கோவை உயர்மட்ட பாலத்துக்கு சி.சுப்பிரமணியம் பெயர்
சென்னை: கோவை மாநகரில் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை அமைந்துள்ள உயர்மட்ட மேம்பாலத்துக்கு ‘சி.சுப்பிரமணியம் மேம்பாலம்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டியுள்ளார். பாரத ரத்னா விருது பெற்ற மறைந்த ஒன்றிய அமைச்சர் சி.சுப்பிரமணியம், நாட்டில் பசுமைப் புரட்சிக்கு அடித்தளம் அமைத்து மக்களின் பசிப்பிணியைப் போக்கியவர் என முத லமைச்சர் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவர் டாக்டர் பி.கே.கிருஷ்ண ராஜ் வாணவராயர் வைத்த கோரிக்கையை ஏற்று இந்த அறி விப்பு செய்யப்பட்டுள்ளது.
எஸ்.ஐ.ஆர். படிவம் சமர்ப்பிக்காதவர்களுக்கு நோட்டீஸ்
சென்னை: எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவங்களை முறை யாக பூர்த்தி செய்யாத 10 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வாக்காளர் பட்டிய லில் உள்ள வாக்காளர்கள் தாங்களோ அல்லது உறவினர் களோ வாக்காளராக இருப்பதை உறுதிப்படுத்தும் விவரங்களை பூர்த்தி செய்யாத நிலையில், உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கோரி இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
கோவையில் சர்வதேச தர ஹாக்கி மைதானம் நாளை திறப்பு
கோவை: ஆர்.எஸ்.புரத்தில் மாநகராட்சி சார்பில் ரூ.9.67 கோடியில் கட்டப்பட்டுள்ள சர்வதேச தர ஹாக்கி மைதா னத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 30 ஆம் தேதி திறந்து வைக்கிறார். 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் இரவு நேர போட்டிகளுக்கென 6 மின்கோ புர விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு கோபுரத்தி லும் 500 வாட்ஸ் திறன் கொண்ட 20 எல்.இ.டி விளக்குகள் உள்ளன. வீரர்களுக்கான உடை மாற்றும் அறை, ஓய்வறை, கழிப்பறை ஆகிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. திறப்பு விழாவின்போது உதயநிதி ஸ்டாலின் சிறிது நேரம் ஹாக்கி விளையாடுவார். பின்னர் 10 ஆயிரம் பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.