tamilnadu

img

விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கனவுகளுக்கு சிறகு கொடுக்கும் உரையாடல்!

விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கனவுகளுக்கு சிறகு கொடுக்கும் உரையாடல்!

சென்னை மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் ஹையர் செகண்டரி ஸ்கூல் பள்ளியின் ஹாக்கி மைதானத்தில் ஒரு காலத்தில் ஆடிய சிறுவன், இன்று தமிழ்நாட்டின்  முதலமைச்சராக இளம் விளையாட்டு வீரர்களுடன் அமர்ந்து தனது வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். “வைப் வித் எம்கேஎஸ்” என்ற இந்த நிகழ்ச்சியில், சுமித்ரா காமராஜ், திருவெற்றியூர் காசியம்மா, மதுரை மனோஜ், துளசிமதி முருகேசன், ஆராதனா என பல சாதனை வீரர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். ஒரு கிரிக்கெட் ரசிகனின் பயணம் “உங்க சின்ன வயதில் மிகவும் பிடித்த விளையாட்டு வீரர் யார்?” என்ற கேள்விக்கு, முத லமைச்சர் தனது இதயத்தை திறந்து காட்டினார். “கிரிக்கெட் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அதிலும் குறிப்பாக கபில் தேவ் ரொம்ப ரொம்ப பிடிக்கும். காரணம், அவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து படிப்படியாக உயர்ந்து முன்னுக்கு வந்த வர். முதன்முதலாக இந்தியாவுக்கு உலகக்கோ ப்பையை வென்று கொடுத்த கேப்டன் அவர்தான்” என்று உணர்ச்சிபூர்வமாக பதிலளித்தார். சுனில் கவாஸ்கர், சச்சின் தெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி ஆகியோரையும் தனக்கு பிடித்த வீரர்களாக குறிப்பிட்ட முதலமைச்சர், “தமிழ்நாட்டிலும் நிறைய இளைஞர்கள் கிரிக்கெட் மட்டுமின்றி மற்ற விளையாட்டுகளிலும் வெற்றி பெற்று வருகிறார்கள். அதனால் அவர்களையும் ரொம்ப பிடிக்கும்” என்று உள்ளூர் திறமைகளுக்கு தனது மதிப்பை வெளிப்படுத்தினார். புத்தகப் பக்கங்களில் கிரிக்கெட் - பள்ளிக்கால நினைவுகள்! “நீங்கள் முதன்முதலாக தெருவில் விளை யாடிய விளையாட்டு எது?” என்ற கேள்வி, முத லமைச்சரை அவரது பள்ளிக்கால நினைவு களுக்கு அழைத்துச் சென்றது. “பள்ளியில் படிக்கும்போது ஹாக்கி விளையாடினேன்.  சென்னை மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் ஹையர் செகண்டரி ஸ்கூல் பள்ளியில் படிக்கும் பொழுது பள்ளி அணியிலும் இடம்பிடித்தேன். பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் போட்டி களிலும் விளையாடினேன்” என்று நினைவுகளை புரட்டினார். ஆனால் மிகவும் சுவாரஸ்யமான தருணம், அவர் ‘புக் கிரிக்கெட்’ பற்றி பேசிய போதுதான் வந்தது. “புத்தகங்களின் பக்கங்களைத் திறக்கும் போது, அந்தப் புத்தகத்தின் எண் 6 என்று வந்தால் ‘சிக்சர்’, நான்கு என்று வந்தால் ‘பவுண்டரி’, 1, 2, 3 என்று ரன்கள் கணக்கில் எழுதிக் கொள்வோம். பூஜ்ஜியம் வந்தால் ‘அவுட்’. இந்த மாதிரி விளை யாட்டை, அதுவும் பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது விளை யாடிய அனுபவம் உண்டு” என்று சிரித்தபடி வெளிப்படுத்தினார். “நான் பொதுவாக ஒரு பந்துவீச்சாளன். ஒரு ஆப் ஸ்பின்னர். எங்கள் தெருவில் கிரிக்கெட் விளையாடும்போது, எங்க அப்பா கலைஞருக்கு கிரிக்கெட் விளையாட நான் பந்து வீசியிருக்கிறேன்” என்று பெருமையுடன் குறிப்பிட்ட முதலமைச்சர், தனது விளையாட்டு திறமையை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த திரைப்பட நடிகர்களின் போட்டியிலும் நிரூபித்ததாக தெரிவித்தார்.  “எனது அணியின் சார்பில் மூன்று விக்கெட்டு களை வீழ்த்தினேன். எதிரணியில் நெப்போலியன், சிலம்பரசன் உள்ளிட்டோர் எனது ஆப் பிரேக் சுழற்பந்து வீச்சுக்கு அவுட் ஆனார்கள்” என்று சொன்னபோது, அங்கிருந்த இளம் வீரர்களின் கண்களில் ஆச்சரியம் பிரதிபலித்தது. தோனியின் சாந்தம்,  ஸ்டாலினின் வழி! “தோனியிடம் உங்களுக்கு பிடித்தது எது?” என்ற கேள்விக்கு முதலமைச்சர் அளித்த பதில்,  அரசியல் தலைமைத்துவம் பற்றிய ஒரு பாட மாகவே அமைந்தது. “குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், அவரது கேப்டன்ஷிப் ரொம்ப  பிடிக்கும். மிகவும் ஸ்மைலாக, சைலன்டாக, எந்த நிலையிலும் டென்ஷன் ஆகாமல் இருப்பதுடன், ஒரு சிறந்த கேப்டனாக சக வீரர்களுக்கு வழி காட்டுவது ரொம்ப ரொம்ப பிடிக்கும்” என்றார். “தோனியைப் போன்று இருக்க வேண்டும் என்று முயற்சி செய்வேன். அதனால் அவரு டன் ஒப்பிட முடியாது. வேண்டுமென்றால் அவரைப் போல இருக்க வேண்டும் என்று முயற்சி செய்ய லாம்” என்ற அவரது தாழ்மையான பதில், தலைமைத் துவத்தின் உண்மையான தன்மையைஎடுத்துக்காட்டியது. செல்போனை விட  விளையாட்டு முக்கியம் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு தகவலை சொல்ல வேண்டும் என்றால் என்ன சொல்வீர்கள் என்ற கேள்விக்கு, முதலமைச்சர் அளித்த பதில்,  சமூக சிந்தனையை தூண்டக்கூடியதாக இருந்தது. “இந்த நிகழ்ச்சிக்கு வரும்போது நான் நேரில் பார்த்ததை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பு கிறேன். சுமார் 25 இளைஞர்கள் செல்போனைப் பார்த்து நடந்துகொண்டே செல்கின்றனர். அப்படிப்பட்ட இளைஞர்கள் செல்போனில் அதிகம்  கவனம் செலுத்துவதைவிட, ஓய்வு கிடைக்கும் போது, வாய்ப்பு கிடைக்கும்போது விளையாட்டுத் துறையிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பது தான் எனது ஆசை” என்றார். உதயநிதி ஸ்டாலினின் விளையாட்டுப் புரட்சி “அடுத்த 10 ஆண்டுகளில் விளையாட்டுத் துறை எந்த அளவுக்கு முன்னேறும்?” என்ற கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், தனது அர சின் விளையாட்டுக் கொள்கையை விரிவாக எடுத்து ரைத்தார். “எனது தலைமையிலான திமுக ஆட்சி யின் நான்கரை ஆண்டுகளில் அனைத்துத் துறை களும் முன்னேறி வருகிறது. அதிலும் குறிப்பாக கல்வி, விளையாட்டுத் துறைகள் மற்ற மாநிலங் களை மிஞ்சக்கூடிய அளவில் முன்னேறிக் கொண்டு  வருகிறது. அதனால்தான் விளையாட்டுத் துறைக்கு உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கி னோம்” என்றார். விளையாட்டுத்துறையை பொருத்தமட்டில் கடந்தகால ஆட்சியாளர்கள் பத் தோடு பதினொன்று என்று பார்த்து வந்தனர் என்று குறிப்பிட்ட முதலமைச்சர்,”ஒரு விளையாட்டு வீரரை உருவாக்க நிதி கொடுப்பது மட்டும் அரசின் கடமை அல்ல. “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி களிலும் ஸ்டேடியம் கட்டுவதற்கு திட்டமிட்டு பணி கள் நடைபெற்று வருகிறது. 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் கிரிக்கெட் ஸ்டேடியம், கால்பந்து ஸ்டேடியம், பொதுவான விளையாட்டு மைதானம் கட்ட வேண்டும் என்பதை அறிவித்து, அதற்கான முயற்சிகளிலும் படிப்படியாக ஈடுபட்டு வருகிறோம்” என்று எதிர்கால திட்டங்களை வெளிப்படுத்தினார். சுமித்ரா காமராஜின் பயணம்! 