பாஜக அரசின் சூழ்ச்சிகளை முறியடிக்க ஒன்றுபட்ட போராட்டங்களை தீவிரப்படுத்துவோம்!
பாஜக அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளை முறி யடிப்பதற்கும், இந்தியாவை ஓர் ‘இந்து ராஷ்டிரமாக’ மாற்ற வேண்டும் என்பதற்காக அது வெறித்தனமாக மேற்கொண்டு வரும் முயற்சி களை முறியடிப்பதற்கும் நமது ஒன்றுபட்ட போராட்டங் களை முன்னெடுத்துச் செல்ல புத்தாண்டில் உறுதி ஏற்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறைகூவல் விடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூட்டம் 2025, டிசம்பர் 26 அன்று புதுதில்லியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு: மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் ரத்து பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்திற்குப் பதிலாக, அதன் தன்மையை கடுமை யாக நீர்த்துப்போகச் செய்து, ‘விக்சித் பாரத் ஜி ராம் ஜி’ என்னும் பெயரில் ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இது, தேவை மற்றும் உரிமைகள் அடிப்ப டையிலான வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் அடிப் படைத் தன்மையையே மாற்றிவிட்டது. புதிதாக இயற்றப்பட்ட இந்தச் சட்டம், நிதிச் சுமையை மத்திய அரசிடமிருந்து மாநிலங்களுக்கு மாற்றுகிறது; அதே சமயம், அதன் அமலாக்கத்தில் மாநிலங்களுக்கு எந்தப் பங்கும் இல்லாமல் செய்கிறது. கோடிக்கணக்கான கிராமப்புறத் தொழிலாளர் களின் நலன்களுக்குப் பாதகமான இந்தச் சட்ட முன்வடிவை, நாடாளுமன்றத்தில் தனக்கிருந்த பெரும் பான்மையைப் பயன்படுத்தி அரசாங்கம் நிறை வேற்றியுள்ளது. இந்த மாற்றத்திற்கு எதிராகப் பல்வேறு அமைப்புகள் நடத்தி வரும் போராட்டங் களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆத ரவைத் தெரிவித்துக் கொள்கிறது. வரும் நாட்களில் கட்சி சக்திகளுடன் இணைந்து, போராட்டங்களை மேலும் வலுப்படுத்தும். தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு மற்று மொரு உதாரணமாக, பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, தொழிலாளர்களின் பரவலான எதிர்ப்பையும் மீறி நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை அறிவிக்கை செய்துள்ளது. இந்தத் தொழிலாளர் சட்டத் தொகுப்புகள்,
தற்போதைய அரசுக்கு நெருக்கமாகவுள்ள கூட்டுக்களவாணி கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கப்படும் ஒரு பரிசா கும். நாட்டின் உழைக்கும் வர்க்கம் இந்த மாற்றங் களுக்கு எதிராகப் போராட்டத்தில் அணிதிரண்டு வரு கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தப் போரா ட்டத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவிப்பதுடன், அதில் தீவிரமாகப் பங்கேற்கும். அஸ்ஸாமில் தாக்குதல்கள் அஸ்ஸாமின் கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் வெடித்த வன்முறை காரணமாக இரண்டு பேர் உயிரி ழந்ததற்கும், பெருமளவிலான சொத்துக்கள் அழிக்கப் பட்டதற்கும் அரசியல் தலைமைக்குழு தன் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது. இன ரீதியான குழுக்களுக்கு இடையே ஏற்படும் மோதல்களால் நிலைமை மேலும் மோசமடைந்து வருகிறது. இந்த பாதகமான வளர்ச்சிக்கு, அஸ்ஸாமில் உள்ள பாஜக ‘இரட்டை எஞ்சின்’ அரசாங்கமும், இனப் பிளவுகளை வளர அனுமதித்து அதன் மூலம் இனவெறி அரசியலுக்கு வழிவகுக்கும் அதன் அணுகு முறையுமே காரணமாகும். இது மக்களை நிலத்தி லிருந்து வெளியேற்றும் கொடிய கொள்கைகளின் விளைவுமாகும். ஆரவல்லி மலைத்தொடரின் அழிவு ஆரவல்லி மலைத்தொடரின் வரையறையில் பாஜக அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டு,
