நவ பாசிசம் ஒழியட்டும்; இந்திய தேசம் சிவக்கட்டும்!
புதுக்கோட்டையில் டிசம்பர் 2 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு சார்பில் நடைபெற்ற
சிறப்புக் கருத்தரங்கில் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி ஆற்றிய கருத்துரையின் சாராம்சம்:
இன்றைய உலகின் பல பகுதிகளில், நவீன பாசிசம் ஒரு பெரும் அச்சுறுத்தலாக எழுந்து கொண்டிருக்கிறது. இந்தியாவிலும், பாஜக தலைமையிலான ஆட்சி, கொடூரமான நவீன பாசிசத்தின் கூறுகளைக் கொண்ட ஆட்சியாக, தீவிர எதேச்சதிகாரப் பாதையில் செல்கிறது; இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22ஆவது அகில இந்திய மாநாடு துல்லியமாக வரையறை செய்தது.
இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் எழுந்த ஓர் அரசியல் சித்தாந்தமே பாசிசம். ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது இனம் அல்லது மதத்தைச் சேர்ந்த மக்களை மட்டுமே அங்கீகரித்து, அவர்களே உயர்ந்த வர்கள், மற்ற அனைவரும் அவர்களுக்கு கீழானவர் கள் அல்லது அடிமைகள் என்ற மோசமான பார்வை யுடன் ஒட்டுமொத்த சமூகத்தையும் தனது அதிகா ரத்தின் கீழ் கொண்டு வருகிற எதேச்சதிகார போக்குத் தான் பாசிசத்தின் அடிப்படை. இது ஏகாதிபத்தி யத்தை நோக்கிய முதலாளித்துவத்தின் லாபவெறி கொண்ட வளர்ச்சிப் போக்கில் உருவான ஒரு கட்டம். இது, முதலாளித்துவமே உருவாக்கிய ஜனநாயகம், தாராளவாத ஜனநாயகம் போன்ற சிந்தனைகளுக்கு நேர்எதிரானது.
இது தனது குடிமக்களில் ஒரு பகுதி யினரையே இரண்டாம் தர மக்களாக வகைப்படுத் தும், அவர்களை கொடுமைப்படுத்தும். ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சியில் நடந்தது இதுதான். ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் கால கட்டத்தில் எழுந்த இத்தகைய பாசிச சித்தாந்தத்தி ற்கு எதிராக ஆசியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பகுதி களில், இடதுசாரி, முற்போக்கு மற்றும் ஜனநாயக இயக்கங்கள் தீவிரமாக எழுந்தன. தமிழ்நாட்டில் எழுந்த திராவிட இயக்கமும் அத்தகைய ஒன்றே. ஒற்றுமைகளும் வேறுபாடுகளும் 1940களில் எழுந்த இந்த பாசிசத்திற்கும், தற்போது உலகின் பல பகுதிகளில் எழுந்துள்ள நவீன பாசிச சித்தாந்தத்திற்கும் இடையில் சில ஒற்றுமை கள் உள்ளன; சில வேறுபாடுகளும் உள்ளன.
ஜெர்ம னியில் ஹிட்லரும், இத்தாலியில் முசோலினியும் பாசிசத்தின் கொடிய உதாரணங்களாக இருந்தனர். ஒரு குறிப்பிட்ட சமூக மக்களை உயர்ந்தவர்களாக முன்னிறுத்தி மற்ற அனைவரையும் கொடூரமாக தாக்கினர். ஹிட்லர் லட்சக்கணக்கான யூதர்களை கொன்று குவித்த வரலாறு இந்த உலகின் ஓர் இருண்ட வரலாறு. இதில் ஒரு துயரகரமான முரண்பாடு என்னவென்றால், அன்றைக்கு பாசிசத்தின் கொடிய தாக்குதலுக்குள்ளான யூதர்களுக்காக உரு வாக்கப்பட்ட இஸ்ரேல், இன்று மற்றொரு சமூக மக்களான பாலஸ்தீனர்களை கொன்று குவிக்கிறது; அவர்களை இரண்டாம்தர குடிமக்களாக வகைப் படுத்தி முற்றாக அழித்தொழிக்க முனைகிறது. ஹிட்லர், 1935 செப்டம்பர் 15 அன்று ஜெர்மனியில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தார்.
