உணவகத் துறையிலும் இறங்கும் அதானி
மோடி பிரதமர் ஆன பின்பு பல்வேறு சலுகை, முறை கேடுகளுடன் உலகின் முக்கிய பணக்காரர்களில் ஒருவராக வளர்ந்துள்ள அதானி துறைமுகம், ரியல் எஸ்டேட், நிலக்கரி சுரங்கம், மின்சா ரம், சிமெண்ட் உள்ளிட்ட முக்கிய துறை களில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், உணவகத் துறையி லும் அதானி காலடி வைக்கிறார். உண வகங்களை புதிதாக கட்டுகிறாரா? அல் லது தற்போது இருக்கும் பிற நிறுவன உணவகங்களை வளைக்கப் போகி றாரா? என்று தெரியவில்லை. ஆனால் நாடு முழுவதும் 60க்கும் மேற்பட்ட 5 ஸ்டார் உணவகங்களை கட்ட மற்றும் வாங்க அதானி திட்டமிட்டுள்ளார். இந்த உணவகங்கள் பெரும்பாலும் அதானி நிர்வகிக்கும் விமான நிலையங்களுக்கு (8) பலன் அளிக்கும் வகையில் மதிப்பு கூட்டு ரியல் எஸ்டேட் திட்டங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