22 ஆண்டுகளாக கால்பந்து விளையாடி வரும்  சுமித்ரா காமராஜ், தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். “11 வயதில் கால்பந்தை உதைக்க ஆரம்பித்தேன். பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் கள்தான் எனக்கு ஆசான்கள். தற்போதைய கால கட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பான ஸ்டேடியம் இருக்கிறது. நல்ல அனுபவம் உள்ள மிகச் சிறந்த மூத்த பயிற்சியாளர்களும் இருக்கிறார் கள். அரசு செய்து கொடுத்திருக்கும் இத்தகைய வச திகளால் ஒலிம்பிக் விளையாட்டிலும் தமிழக வீரர் கள் வெற்றிபெற்று பதக்கம் வெல்ல நல்ல வாய்ப்பு இருக்கிறது” என்று நம்பிக்கை தெரிவித்தார். சுருதி ரத்தினவேலின் கண்ணீர் கதை! கூடைப்பந்து வீராங்கனை சுருதி ரத்தினவேல் தனது வாழ்க்கையின் மிகவும் சோகமான அத்தி யாயங்களை பகிர்ந்துகொண்டபோது, அங்கிருந்த அனைவரின் கண்களும் கலங்கின. “எனக்கு அப்பா அம்மா இல்லை. பத்தாம் வகுப்பு படிக்கும் போது அம்மா இறந்துவிட்டார். கல்லூரிக்கு சென்ற போது அப்பாவும் மரணம் அடைந்துவிட்டார். அது கொரோனா காலகட்டம். தந்தையை இழந்த அந்தத் தருணத்தில் எனது உலகமே இருண்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்” என்று உணர்ச்சிவசப்பட்டார். “அந்த மருத்துவமனையில் நான் மட்டுமே தனித்து நின்றேன். பெற்றோரின் உடலை அடக்கம் செய்யக்கூட எனது கையில் பணம் இல்லை. அம்மாவின் தங்கச் செயினை  அடகு வைத்துதான் இறுதிச்சடங்கை செய்து முடித்தேன்.  “அன்றைக்கு எனது நினைவுக்கு வந்தது கூடைப்பந்து விளையாட்டு மட்டுமே. அன்று முதல்  நாள்தோறும் பயிற்சியை எடுத்தேன். மிகவும் பின் தங்கிய குடும்பத்தில் பிறந்து வறுமையை எதிர் கொண்டு விளையாட்டில் ஈடுபட்டபோது, ‘நீ விளை யாடி என்ன சாதிக்கப் போகிறாய்’ என்று பலரும் ஏளனம் செய்தனர்” என்று நினைவுகூர்ந்தார். “தினமும் 8 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்து வந்தேன். எனது தம்பியை நான் படிக்க வைக்க வேண்டும், அவனையும் காப்பாற்ற வேண் டும் என்ற எண்ணம் மட்டுமே என் முன் நின்றது. இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி யில் விளையாடி எனது திறமையை நிரூபித்தேன்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். “தமிழ்நாடு அரசு உதவித்தொகை கொடுத்தது. அன்றைய தினம் முதல்வர் கொடுத்த உறுதி மேலும் எனக்கு ஊக்கத்தைக் கொடுத்தது. அந்த முதல்வரும் என்னுடைய ‘எனர்ஜி பூஸ்டரும்’ நீங்கள் தான். நான் விளையாட்டுத் துறையில் இந்த அள வுக்கு உயரத்தில் சென்றதற்கு உங்கள் தலைமை யிலான அரசுதான்” என்று நன்றி தெரிவித்த போது, முதலமைச்சரின் கண்களில் மகிழ்ச்சிதெரிந்தது. காசியம்மாவின் தங்கப் பயணம் திருவெற்றியூரைச் சேர்ந்த காசியம்மா, தனது உலகக்கோப்பை வெற்றிக் கதையை சொன்ன போது, அரசின் விரைவான உதவி எப்படி ஒரு வீர ருக்கு வாழ்க்கையை மாற்றும் என்பதற்கு சிறந்த உதாரணமாக அமைந்தது. “2024-ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கேரம் போட்டியில் இரண்டு தங்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தேன். போட்டிக்குப் புறப்பட இரண்டு நாட்கள்தான் இருந்தது. எங்க அப்பா ஒரு ஆட்டோ ஓட்டுநர். வெளிநாடு செல்வதற்கு பணம் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்தோம்” என்றுதொடங்கினார். “எனது நிலைமையை அறிந்த துணை முதல மைச்சர், நிதி உதவி கேட்டு விண்ணப்பம் செய்த சில மணி நேரங்களில் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து போட்டியில் உடனடியாக பங்கேற்பதற்கு அனைத்து வகையிலும் உதவி செய்தார். பதக்கம்  வென்று சென்னை திரும்பியதும் நேரில் அழைத்து எனக்கு ஒரு கோடி ரூபாய் ஊக்கத்தொகையும் கொடுத்து மேலும் உற்சாகப்படுத்தினர்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.   இந்த நிகழ்ச்சியில்  ஒரு முதலமைச்சர் வெறும் கொள்கைகளை அறிவிப்பதோடு நிற்காமல், விளையாட்டு வீரர்களுடன் அவர்களது மைதானத்தில் இறங்கி, அவர்களது கனவுகளை புரிந்துகொண்டு, அவர்களுக்கு சிறகு கொடுக்கும் அரிய காட்சிகளின் தொகுப்பாக “வைப் வித் எம்கேஎஸ்” அமைந்தது. தொகுப்பு : சி. ஸ்ரீராமுலு