அதனடிப்படையில்தான் யூத இன மக்களை வேட்டையாடினார். அதை இன்றைக்கு நவீன பாசிசப் போக்கில் செல்லும் மோடி அரசின் செயலுடன் ஒப்பிட லாம். மோடி அரசு சமீபத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து, சிறுபான்மை மக்களை, குறிப்பாக இஸ்லாமிய மக்களை இரண்டாம் தர குடிமக்களாக வேட்டையாட முயற்சி செய்தது. அதேபோல இன்றைக்கு ஹங்கேரி, இத்தாலி, அர்ஜெண்டினா போன்ற நாடுகளில் ஆட்சியதிகா ரத்திற்கு வந்துள்ள நவீன பாசிச அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், வெளிநாடுகளிலிருந்து குடியேறிய மக்களை குறிவைத்து கொடிய தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். நாடாளுமன்றம் இருக்கும்; உயிர் இருக்காது இதுபோன்ற ஒற்றுமைகள் ஒருபுறமிருந்தாலும், அன்றைய ஹிட்லர், முசோலினி போன்ற பாசிச ஆட்சியாளர்கள் தேர்தல் நடைமுறையை முற்றாக ஒழித்துக்கட்டியது போல் இன்றைய நவீன பாசிஸ்ட்டு கள் தேர்தல் முறையை முற்றாக ஒழிக்க முற்பட வில்லை; மாறாக, ஜனநாயகத்தின் உயிரைப் பறிக்க முயற்சிக்கிறார்கள்; நாடாளுமன்றத்தின் குரலை ஒடுக்கி முடக்க முயற்சிக்கிறார்கள். எதிர்க்கட்சிக ளின் குரலே ஒலிக்காதவாறு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களை முழுமையாக தங்கள் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வர தீவிரமாக திட்டமிடு கின்றனர்.
மோடி அரசின் குணம் இந்தியாவில் மோடி தலைமையிலான அரசு மிகத் தெளிவாக இந்தப் பாதையில் செல்கிறது. பாஜக என்பது மற்ற அரசியல் கட்சிகளைப் போன்றதல்ல, அது பாசிச சித்தாந்தத்தைக் கொண்ட ஆர்எஸ்எஸ் அமைப்பால் இயக்கப்படுகிற கட்சி. இதை துல்லிய மாக ஆய்வு செய்துதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை மாநாடு இந்தியாவில் மோடி தலைமை யிலான அரசு, நவீன பாசிசப் போக்குகளைக் கொண்ட அரசாக உள்ளது என்று வரையறை செய்தது. பழைய பாசிசத்திற்கும், நவீன பாசிசத்திற்கும் இடையில் உள்ள மற்றொரு மிகப் பெரிய ஒற்றுமை, இருவருமே அந்தந்த காலகட்டத்தில் மிகப் பெரிய மகா கோடீஸ்வர்கள், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் உறுதியான கூட்டணி வைத்துக் கொண்டதுதான். பாசிஸ்ட்டுகளும் கார்ப்ப ரேட் பெரும் முதலாளிகளும் ஒருவருக்கொருவர் நலன்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் கைகோர்த்துக் கொண்டு பெரும் தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். பொய்களின் தொழிற்சாலை பழைய பாசிசத்திற்கும், நவீன பாசிசத்திற்கும் இடையில் உள்ள மற்றொரு ஒற்றுமை- ஆனால் அதே நேரத்தில் பழைய பாசிஸ்ட்டுகளை இந்த விசயத்தில் நவீன பாசிஸ்ட்டுகள் கிட்டத்தட்ட ஓரம்கட்டி பெரும் பாய்ச்சலில் செல்கிறார்கள் என்று சொன்னால் அது, இடைவிடாது பொய்களை கட்ட விழ்த்துவிடுவதில்தான். ஹிட்லர் காலத்தில் அவரது கொள்கைப் பரப்பு அமைச்சராக இருந்தவர் ஜோசப் கோயபல்ஸ். ஒரு பொய்யை நூறு முறை திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடும் என்பதுதான் கோயபல்ஸின் பிரபலமான வார்த்தை கள். மீண்டும் மீண்டும் அவர்கள் பொய்களை சொன்னவண்ணம் இருந்தார்கள்.
