ஊரக வேலைத்திட்ட பயனாளிகளை இழிவுபடுத்துவதா?
சென்னை, டிச.28 - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தை சிதைத்து - புதிய திட்டத்தை நிறை வேற்றிய பாஜக அரசுக்கு எதிராக குரல் கொடுக்காத நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பா ளர் சீமானுக்கு அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.சின்னதுரை எம்.எல்.ஏ., பொதுச் செயலாளர் வீ. அமிர்தலிங்கம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நேர்காண லில், சீமான் ‘ஊரக வேலைத்திட்டத் தொழிலா ளர்களை சோம்பேறிகள்’ என மீண்டும் தெரிவித்துள் ளதுடன் வேலை செய்யாமல் ஆடு மேய்த்துக் கொண்டும், பல்லாங்குழி விளையாடியும், விறகு வெட்டிக் கொண்டும் கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என கிராமப்புற ஏழை களின் வேதனை புரியாமல் உளறியுள்ளார். ஊரக வேலைத் திட்டத்தைச் சிதைத்து - விபிஜி ராம் ஜி திட்டம் என மாற்றி மாபாதகச் செயலில் ஈடு பட்டுள்ள ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக குரல் எழுப்பாத சீமான், ஊரக வேலைத்திட்டத் தொழி லாளர்களை இழிவுபடுத்தியுள்ளதை விவசாயத் தொழிலாளர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற கருத்தை வெளியிட்டிருந்தார். அப்பொழுது தமிழ் நாடு முழுவதும் கிராமப்புற மக்கள் அவருக்கு கண்டனத்தை தெரிவித்ததை மறந்துவிட்டு மீண்டும் அதே போன்ற உளறலை செய்துள்ளது, கிராமப்புற ஏழைகளின் மீது அவருக்குள்ள அக்க றையற்ற போக்கையும், பாஜகவுக்கு ஒத்து ஊதும் நடவடிக்கையும் ஆகும். விவசாய வேலையின் மூலம் கிடைத்து வந்த வேலை நாள்கள் அற்ப, சொற்பமாகி விட்ட நிலையிலும், கிராமப்புற ஏழைகள் வாழ்வா தாரம் மிகக் கடுமையாக பாஜக அரசின் கொள்கை களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், சிறிது வாழ்வாதாரப் பாதுகாப்பு கிடைத்து வந்த மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்தை ஒரேயடி யாக ஒழித்துள்ள செயலைக் கண்டிக்காத சீமான் போன்றவர்கள் இப்படி தொடர்ந்து கிராமப்புற ஏழைகளை வசைபாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். கிராமப்புற ஏழைகளின் உண்மை நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.