states

img

2 விநாடிகளில் 700 கி.மீ. வேகம் : புதிய உலக சாதனை படைத்த சீனா

2 விநாடிகளில் 700 கி.மீ. வேகம் : புதிய உலக சாதனை படைத்த சீனா

சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ‘மேக்னெடிக் லெவிடேஷன்’ எனப்படும் காந்தப்புல தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ரயிலை இயக்கி சோதனை நடத்தினர். இதில் வெறும் 2 விநாடிகளில் அந்த ரயில் மணிக்கு 700 கி.மீ. வேகத்தை எட்டி உலக சாதனை படைத்தது. தண்டவாளங்களைத் தொடாமல், அதன் மேலே காந்த விசையில் செல்லக்கூடிய இந்த ரயில், உலகின் அதிக வேகம் கொண்ட ரயில் என்ற பெருமையை பெற்றது.