ஆனால் இன்றை க்கு மோடி, அமித் ஷா, மோகன் பகவத் போன்றவர்கள் ஒரு பொய்யை நூறு முறை சொல்லவில்லை; மாறாக, ஒவ்வொரு நாளும் நூறு பொய்களை கட்ட விழ்த்துவிடுகிறார்கள்; பொய்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாகவே ஆர்எஸ்எஸ்- பாஜக கூட்டம் இருக்கிறது. மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக தேர்தல் பிரச்சாரக் களத்தில் எண்ணற்ற பொய்களை கட்டவிழ்த்துவிட்டார் மோடி. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவ தாகக் கூறினார். ஆனால் உண்மையில் அவர் ஆட்சி யில் விவசாயிகளின் தற்கொலைதான் இரட்டிப்பாகி யுள்ளது. கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகச் சொன்னார். பொதுத்துறை நிறுவனங்களை மேம்படுத்துவதாகச் சொன்னார். இப்படி அவர்களது பொய்களை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். ஒரு வேளை இன்றைக்கு மீண்டும் கோயபல்ஸ் பிறந்து வந்து இதையெல்லாம் பார்த்தால், மோடியின் கால்களில் விழுந்து, பொய்களை கட்டவிழ்த்து விடுவதில் எங்களுக்கெல்லாம் வல்லவர் நீங்கள் தான் குருஜீ என்று சரணடைந்துவிடுவார். பெரும் சூறையாடல் பழைய பாசிசத்திற்கும், நவீன பாசிசத்திற்கும் உள்ள மற்றொரு பொதுவான அம்சம் ஆட்சியா ளர்களும், மகா கோடீஸ்வரர்களும் இணைந்து நாட்டின் செல்வங்களை, மக்களின் சொத்துக்களை அப்பட்டமாக சூறையாடுவது ஆகும்.
இன்று மோடி ஆட்சி அதானி, அம்பானி உள்ளிட்ட பெரும் கார்ப்ப ரேட் முதலாளிகளின் கைகளில் நாட்டின் செல்வங்க ளை குவிக்கிறது. அதற்கு சமீபத்திய உதாரணம், டாடா குழுமத்திற்கு சொந்தமான இரண்டு நிறுவ னத்திற்கு சமீபத்தில் ரூ.44,023 கோடி அளவிற்கு மக்கள் பணத்திலிருந்து மானியம் என்ற பெயரில் வாரி கொடுத்திருக்கிறது. இதற்கு கைமாறாக, பாரதிய ஜனதா கட்சிக்கு டாடா குழுமம் ரூ.758 கோடி அளவிற்கு நன்கொடை வழங்கியிருக்கிறது. இதுபோன்ற ஏராள மான உதாரணங்களை சொல்லலாம். எனவேதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது மாநாடு, இத்தகைய நவீன பாசிஸ்ட்டுகளை தடுத்து நிறுத்தவும், அதிகாரத்திலிருந்து வீழ்த்தவும் அனைத்து மதச்சார்பற்ற, முற்போக்கு, ஜனநாயக சக்திகளை ஓரணியில் திரட்டுவது அவசியம் என்று அழைப்பு விடுத்தது. தமிழ்நாடும், கேரளாவும் அந்தப் பாதையில் நாட்டிற்கே வழி காட்டுகின்றன.
தமிழ் நாட்டில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, நவீன பாசிச ஆட்சியா ளர்களை எதிர்த்து வலுவான முறையில் களத்தில் நிற்கிறது. கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு, தீவிர வறுமை ஒழிப்பில் சாதனை படைத்துள்ளது. மதவெறியை எதிர்ப்பதிலும், மாற்றுக் கொள்கையை அமலாக்குவதிலும் உதாரணமாக விளங்கும் இந்தப் பாதையே நவீன பாசிசத்தை வீழ்த்தும் செங்கொடியின் பாதை. தமிழில் சுருக்கம் : எஸ்.பி.ஆர்
