states

img

லக்னோ உ.பி.யில் 2.8 கோடி வாக்காளர்கள் நீக்கம்

லக்னோ உ.பி.யில் 2.8 கோடி வாக்காளர்கள் நீக்கம்

பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு, கேர ளம், உத்தரப்பிரதேசம் என 12  மாநிலங்களில் (யூனியன் பிரதேசம்  சேர்த்து) வாக்காளர் பட்டியல் சிறப்பு  திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நடத்தப்பட்டு,  வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளி யிடப்பட்டுள்ளது. வரைவு பட்டியலில்,  தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர் களும், கேரளாவில் 22 லட்சமும், மத்தி யப் பிரதேசத்தில் 42 லட்சமும், சத்தீஸ்க ரில் 27 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட் டுள்ளனர். இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் எஸ்ஐஆர் பணிக்குப் பின்பு வெளியிடப்பட்ட வரைவு பட்டிய லில் 2.8 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்  டுள்ளனர். இதுதொடர்பாக அம்மாநில  தேர்தல் ஆணையம் கூறுகையில், “பதிவு செய்யப்பட்ட 15.4 கோடி வாக்காளர் களில், 18.7% அதாவது 2.89 கோடி வாக்கா ளர்களின் விபரங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் (BLO) சேகரிக்க முடியவில்லை. 50 லட்சத்திற்கு மேல்  எண்ணற்ற வாக்காளர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளுக்கு  (1.3 கோடி) குடிபெயர்ந்துவிட்டனர். முக வரி இல்லாதவர்கள் (84.5 லட்சம்), இறந்தவர்களின் (45 லட்சம்) பட்டியலும்  இதில் அடங்கும்” என அதில் கூறப்பட் டுள்ளது. லக்னோவில் 12 லட்சம் பேர் உத்தரபிரதேசத்தின் தலைநகரான லக்னோவில், சுமார் 30 சதவீத மக்களின்  (12 லட்சம் பேர்) விவரங்கள் கிடைக்க வில்லை. இவர்களில், 5.4 லட்சம் பேர்  மற்ற பகுதிகளில் வாக்களிக்கத் தேர்வு  செய்தனர், அதே நேரத்தில் 4.3 லட்சம்  வாக்காளர்களின் இருப்பிடம் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என செய்தி கள் வெளியாகியுள்ளன.