ஊட்டச்சத்து குறைபாட்டில் தவிக்கும் ‘குஜராத் மாடல்’ 3.21 லட்சம் குழந்தைகள், 78% பழங்குடி பெண்களுக்கு பாதிப்பு
காந்திநகர் மோடி 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் குஜ ராத் மாடல் என்ற பெயரில் பல் வேறு கட்டுக்கதைகளை அள்ளி விட்டு பிரதமர் பதவியில் அமர்ந் தார். ஆனால் அவர் பிரதமர் ஆன பின்பு தான் “குஜராத் மாடல்” என் பது ஒன்றுக்கும் உதவாத “திவால் நிலை மாடல்” என்று தெரியவந்தது. இந்நிலையில், தற்போது குஜ ராத் மாடல் தீவிர ஊட்டச்சத்து குறை பாட்டில் சிக்கி தவித்து வருவது அம்பலமாகியுள்ளது. குஜராத் பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சமீபத்திய தரவுகள், அம்மாநிலத்தில் குழந் தைகளும் தாய்மார்களும் கடுமை யான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அதில், 56 வயதிற்குட்பட்ட 3.21 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள னர். இதனால் குழந்தைகளின் உடல் மற்றும் அறிவுசார் வளர்ச்சி கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதே போல பழங்குடியினப் பகுதிகளில் 15 முதல் 49 வயதுடைய பெண்களில் 78% பேர் ரத்தசோகை யினால் (Anaemia) பாதிக்கப்பட் டுள்ளனர் என தகவல் வெளியாகி யுள்ளன. பொய் பிரச்சாரங்கள் ஜனனி சுரக்ஷா யோஜனா, கஸ் தூர்பா போஷன், பிரதான் மந்திரி மாத்ரு சுரக்ஷா அபியான், பிரதான் மந்திரி மாத்ருவந்தனா யோஜனா மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத குஜராத் அபியான் உள் ளிட்ட டஜன் கணக்கான (12க்கும் மேற்ப்பட்ட திட்டங்கள்) ஊட்டச் சத்து மற்றும் தாய்வழி நலத் திட் டங்களை குஜராத் பாஜக செயல் படுத்துக்கிறது. இந்த திட்டங்க ளுக்கு கோடிக் கணக்கில் பணம் ஒதுக்கப்படுகிறது. ஆனால் திட்டங் கள் காகிதத்தில் மட்டுமே உள்ளன. குறிப்பாக கிராமங்கள், பழங்குடிப் பகுதிகளில் ஊட்டசத்துப் பொருட் கள் விநியோகம் புறக்கணிக்கப்பட் டுள்ளன. இதனால் தான் ஊட்டச் சத்து குறைபாட்டில் குஜராத் மாநி லம் தவிக்கிறது. ஊழல் திட்டங்களுக்கு தொடர்ச்சி யான நிதியுதவி இருந்த போதி லும் ஊட்டச்சத்து குறைபாடு ஏன் அதிகமாக உள்ளன? என்று எதிர்க் கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. சில அதிகாரிகளும் இடைத்தர கர்களும் நலத்திட்டங்களை லாபக் குழாய்களாக மாற்றியுள்ளனர். இத னால் பழங்குடியினப் பெண்கள் மற் றும் குழந்தைகள் சலுகைகளிலி ருந்து விலக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான திட்டங்கள் பய னாளிகளைச் சென்றடைவதற்குப் பதிலாக மோசடிகளாக மாறி வரு கிறது என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் தோஷி குற் றம்சாட்டியுள்ளார்.