உச்ச நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமீபத்திய மாற்றங்கள், சுற்றுச்சூழல் ரீதியாகக் கூருணர்வுமிக்க இந்த மலைத்தொடர்கள் சுரண்டப்படும் அபாயம் குறித்துக் கடுமையான கவலைகளை எழுப்புகின்றன. இந்த மாற்றங்கள், மலைகளைச் சேதப்படுத்தி, பலவீனமான சுற்றுச்சூழல் அமைப்பில் பேரழிவை ஏற்படுத்தும் சுரங்க மற்றும் ரியல் எஸ்டேட் நட வடிக்கைகளைச் சட்டப்பூர்வமாக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட விளக்கங் கள் நம்பிக்கையூட்டுவதாக இல்லை. சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கொள்கையில் ஓர் அடிப் படை மாற்றம் கொண்டுவரப்பட்டு, ஆரவல்லி மலைத்தொடரின் அசல் வரையறை மீட்டெடுக்கப் பட்டால் தவிர, இந்த மலைத்தொடர்களுக்கு உண்மையான பாதுகாப்பு கிடைக்காது. வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை வங்கதேசத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து அரசியல் தலைமைக்குழு தனது ஆழ்ந்த கவலை யைத் தெரிவித்துக்கொள்கிறது. இடைக்கால அர சாங்கம் மதச் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் களைத் தடுக்கத் தவறிவிட்டதுடன், மத அடிப்படை வாத சக்திகள் எந்தத் தடையுமின்றி செயல்பட அனுமதித்து வருகிறது. ஓர் இந்து இளைஞர் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம்,
கலாச்சார அமைப்புகள் மற்றும் ஊடகங் கள் மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட சமீபத்திய நிகழ்வு கள் மிகவும் கண்டிக்கத்தக்கவை. இத்தகைய நிகழ்வு கள் நாட்டின் பாதுகாப்புக்கும் ஒற்றுமைக்கும் நல்ல அறிகுறியல்ல. வங்கதேச மக்கள் மத அடிப்படைவாத சக்திகளின் வலையில் சிக்க மாட்டார்கள் என்றும், 1971 விடுதலைப் போராட்டத்தின் விழுமியங்களைப் பாதுகாக்க ஒன்றுபட்டு நிற்பார்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம். வங்கதேச அரசாங்கம் பிளவுபடுத்தும் சக்திகளைக் கட்டுப்படுத்தவும், சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வெனிசுலா மீதான தாக்குதல் வெனிசுலாவுக்கு எதிரான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பையும், இராணுவத் தாக்குதலைத் தொடங்குவதற்கான அதன் திட்டங்களையும் அர சியல் தலைமைக்குழு கண்டிக்கிறது. புதிதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு உத்தி, லத்தீன் அமெரிக்கப் பிராந்தியத்தில் ‘மன்ரோ கோட்பாட்டை’ அமல்படுத்தும் அதன் நோக்கத்தைத் தெளிவாகக் காட்டுகிறது.
வெனிசுலா போன்ற நாடுகளின் இறையாண்மை மீதான தாக்குதல்களும், அவற்றின் உள்விவ காரங்களில் தலையிடுவதும் ஐ.நா. சாசனத்தை மீறுவதாகும். மேலும், இது அமெரிக்காவின் மேலாதிக்க நோக்கங்களை அம்பலப்படுத்துகிறது. வெனிசுலாவுக்கு எதிராகவும், இப்பிராந்தியம் முழுவதிலும் அமெரிக்கா மேற்கொள்ளும் ஆக்கிர மிப்பை எதிர்த்தும், அனைத்து முற்போக்கு, ஜனநாயக மற்றும் தேசபக்தி சக்திகளும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். புத்தாண்டு வாழ்த்துகள் அரசியல் தலைமைக்குழு நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள் கிறது. பாஜக அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளை முறியடிப்பதற்கும், இந்தியாவை ஓர் இந்து ராஷ்டிரமாக மாற்ற வேண்டும் என்பதற்காக அது வெறித்தனமாக மேற்கொண்டு வரும் முயற்சி களை முறியடிப்பதற்கும் நமது ஒன்றுபட்ட போராட்டங் களை முன்னெடுத்துச் செல்ல புத்தாண்டில் உறுதி ஏற்போம். மத்தியக் குழுக் கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடுத்த மத்தி யக் குழுக் கூட்டம் 2026 ஜனவரி 16-18 தேதிகளில் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடைபெறும். - தமிழில்: ச. வீரமணி