குல்தீப் செங்கார் பாலியல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதி யில் கடந்த 2017ஆம் ஆண்டு சிறுமியைக் கடத்தி பாலியல் வன் கொடுமை செய்த பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் கைது செய்யப்பட்டார். மேலும் பாதிக்கப் பட்ட பெண் (பாதிக்கப்பட்ட வயதில் அவர் சிறுமி) உள்பட உறவினர்கள் காரில் சென்றபோது லாரி மோதி 2 பேர் பலி யானார்கள். பாதிக்கப்பட்ட சிறுமி படு காயங்களுடன் உயிர் பிழைத்தார். இச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலை யை ஏற்படுத்தி இருந்த நிலையில், இதி லும் குல்தீப் சிங் செங்காருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் குல்தீப் சிங் செங்காருக்கு தில்லி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து குல்தீப் சிங் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம் டிச., 23 அன்று அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்ததோடு, ஜாமீனும் வழங்கி யும் உத்தரவிட்டது. இதற்கு எதிராக தில்லி உயர்நீதிமன்றம் முன் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட மகளிர் அமைப்புகள், பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே தில்லி உயர்நீதி மன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய் துள்ளது. இதற்காக சிறப்பு மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில்,”குல்தீப் சிங் செங்காரின் ஆயுள் தண்டனையை நிறுத்திய தில்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்” என முறையிட்டுள்ளது. இந்நிலையில், சிபிஐயின் மேல் முறை யீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் திங்க ளன்று விசாரணை வரவுள்ளது. உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த மனுவை விசாரிக்க உள்ளது.
