி இருக்கும் என்ற வினாவை எழுப்பினால், தில்லி மக்களின் கண்களில் பெருமகிழ்ச்சி தோன்றும். ஆண்டாண்டு கால மாக இந்த ஆற்றைத் தூய்மைப்படுத்துவதாகச் சொல்லி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் செலவாகியுள்ளன. இன்றும் கூட, பெருமளவு ஆற்று நீர் மாசுபட்டே ஓடுகிறது. 2017-2022 ஆம் ஆண்டுகளில் சுமார் 8 ஆயி ரம் கோடி ரூபாய் மக்களின் பணம் விரயமாகி விட்டது. இப்போது 1,816 கோடி ரூபாய் திட்டம் ஒன்றை அமித்ஷா தொடங்கி வைத்துள்ளார். கங்கையைத் தூய்மைப்படுத்துகிறோம் என்று சொல்லி, பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கோடிகளை ஒதுக்கி, அந்தப் பணம் எங்கே போனது என்று கேட்குமளவில்தான் கங்கையின் நிலைமை உள்ளது என்பதையும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.