tamilnadu

சு.வெங்கடேசன் எம்.பி.,யின் கோரிக்கை ஏற்பு பொங்கல் தினத்தன்று நடைபெற இருந்த சிஏ தேர்வு வேறு தேதிக்கு மாற்றம்

சு.வெங்கடேசன் எம்.பி.,யின் கோரிக்கை ஏற்பு பொங்கல் தினத்தன்று நடைபெற இருந்த சிஏ தேர்வு வேறு தேதிக்கு மாற்றம்

மதுரை, டிச. 28- இந்தியப் பட்டய கணக்காளர் (சிஏ) கழகத்தின் தேர்வுகள் அடுத் தாண்டு (2026) ஜனவரி மாதம் முதல் மற்றும் 2ஆவது வாரத்தில் நடை பெற உள்ளது. அதாவது ஜனவரி 6  முதல் 17ஆம் தேதி வரை பல்வேறு  கட்டங்களாக இந்த தேர்வு நடை பெற உள்ளது. இந்த காலகட்டம் தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை விழா நாட்கள் ஆகும். பொங்கல் பண் டிகை நேரத்தில் (ஜன., 15 அன்று தேர்வு உள்ளது) சிஏ தேர்வு நடத்தப் படுவதால் அவற்றை வேறு தேதிக்கு  மாற்ற வேண்டும் என கோரிக்கை  எழுந்து வருகின்றன. இதுதொடர் பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை நாடாளுமன்ற உறுப் பினர் சு.வெங்கடேசன்,”பொங்கல் அன்று நடைபெற உள்ள சிஏ தேர்வு கள் தேதியை வேறு தேதிக்கு மாற்றம் செய்ய வேண்டும்” எனக்  கோரி இந்தியப் பட்டய கணக்காளர் கழகத்திற்கு கடிதம் எழுதினார். இந்நிலையில், சு.வெங்கடேசன் எம்.பி.,யின் கோரிக்கையை ஏற்று இந்தியப் பட்டய கணக்காளர் கழகம் பொங்கல் தினத்தன்று நடை பெற இருந்த சிஏ தேர்வை வேறு தேதிக்கு மாற்றம் செய்துள்ளது. இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள சு.வெங்கடேசன் எம்.பி., “பொங்கல் அன்று அறிவிக்கப்பட்டிருந்த சி.ஏ. (இண்டர்) தேர்வுகள் தள்ளி வைக்கப் பட்டுள்ளது. இது சம்பந்தமாக இந்தியப் பட்டயக் கணக்காளர் கழ கத்திற்கு டிச., 18 அன்று கடிதம் எழுதி யிருந்தேன். இந்நிலையில், ஜனவரி 15 அறிவிக்கப்பட்டிருந்த தேர்வு ஜன., 19 அன்று மாற்றப்பட்டுள்ளது. மாற்றியதற்கு வேறு காரணத்தை சொல்லியுள்ளதன் மூலம் அவர்கள் ஆறுதல் அடைந்து கொள்ளட்டும்; நன்றி!” என அவர் கூறியுள்ளார்.