கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் வன்முறை வெறியாட்டம் நிகழ்த்திய சங் பரிவாரங்கள் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கடும் கண்டனம்
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது, மாநில பொதுச் செயலாளர் பி.செந்தில்குமார் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் குறிப்பாக, சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூர், அஸ்ஸாம்மில் நல்பாரி, மத்தியர் பிரதேச மாநிலத்தில் ஜபல்பூர், ஒரிசாவில் பூரி, உத்திரப்பிரதேசத்தில் பாரில்லி, தில்லியில் லாஜ் பெட் நகர் பகுதிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் கிறிஸ்தவ தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்ற புகைப்படங்களுக்கு வெளிப்படுத்திக் கொண்டி ருந்த நேரத்தில், அவர் செயல்பாட்டாளராக இருக்கும் ஆர்எஸ்எஸ் முகாமை சேர்ந்த குற்ற வாளிகள் எவ்வித அச்சமும் இல்லாமல், காவல் துறை முன்னிலையில் கலவரத்தில்ஈடுபட்டுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் கிறிஸ்து மஸ் பொருள் விற்பனை செய்த கடையை அடித்து நொறுக்கி, ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்க மிட்டுள்ளனர். பலர் காவி முகமூடியை அணிந்து ள்ளனர். காவல்துறை முன்னிலையில் தேவா லயத்திற்குள் புகுந்து மக்கள் மீது கொடூரத் தாக்குதலை நடத்தி பொருட்களை சூறை யாடியுள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் தேவாலயத்திற்குள் புகுந்து சேதப்படுத்தி, கற்களை வீசி கலவரத்தில் ஈடுபட்டு ஜெய் ஸ்ரீ ராம் முழக்கமிட்டுள்ளனர். கிறிஸ்துமஸ் விழாவில் புகுந்து பாஜக மாவட்ட துணைத் தலைவர் அஞ்சு பார்க்கவ் காவல்துறை முன்னிலையில் பார்வையற்ற பெண்ணை தாக்கியுள்ளார். பைபிளை - இது வெளிநாட்டு தயாரிப்பு; இங்கு படிக்க கூடாது என பாதிரியாரை மிரட்டி ஜெய் ஸ்ரீ ராம் முழக்கமிட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் கிறிஸ்துமஸ் விடுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கூட சங் பரி வாரத்தினர் கல்வி நிறுவனங்களை மிரட்டி கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை ரத்து செய்ய வைத்துள்ளனர். அசாம் மாநிலம் நல்பாரி மாவட்டத்தில் செயின்ட் மேரி பள்ளி வளாகத்தில் புகுந்து கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட் களை சூறையாடி தீட்டு கொளுத்தி உள்ளனர். நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்கள் சிறுபான்மையினரை அச்சமூட்டும் வகையில் நடைபெற்று வருகின்றன. பாஜக ஆளும் மாநி லங்களில் அரசும், காவல் துறையும் வேடிக்கை பார்க்கிறது. கிறிஸ்து பிறப்பு நாளில் சிறு பான்மையினரின் வழிபாட்டு உரிமை பறிப்பு, கொடூரத் தாக்குதல், அச்சுறுத்தல், பொருட் களை சூறையாடுதல், தீயிட்டு கொளுத்துதல் என கலவரத்தை ஏற்படுத்த முயற்சிகள் நடை பெற்றுள்ளன. இத்தகைய வன்முறை கும்பல், தமிழ்நாட்டி லும் மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்க பல்வேறு சதி செயல்களில் ஈடுபட்டு வருகிறது. எனவே இத்தகைய இழி செயலில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார், கும்பல் களை கண்டித்தும், இது போன்ற செயல்களில் ஈடுபட்டவர்களை பாஜக ஆளும் மாநில காவல் துறைகள் வேடிக்கை பார்த்து, மொத்த அரசு இயந்திரமும் துணை போனதை கண்டித்தும், குற்றவாளிகள் மீது உரிய வழக்கு பதிவு செய்து தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒன்றிய பாஜக ஆட்சியாளர்கள் ஆசி யோடு நடைபெறும் இத்தகைய வன்முறை வெறியாட்டத்தை வன்மையாக கண்டித்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு நடத்தவுள்ள கண்டன இயக்கத்தில், அனைத்து பகுதி மக்களும் பங்கேற்று சிறுபான்மையினர் உரிமை காக்க, மக்கள் ஒற்றுமையை பேண வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.