tamilnadu

img

அதிகரிக்கும் காற்று மாசு; அக்கறையற்ற ஒன்றிய அரசு முகக்கவசம் அணிந்து எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!

அதிகரிக்கும் காற்று மாசு; அக்கறையற்ற ஒன்றிய அரசு முகக்கவசம் அணிந்து எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!

புதுதில்லி, டிச. 4 - தில்லி காற்று மாசுபாட்டை தடுப்பத ற்கு ஒன்றிய பாஜக அரசு உரிய நட வடிக்கை எடுக்காததைக் கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில், ‘இந்தியா கூட்டணி’ எம்.பி.க்கள் முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலைநகர் புதுதில்​லி​யில் காற்று மாசுப் பிரச்​சனை அதிக அளவில் நிலவி  வரு​கிறது. இதனால் பொது​மக்​கள் சுவாசப் பிரச்​சனை உள்​ளிட்ட பல்​வேறு தொந்தரவுகளைச் சந்தித்து வரு கின்றனர். 2022 மற்றும் 2024ஆம் ஆண்டு களுக்கு இடையிலான வெறும் மூன்று வருட காலத்தில், தில்லியில் உள்ள  6 முக்கிய அரசு மருத்துவமனைகளில் மட்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட  கடுமையான சுவாச நோய்கள் பதிவாகி யுள்ளன. இந்த புள்ளிவிவரத்தை, ஒன்றிய அரசு தான் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தது. இந்​நிலை​யில், தில்​லி​யில் காற்று மாசுப் பிரச்​சனையைக் கட்​டுப்​படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளு​மன்​றத்​துக்கு முகக்​கவசத்​துடன் வந்​தனர். தில்லியில் நிலவும் காற்று மாசு  குறித்து, நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி னர். இதுதொடர்பாக சண்டிகர் மக்கள வை எம்.பி. மணீஷ் திவாரி, ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸூம் அளித்தார். அத்துடன் இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் முகக்கவசம் அணிந்தபடி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.