tamilnadu

பழங்குடியின பகுதிகளில் சுகாதாரச் சீர்கேடு; புள்ளிவிவரப் பட்டியலால் குறையுமா தட்டுப்பாடு?

பழங்குடியின பகுதிகளில் சுகாதாரச் சீர்கேடு; புள்ளிவிவரப் பட்டியலால் குறையுமா தட்டுப்பாடு? 

இந்தியாவின் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில்  நிலவும் சுகாதார மையங்களின் தட்டுப் பாடு மற்றும் போதிய உள்கட்ட மைப்பு வசதிகள் இல்லாதது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பி னர் ஆர்.சச்சிதானந்தம் மக்களவை யில் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் பதிலளித்துள்ளது.  தட்டுப்பாட்டை மறைக்கும் தரவு இணைப்புகள்  பழங்குடியின பகுதிகளில் ஆரம்ப சுகாதார மையங்கள் (PHCs), சமூக சுகாதார மையங்கள் (CHCs) மற்றும் துணை மையங்களின் பற்றாக்குறை குறித்த விரிவான விவரங்களை எம்பி கேட்டிருந்தார். இதற்கு நேரடியாகப் பதிலளிக்காமல், ‘இந்தியாவின் சுகா தார இயக்கவியல்’ (HDI 2022-23) என்ற இணையதள இணைப்பைப் பார்க்கு மாறு மத்திய இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் பதிலளித்துள் ளார்.  50 சதவீதத்திற்கும் அதிகமான பழங்குடியின மக்கள் வசிக்கும் மாவட்டங்களில் சுகாதார வசதிகள் போதுமான அளவில் இல்லை என்ப தைச் சுட்டிக்காட்டிய சச்சிதானந்தம் எம்.பி., அத்தகைய மாவட்டங்களின் எண்ணிக்கையைத் தெளிவுபடுத்து மாறு கோரினார்.  ஆனால் அரசு இதற் கான நேரடிப் புள்ளிவிவரங்களைத் தராமல், வழக்கமான திட்டங்களின் பட்டியலை முன்வைத்துள்ளது.  அரசின் வாதமும் தளர்வுகளும்  தேசிய சுகாதார இயக்கத்தின் (NHM) கீழ் பழங்குடியினப் பகுதி களுக்குச் சில தளர்வுகள் வழங்கப் பட்டுள்ளதாக அரசு கீழ்க்கண்டவாறு கூறுகிறது:  மக்கள்தொகை விதிமுறை: சம வெளிப் பகுதிகளில் உள்ளதை விடக் குறைவாக, 20,000 பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார மையம் (PHC) மற்றும் 3,000 பேருக்கு ஒரு துணை மையம் என்ற அளவில் விதிகள் தளர்த்தப் பட்டுள்ளன.  நடமாடும் மருத்துவ அலகுகள்: சாதாரண மாவட்டங்களில் 2 ஆக இருக்கும் நடமாடும் மருத்துவ அல குகள் (MMUs), பழங்குடியின மாவட்டங் களில் 4 ஆகவும், குறிப்பிட்ட பழங்குடி யின பகுதிகளில் (PVTG) 10 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.  கட்டமைப்பு: ஆயுஷ்மான் பாரத் (PM-ABHIM) திட்டத்தின் கீழ்  பழங்குடியின மாவட்டங்களில் 168  மாவட்ட பொதுச் சுகாதார ஆய்வகங் களும், 110 அவசர சிகிச்சைப் பிரிவு தொகுதிகளும் அனுமதிக்கப்பட்டுள் ளன.  இவ்வாறு அமைச்சர் பதிலில் கூறப்பட்டுள்ளது. ஆவணங்களில் இருக்கும் வசதிகள் களத்தில் உள்ளதா?  நவம்பர் 30, 2025 நிலவரப்படி, சுமார்  30,707 ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் (AAMs) மையங்கள் பழங்குடியின மாவட்டங்களில் செயல்படுவதாக அரசு தரப்பு தெரிவிக்கிறது. இருப்பி னும், இந்த மையங்களில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளனவா என்பது குறித்து அமைச்சர் அளித்த பதிலில் தெளிவு இல்லை என சச்சிதானந்தம் சுட்டிக்காட்டியுள்ளார்.  ஒன்றிய அரசின் மெத்தனம் மத்திய அரசின் பதில்கள் குறித்து விமர்சித்துள்ள ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., “அரசு நிதி ஒதுக்குவதாகவும், விதிகளைத் தளர்த்துவதாகவும் காகிதத்தில் கூறுகிறது. ஆனால், இன்றும் பல மலைக்கிராமங்களில் முறையான சாலை வசதிகள் இல்லா ததால், நோயாளிளைத் தொட்டில் கட்டித் தூக்கிச் செல்லும் அவலம் தொடர்கிறது. அமைச்சகம் வழங்கி யுள்ள இணையதள இணைப்புகள் வெறும் எண்ணிக்கையை மட்டுமே காட்டுகின்றன; மக்களின் துயரத் தையோ அல்லது காலிப் பணியிடங் களையோ அல்ல. பழங்குடியின மாவட்டங்களில் 50% மக்கள் தொகை கொண்ட இடங்களைக் கூடக்  கண்ட றிந்து போதிய உள்கட்டமைப்பை வழங்கத் தவறியது அரசின்  மெத்தனப் போக்கையே காட்டுகிறது” எனத் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.